17th
February, 2013
செல்லா இடத்துச் சினந்தீது
செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.
(குறள்
302: வெகுளாமை அதிகாரம்)
Transliteration:
sellA iDaththuch sinamthIdhu selliDaththum
illadhanin thIya piRa
sellA iDaththuch –
Where there is no place or value (with more powerful)
sinam thIdhu – getting angry is
equivalent to self-inflicting ill
selliDaththum – Even
in places, where one can get by with anger
illadhanin – there is none
thIya piRa – worse ill than
that.
What he asked as a sarcastic question in his last
verse, in this verse, vaLLuvar gives a stern answer by implying, when anger in
shown with people more powerful, it will invariably end up being trouble for
self and bringing ill will and misery.
When anger is shown to somebody who is inferior in
stature or strength, we know that they cannot retaliate anyway. But it becomes a sin to bring ill and misery,
if not in the present birth, at least in future births. So this verse is said
in cautionary tone to emphasize the same thought as the previous one.
Once again we
have to remember that this chapter comes under the big section of “asceticism”
and hence must be construed to be specific to ascetics or penitents. Who are more powerful than renounced people?
They are certainly, because of their inward search for higher truth as well as
service to humanity, stronger and powerful, even compared to the rule and law.
At the same time, they are also bound by the rule as well law. Their anger
against these will only bring forth wrath for them Also, they are bound by the cosmic order of
Godliness. Hence this verse, though seems to be meant for commoners, more
applicable to the renounced souls.
“Anger towards powerful brings ill and misery, while when
It is directed towards
inferior strength, no worse ill, none”
தமிழில்:
செல்லா இடத்துச் - எங்கு மதிப்பு இல்லையோ (தன்னைவிட வலியார் இடத்து)
சினந் தீது - அங்கு
சினம் கொள்வது தனக்கே தீமை பயத்துவிடும் (வலியாரிடம் மோதுதல் கூடாது)
செல்லிடத்தும் - எங்கு தன்னுடைய சினம் செல்லுபடியாகுமோ (தன்னினும்
எளியர், மெலியரிடத்து)
இல்அதனின் - இல்லை அதைவிட
தீய பிற - மற்ற தீயது பயக்கும் செயல்
சென்ற குறளில் நையாண்டி
கேள்வியாகக் கேட்ட கேள்விக்கு, இக்குறளில் சற்று கடுமையாக, உறுதியாக தன்னுடைய சினம்
செல்லுபடியாகத இடங்களிலே, அது தனக்கே தீங்காய் முடிவதைச் சுட்டிக்காட்டுகிறார் வள்ளுவர்.
தம்மைவிட வலியாரிடமே தம்முடைய சினமானது செல்லாது ஒருவருக்கு. அவரிடம் சினந்தால், அது
திருப்பி தன்னையே தாக்கும் என்பது நிச்சயமானதால், அதைத் தீது என்று அறுதியிட்டுச் சொல்லுகிறார்.
செல்லிடத்துக்காத்தலே
சினத்தை காத்தல் என்பது. தம்மிலும் எளியாரின் மேல் ஒருவர் சினந்து அவருக்கு துன்பம்
தந்தால், அவர்களால் திரும்ப எதுவும் செய்யமுடியாமல் போனாலும், அதன் காரணமாகப் பற்றிய
பாவம், ஊழ்வினையாக பின்வரும் பிறவிகளில் உறுத்துவரும். அதுகாரணம் பற்றியே, அதைவிட தீயது
செய்யகூடிய பிறிதொன்றுமில்லை என்றார்.
மீண்டும் நினைவில்
கொள்ளவேண்டியது, இவ்வதிகாரம் துறவறவியலின் கீழ் வருவதால், துறவறத்தில் இருப்பவர்களுக்கே
முக்கியமாகச் சொல்லப்பட்டதாகும், இவர்களுக்கு வலியர் யார், எளியர் யார். துறவிகள் உள்முகத்தேடலிலும்,
உலகோர் நன்மைக்காக செயலாற்றுவதலிலும் எல்லோரையும் விட வலியர், நாட்டின தலைமையவிடவும்
கூட. ஆனால் அவர்களும், ஒரு நாட்டின் தலைவருக்கும், சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டவரே,
தவிரவும், இறைபொருளின் ஆணைக்கு உட்பட்டவரே. இதனால் அவர்களுக்கு இக்குறள் முற்றிலும்
பொருந்துவதாகும்.
இன்றெனது குறள்:
வலியோர்பால் கொள்சினம் தீததனின் தீது
மெலியோர்பால் கொள்ளும் சினம்
valiyOrpAl koLsinam thIdhanin thIdhu
meliyOrpAl koLLum sinam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam