15th
February, 2013
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை
எனைத்தொன்றும்
வாய்மையின்
நல்ல பிற.
(குறள்
300: வாய்மை அதிகாரம்)
Transliteration:
yAmeyyAk kaNDavaRRuL illai enaithonRum
vAymaiyin nalla piRa
yAmeyyAk kaNDavaRRuL –
Among many things known to be true in life
illai enaithonRum – none
equal to this (truthfulness)
vAymaiyin nalla piRa –
nothing better than truthfulness
Interpreted directly,”There is none better than
truthfulness compared to all other good that we know as true also.
Parimelazhagar’s commentary is more meaningful for this verse than others and
seems insightful. There is nothing which
is placed higher than the truthfullness in any and all scripture sthat we read
to understand many true virtues. This is how Parimelazhagar interprets the
verse.
The usages of “meyyAk kaNDavaRRuL” implies all that
we consume through sensory organs; though we may be discerning in our
consumption and or deeds through them, there is none better than truthfulness
in words as well as deeds; its purity is better than everything else.
“None better compared to standing of truthfulness
Among many things we
understand as goodness”
தமிழிலே:
யாமெய்யாக் கண்டவற்றுள் - யாம் உண்மையென்று
அறிந்த பலவற்றுள்
இல்லை எனைத்தொன்றும் - எவ்விதத்தாலும் இதற்கு (வாய்மை) இணையில்லை
வாய்மையின் நல்ல பிற - வாய்மையைவிட சிறந்த பிறபொருள்
இல்லை.
நேரடியாகப் பொருள்
கொண்டால், “உண்மையென்று நாம் அறியும் நல்லவவை பல இருப்பினும், வாய்மையை விட சிறந்தவை
ஒன்றுமே இல்லை” என்று இக்குறள் கூறுவதாகக் கொள்ளவேண்டும். பரிமேலழகர் இக்குறளுக்குச்
செய்திருக்கும் உரை மிகச் சரியாக உள்ளது. நாம் உண்மைப்பொருள் என்று பல நூல்களிலும்,
படித்து அறிந்த பலவற்றுள்ளும், வாய்மையை விட சிறந்ததாக வேறு எந்த அறமுமே கூறப்படவில்லை,
என்பதே சரியான புரிதல்.
மெய்யாக் கண்டவற்றுள்
என்பது மெய்ப்புலன்களாம் கண்ணால் கண்டதும், காதால் கேட்பதும், நாவால் சுவைப்பதும்,
புலன்களால் உணர்வதும், மூக்கால் நுகர்வதும் ஆகிய பல அற உண்மைகள் என்று கொள்ளலாம். இவற்றால்
நல்லவற்றையே கொண்டாலும், வாய்மை என்பது மனதில் மட்டுமல்லாது, சொற்களாலும், செயல்களாலும்
உண்மையைக் கடைபிடித்தல். அதன் தூய்மையே மற்றவற்றைவிட சிறந்தது.
இன்றைய குறள்:
வாய்மையினும் நல்லதொன்றை நாமுண்மை என்றறிந்து
ஆய்ந்தவற்றுள் காண்ப திலை
vAymaiyinum nalladhonRai nAmuNmai enRaRindhu
AyndhavaRRuL kANba dhilai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam