14th
February, 2013
எல்லா விளக்கும் விளக்கல்ல
சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
(குறள்
299: வாய்மை அதிகாரம்)
Transliteration:
ellA viLakkum viLakkalla chAndROrkkup
poyyA viLakkE viLakku
ellA viLakkum – The physical sources that give external light like
fire, sun or subtle and invisible forms of light of knowledge, education
viLakkalla – are not truly illuminating
chAndROrkkup – knowledgeable and scholarly
(ascetcis)
poyyA viLakkE – the light devoid of falsity
(truthfulness)
viLakku – true illuminating source of
light
All external sources
of light that quell physical darkness such as sun or fire, and the darkness of
ignorance such as the knowledge gained and geared towards worldly life are not
true lamps of illumination. For people in the pursuit of higher knowledge, being
ascetics, the true knowledge of truthfuleness is the real lamp of illumination.
Since vaLLuvar
has said, “all lamps” he has made it all inclusive to external lighting sources
as well as the light of knowlege to live a wealthy life of comfort . The soul
illuminating lamp is in not having falsity or stead a life of truthfulness,
which is not external or physical in nature. Whatever knowledge that keeps a
person, especially penitents in absolute truthfulness is truly the source of
illumination.
“None other than the lamp of
truthfulness
Can truly be a lamp that
is so illuminous”
தமிழிலே:
எல்லா விளக்கும் - புற ஒளியினைக் தரக்கூடிய விளக்குகள், அவை தீ, சூரியன்
போன்ற பௌதீகங்களாக இருந்தாலும், அறிவு ஒளியினைத்தரக்கூடிய கல்வி கேள்வி போன்றவையும்
விளக்கல்ல - இவற்றையெல்லாம் வெளிச்சத்தை தரும் விளக்கென்று
ஆகா?
சான்றோர்க்குப் - அறிவில் சிறந்த ஞானியருக்கு
பொய்யா விளக்கே - வாய்மையென்னும் பொய்யாமையாகிய மெய்யொளியே
விளக்கு - ஒளியைத் தரும் விளக்கு.
புற இருட்டினைப் போக்கக்கூடிய
சூரியனும் தீயும், அறியாமை இருட்டை நீக்கக்கூடிய
கல்வியும் உண்மையிலே விளக்கங்களாகக் கருதப்படமாட்டா. அறிவில் சிறந்த ஞானியர்க்கும்,
துறவற நிலையில் இருப்பவர்க்கும், பொய்யாமையென்னும் உறுதியிலே இருப்பதே அதாவது வாய்மையென்னும்
ஒளியைத் தரும் அகவொளி விளக்கே உண்மையான விளக்காகும்.
எல்லா விளக்கும் என்று
சொன்னதால், புற வெளிச்சத்தைத்தரும் இயற்கையாயும், செயற்கையாயும் உள்ள பௌதீக ஒளிமூலங்களை
குறிப்பதாகக் கொள்ளுவர். இது, வாழ்க்கை நடத்துதற்கும், வசதிகளுக்காகவும் தேவையான கல்வியறிவும்
புறவொளிதரும் வகையின. அகவொளியைத் தருவதும் ஞானத்தைத் தருவதுமான மெய்யறிவு எதுவோ, எவ்வறிவு
ஒருவரை எக்காரணம் கொண்டும் பொய்யாமை என்னும் வாய்மை நிலையில் நிறுத்துமோ, அதுவே உண்மையான
வெளிச்சத்தைத் தரும் ஒளிவிளக்காம்.
நான்மணிக்கடிகை இரண்டுபாடல்களில் பொய்யைப்பற்றி பாடுகிறது. “ஒருவனைப் பொய் சிதைக்கும்,
பொன் போலும் மேனியை” என்றும், “புகழ்செய்யும் பொய்யா விளக்கு” என்றும்
சொல்வதில் பொய் ஒருவரது உருவை அழிக்கும் என்றும் பொய்யாமையோ புகழைத்தரும் என்றும் கூறுகிறார். சுந்தரரும் தம் தேவாரத்தில், “ பொய்யா
நாவதனாற் புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய்யே நின்றெரியும் விளக்கேயொத்த தேவர்பிரான்”
என்பார்.
இன்றைய குறள்:
புறவிருள் போக்கும் விளக்கினும் வாய்மை
அறச்சான்றோர் போற்றும் விளக்கு
puRaviruL pOkkum viLakkinum vAymai
aRacchAnROr
pORRum viLakku
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam