11th
February, 2013
பொய்யாமை அன்ன புகழில்லை
எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
(குறள்
296: வாய்மை அதிகாரம்)
Transliteration:
poyyAmai anna pugazhillai eyyAmai
ellA aRamum tharum
poyyAmai anna – Like
being truthful or devoid of falsehood
pugazhillai - there is none which brings praise
eyyAmai – not knowing (fasleshood
- this is even better)
ellA aRamum – all other
virtues
tharum – will accord
The word “eyyAmai” handled in this verse has
been interpretedby different commentators differently. Parimelazhagar says, “without
physical hardship” for this word.
Seems to stem from his imaginative spree. He seems to imply being devoid of falsehood,
will accord all virtues without any physical hardwork. If he had implied that
to be devoid of falsehood one must make en effort and that would give all
virtues without further physical hardwork, it may mean something. But that does
not seem to so. If he had implied, physical hardwork is inferior and “devoid
of falsehood” superior to get all virtues, the value of hardword is also
undermined, which probably is not the case.
“EyyAmai” is given the meaning, “not
attaining” (eydhal – means attaining a goal – incidentally the word “aim”,
a similar sounding word in English seems to have the same meaning of a goal to
reach) or “not knowing”. If these
were to be taken as the meaning, what is not attained or not known here? The
word “poiyaamai” means “devoid of falsehood”! So, the later word
is attached as a negation of the “falsehood”
part of the first word. So it means, not knowing falsehood will accord all the
virtues. This makes sense because,
though being devoid of falsehood brings praise, not knowing falsehood itself
will bring all virtues, which is weighed more here.
The commentary by others take it as “not knowing”
but the way they have fixed it to the meaning does not fit. They all seem to
mean, the persons devoid of falsehood will get all the virtues without their
own knowledge. It is very evident, this
verse has give quite a struggle to most commentators.
“None brings glory and praise as being devoid of
falsehood;
Not knowing falsity however, brings all virtues in this world”
பொய்யாமை அன்ன - பொய்யாது இருப்பதைப்போல் (வாய்மையோடு இருப்பதைப்போல்)
புகழில்லை - புகழாக இருப்பது எதுவுமில்லை
எய்யாமை - அதை அறியாது இருத்தல் (அதாவது பொய்யாமையை அறியாமலிருத்தல்)
எல்லா அறமும் - மற்ற எல்லா அறங்களையும்
தரும் - தரக்கூடியது.
இக்குறள் கையாண்டிருக்கிற “எய்யாமை” என்னும் சொல்லை பரிமேலழகர்,
“மெய்வருந்தாமல்” என்று பொருள் செய்திருக்கிறார். இது சற்றே கற்பனைவளம் கூட்டிய பொருளாகத்தான்
படுகிறது. தவிரவும் மெய்வருந்துதலை குறைவாக மதிப்பிட்டு, பொய்யாமையே எல்லா அறமும் தரும்
என்னும்படியாக பொருள் செய்திருக்கிறார். “எய்தல்” என்பது அடைதல் என்றாகும். எய்யாமை
என்பதற்கு அடையாமை அல்லது அறியாமை என்ற பொருளே அகராதிகள் சொல்லும் பொருள்.
எதை அடையாமை அல்லது அறியாமை இங்கு குறிக்கப்படுகிறது. பொய்யாமை
என்பதை பொய் சொல்லாமை என்றாகும். இதனால், பின்வரும் சொல் அறியாமை என்பது பொய் என்பதை
அறியாமை என்றாகும்.
மற்ற உரையாசிரியர்கள் “அறியாமை” என்றே கொண்டிருந்தாலும்,
அதைப் பொருத்தியிருக்கிற முறை பொருந்தவில்லை. பொய்மையோடு இல்லாதவருக்குப் புகழும்,
அவர் அறியாமலே மற்ற அறங்களும் வந்து சேரும் என்ற அளவிலே அவையெல்லாம் இருக்கின்றன.
நேரடிப்பொருளாகப் பார்ப்போமானால், பொய்யாமையைப்போல் புகழைத்
தருவது ஒன்றுமில்லை. அறியாமை, அதாவது, பொய்மை அறியாமலிருத்தலோ எல்லாவித அறங்களையுமே
தரும். பொய் சொல்லாமலிருப்பது என்பது புகழைத் தருவது உறுதியானாலும், பொய்யென்பதை அறியும்
அளவுக்கு மனதில் வேறுபாடுகள் இருப்பதையே முதற்பகுதி சுட்டுகிறது. அப்பொய் என்பதையே
அறியாத உள்ளங்கள் வாய்மையிலேயே வாழ்வதால், அவற்றுக்கு எல்லா அறங்களுமே கைக்கூடும்.
இன்றைய குறள்(கள்):
வாய்மையொத்த வண்புகழில் பொய்மை அறியாமை
தூய்மையறம் எல்லாந் தரும்
vAymaiyoththa vaNpugazhil poimai aRiyAmai
thUymaiyaRam ellAm tharum.
புகழிலைப் பொய்யாமைப் போலதறி யாமை
இகத்தறம் எல்லாந் தரும்
pugazhilaip poiyyAmaip pOladhaRi yAmai
igaththaRam ellAm tharum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam