பிப்ரவரி 12, 2013

குறளின் குரல் - 306


12th February, 2013

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

                       (குறள் 297:  வாய்மை அதிகாரம்)

Transliteration:
poyyAmai poyyAmai ARRin aRampiRa
seyyAmai seyyAmai nanRu

poyyAmai – Being truthful without falisty
poyyAmai – without fail
ARRin – if practiced (when one practices)
aRampiRa – Even the other virtuous deeds (good)
seyyAmai – devoid of them (not doing the virtuous deeds)
seyyAmai – not doing (not doing of not doing)
nanRu - is good

Double negatives make a positive, rather forcefully, is the technique used here by vaLLuvar. In the last verse, he said being devoid of falisity will bring glory and praise, but not knowing falsity at all, will give all virtues. In this verse, one who practices being devoid of falsity with out fail, must also not do, not doing other virtuous deeds. But for the poetic beauty of how it is said, it could simply be confusing. But the double negative has the inherent insistence of doing other virtuous deeds.

This verse is certainly a continuation of the previous verse. vaLLuvar though says, a virtue is better than another in the context of what is being emphasized or highlighted, never says, because you do this good deed, you are exempted from other good deeds.  Except for Mu.Varadharajanar (more of a recent commentator, a respected one), others have not interpreted this correctly and have done as they have (mis) understood it.

Since a person steads by truthfulness, can he or she shun other virtuous deeds in life? vaLLuvar answers that question by, insisting that other virtues must also be done without fail too. The confusion comes from the double use of words poyyAmai and seyyAmai back to back. The word “seyyAmai” shows the deed and the action, naturally. The word “poyyAmai” does not lend itself so naturally, especially the second use. If he had used “poyyAdhu” for second word, it would have easily meant his intention. But, the poetic licence allows for this, is what one must conclude.

A person lives being devoid of falsity, without fail,
 Must not do, not doing other virtues in life’s trail”

தமிழிலே:
பொய்யாமை - பொய்யாமல் வாய்மையோடு இருத்தலை
பொய்யாமை - எப்போது பொய்க்காது
ஆற்றின் - செய்து வருகின்றவர்
அறம்பிற - மற்ற அறங்களையும்
செய்யாமை - செய்யாதிருத்தலைச்
செய்யாமை - செய்யாமலிருத்தலே
நன்று - நல்லதாம்

பொய்யாமை என்பது புகழையும் தருவதோடு, பொய் என்பதை அறியாமை எல்லாப் அறங்களையுமே தரும் என்று முந்தைய குறளில் சொன்ன வள்ளுவர், இக்குறளில் பொய்யாமையை பொய்யாது, அதாவது தவறாமல் கடைபிடித்து வந்தால், அதன் மேலும், மற்ற அறங்களையும் செய்யாதிருத்தலையும் செய்யாது, (இரண்டு எதிர்மறைகளைச் சொல்லி, செய்தலை வலியுறுத்தல்) அதாவது மற்ற அறங்களையும் செய்தொழுக வேண்டும்.

இக்குறள் சென்ற குறள் சொல்லும் கருத்தின் தொடர்ச்சியே என்று கொள்ளலாம். ஒன்றைவிட மற்றொன்று சிறந்தது என்று சொல்லுவாரே தவிர, ஒன்றைச் செய்வதினால் மற்றவற்றைச் செய்யவேண்டாம் என்று விலக்கு வள்ளுவர் அளிப்பதாகக் கொள்ளக்கூடாது. மு.வ.வைத்தவிர மற்ற உரையாசிரியர்கள் ஏறக்குறைய அவ்வாறே பொருள் செய்துள்ளனர்.

வாய்மைதான் ஒழுகுகிறோமே, என்று மற்ற அறங்களிலிருந்து விலகமுடியுமா? கட்டாயம் செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறார். செய்யாமை என்ற சொல் செய்யாதிருத்தல் என்று ஒரு பண்பையும், செய்யாதிருத்தல் என்று ஒரு வினையையும் இயல்பாகவே சொல்வது. பொய்யாமை என்ற சொல், அவ்வாறு இயல்பாக பண்பையும், வினையையும் ஒருங்கே குறிக்காததே இக்குழப்பத்திற்கான காரணமாக இருந்திருக்கவேண்டும். இரண்டாவது பொய்யாமை, ஆற்றின் என்ற சொல்லோடு சேருவது இயல்பாக இல்லை. பொய்யாது ஆற்றின் என்றிருந்தால் புரிந்துகொள்ளுமளவுக்கு இயல்பாக இருந்திருக்கும். ஆனால் கவிதையழகின் காரணம்பற்றியது என்று கொள்ளலாம்.

இன்றைய குறள்:
பொய்யாத வாய்மை நெறியோர் பிறவறங்கள்
பொய்க்காது செய்தலும் நன்று.

poyyAdha vAymai neRiyOr piRavaRangaL
poykkAdhu seydhalum nanRu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...