9th
February, 2013
உள்ளத்தாற் பொய்யா தொழுகின்
உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
(குறள்
294: வாய்மை அதிகாரம்)
Transliteration:
uLLaththAR poyyA dhozhugin ulagaththAr
uLLaththu lEllAm uLan
uLLaththAR – in the hearts, (knowingly)
poyyAdh(u) ozhugin – if
someone lives without any falsehood
ulagaththAr – the people of
this world (especially the of high virtuous standing)
uLLaththuL ellAm – in all
their hearts
uLan – will stay for them to remember with
awe.
A person that does not live with falsehood in his
heart, will be remembered in the hearts of the people of this earth, especially
the people of virtuous, righteous standing. Not living in falsehood means,
truthful living and people of such high elevated, ethical living are highly
respected; hence they will be looked up and remembered with awe.
Since the verse specifically implies people of this
world, it implies the benefit of “truthfulness” in this birth.
“Person who does not live, in heart, with any falsehood
Will be remembered in the
hearts of people of the world”
உள்ளத்தாற் - தன்னுடைய உள்ளத்தால்
(உள்ளம் அறியும்படியாக)
பொய்யாது ஒழுகின் - பொய்ம்மையில்லாது வாழுமாயின்
உலகத்தார் - உலகின் உயர்ந்தோர்
உள்ளத்துள் எல்லாம் - உள்ளங்களிலே
உளன் - அவர் நினைக்கும்படியாக வாழ்வார்
ஒருவர் தன்னுடைய உள்ளமறிந்தளவில்
பொய்யாமைக் கொண்டு வாழ்வாராயின், அவர் உலகத்தோர், குறிப்பாக உயர்ந்தோர் உள்ளங்களில்,
அவர்கள் நினந்து போற்றுமபடி வாழ்வார். பொய்யாமை என்பதனால், எப்போது வாய்மையே பேசக்கூடியவராதலால்,
அவரே உயர்ந்தோருமாதலின், அவர் எல்லோராலும் நினைக்கப்படுவார், என்பதே இக்குறள் சொல்லும்
கருத்து.
இதனால், வாய்மையினால் பெறும் இம்மையின் பயன் கூறப்படுகிறது.
இன்றைய குறள்:
மனமறியப் பொய்யாது வாழ்வோர் உலகோர்
மனங்களில் வாழ்வரே நின்று
manamariyap poyyAdhu vAzhvOr ulagOr
manangaLil vAzhvarE ninRu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam