13th
February, 2013
புறந்தூய்மை
நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
(குறள்
298: வாய்மை அதிகாரம்)
Transliteration:
puRanthUymai nIrAn amaiyum aganthUymai
vAymaiyAl kANap paDum
puRanthUymai – cleanliness of
the body
nIrAn –
by water
amaiyum - bestowed
aganthUymai – the cleanliness
of the heart/mind/inner self
vAymaiyAl – by being
truthful
kANappaDum – is seen.
A simple thought is expressed in this verse. Just
like water cleanses a body, speaking truth makes the soul of a body clean. This
verse does not offer much scope to expand and give a detailed commentary. Penitents need both forms of cleanliness and
hence both forms of cleanliness have been mentioned here citing one as an example
of the other.
“As the water cleanses the body external
Truthfulness cleanses the
soul internal”
தமிழிலே:
புறந்தூய்மை - உடல் தூய்மையயாவது
நீரான் - குளிக்கின்ற நீரால்
அமையும் - பெறப்படும்
அகந்தூய்மை - உள்ளத் தூய்மையாவது
வாய்மையால் - வாய்மையால்
காணப்படும் - பெறப்படும்
மிகவும் எளிய கருத்தைச்
சொல்லக்கூடிய குறள். உடலின் தூய்மை நீராலே அமைவதுபோல, ஒருவரின் உள்ளத்தூய்மை அவரது
வாய்மையால்தான் காணப்படும். விரித்துச்சொல்ல வாய்ப்புத் தராத குறள். துறவறத்தில் உள்ளோர்க்கு
இரண்டுவித தூய்மைகளும் வேண்டுமென்பதால் உடல் தூய்மை, அதற்குக் காரணமான நீராடல் இவற்றைக்கூறி,
உள்ளத்தூய்மை அதற்குக் காரணமான வாய்மை இவற்றையும் கூறியுள்ளார், அதைப்போல இது என்னும்விதமாக.
இன்றைய குறள்:
நீரால் உடல்தூய்மை ஆவதுபோல் வாய்மையாம்
சீரால் உளத்தூய்மை யாம்
nIrAl udalthUymai aVadhupOl vAymaiyAm
sIrAl uLaththUmai yAm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam