10th
February, 2013
மனத்தொடு வாய்மை மொழியின்
தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
(குறள்
295: வாய்மை அதிகாரம்)
Transliteration:
manaththoDu vAymai mozhiyin thavaththoDu
thAnanjsei vArin thalai
manaththoDu – known to ones
own conscience (within his/her heart)
vAymai mozhiyin – if a
person speaks only truth always, they are (see with last word)
thavaththoDu – more than not
only penance, but
thAnanj seivArin – also
are charitable towards others
thalai - ahead of above
External deeds of penance and charity, both are done
for self-realization, elevation and not to have another birth or for an
eventual seat in heavenly abode. To be a stickeler for truth and not veer away
from speaking “it” is, better than both penance and charity. Hence it is said
in this verse speaker of truth is better than the person that does penance and
charity.
The story of Harischandra, the king of Ayodhya is
etched as an Indian ethos for centuries. Is there a better story anywhere in
the world to depict the power of truth than this? Even the Brahmarishi Viswamithra
was humbled before Harischandra’s conviction on power of truth. While it may be
questioned as to why truth is better than penance and charity, there may be an
explanation. Vedas and puraNas depict the Godhead as the embodiment of truth
–sathya! Since bothe penance and charity are due to his grace, truth is
undoubtedly greater than them.
“To be truth speaking with mind in complete concent
Is better than being a
charitable person or a penitent”
மனத்தொடு - தன்மனது ஒப்ப
வாய்மை மொழியின் - ஒருவர்
வாய்மையே பேசுவாராயின்
தவத்தொடு - தவம் மட்டுமல்லாது
தானஞ் செய்வாரின் - பிறருக்கு தானங்கள் செய்வாரையும் விட
தலை - சிறந்தவர்கள் (அவர்கள்)
புறமாகிய மெய்யினால் செய்யக்கூடியதாகிய தவம், தானம் இரண்டுமே ஒருவருடைய உள்முக
உயர்வுக்காகவும், மறுமை வேண்டாமைக்கருதியும், புண்ணியங்கருதியும் செய்யக்கூடிய செயல்கள்.
இவற்றைவிடவும் தன்னுடைய மனத்துக்கண் மாசிலானாகி வாய்மையை மனமொப்ப கடைபிடித்தலே சிறந்தது,
இதைக் கருதியே தவமும் தானமும் செய்வாரை விடவும் வாய்மையை மனமொப்பி கடைபிடிக்கிறவர்கள்
சிறந்தவர்கள்.
அயோத்தியின் அரசன் ஹரிச்சந்திரனின் கதையைவிட வாய்மையின் உயர்வைச் சொல்வது ஏதேனும்
உண்டா? பிரம்மரிஷியாகிய விஸ்வாமித்திரன் பெரிய தவவலிமை உடையவரானாலும், ஹரிச்சந்திரனின்
வாய்மையின் உறுதிக்குமுன்னர் தோல்வியடைந்து சிறுமையடைந்தது எல்லோரும் நன்றாக அறிந்த
கதைதானே. வேதமும் புராணங்களும் இறைவனையே வாய்மையின் உருவாகச் சொல்லுவதால், தானமும்
தவமும் கூட அவ்விறையருளாலே என்பதால், வாய்மை இவ்விரண்டையும் விட சிறந்தது என்றும் கொள்ளலாம்.
இன்றைய குறள்(கள்):
தவம்தானம் செய்தலின் மேலாம் மனதில்
அவமிலா வாய்மை மொழி
thavamthAnam seydhalin mElAm manadhil
avamilA vAimai mozhi
முதலில் எழுதப்பட்டது வாய்மையின் உயர்வைப்பற்றி. மூலக்குறளையொட்டி, வாய்மையாக வாழ்கிறவர்களைப்பற்றிய குறள் கீழே.
தவம்தானம் செய்வோரின் மேலோராம் வாய்மை
உவந்துளத்தால் பேசுகின்ற வர்
thavamthAm seyvOrin mElOrAm vAymai
uvandhuLaththAl pEsuginRa var
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam