பிப்ரவரி 18, 2013

குறளின் குரல் - 311


18th February,2013

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
                       (குறள் 303:  வெகுளாமை அதிகாரம்)

Transliteration:
maRaththal veguLiyai yArmATTum thIya
piRaththal adhanAl varum

maRaththal – Forget without keeping the vengeance in heart (what should be forgotten?)
veguLiyai –  getting angered with rage
yArmATTum – with everyone (powerful, equal as well as inferioir in power)
thIya piRaththal – (if don’t forget), only ill or evil will be born in retaliation
adhanAl varum – because of that (because of anger)

An eye for an eye will make the whole world blind - a thought provoking saying by Gandhiji. This verse has said the same thing in this simpler verse. Everyone, especially the penitents of renounced pursuit, must not succumb to anger out of rage, ever. Also must forget when others getting angry towards them,

Anger, rage, only destroys a person’s stature, diminishes the accumulated goodness of penitence. When people superior or equal are subject to the penitent’s rage that will only bring retaliation of rage and evil repercussions as the consequence. The word usage of “yAr maTTum” is to stress the thought espoused in the first two verses. The word also implies “everyone” meaning people that are superior, equal and inferior in power and stature.

The word maraththal rhymes with second line; but implies a deed, not the action. If he had said “marakka” that could have meant a request or a command for appropriate audience. Even the meaning could have been direct. Of course, the intent is not to find fault with vaLLuvar for this. Who knows this could be a mistake when the work was transcribed over the centuries from palmleaves to palmleaves and finally to paper.

“Forget anger of rage with everyone
 As it breeds only evil ill, good none”

தமிழிலே:
மறத்தல் - நினவிலிருந்தி, மனத்தில் வஞ்சத்தை வளர்க்காமல் மறந்து விடுக (எதை?)
வெகுளியை - (பிறரிடம்) வெகுண்டு சினம் கொள்ளுதலை
யார்மாட்டும் - யாரிடத்திலும் (பரிமேலழகர்: வலியார், ஒப்பார், எளியார்)
தீய பிறத்தல் - (மறக்காவிட்டால்) - தீயனவே பிறக்கும், விளையும்
அதனான் வரும் - சினம் தீமைசெய்யும், பிறரையும் தீமை செய்யத் தூண்டும்

ஒரு கண்ணுக்காக மற்றொரு கண் என்று போனால், உலகமே குருடாகிவிடும் என்றார் காந்தியார். அக்கருத்தையே எளிமையாகச் சொன்னதுதான் இக்குறள். எல்லோருமே, குறிப்பாக துறவில் உயர்ந்தோர் தாம் சினத்தலை மறக்கவேண்டும், பிறர் தம்மீது கொள்ளும் சினத்தையும் மறக்கவேண்டும்.

சினம் தம்முடைய உயர்வை சிதைக்கும், தவப்பயனை குறைக்கும், தம்மில் மிக்காரும் ஒப்பாரும் தம்முடைய சினத்துக்கு ஆளாகும் போது, அது மீண்டும் அவர்களது வெகுண்டலையும் அதன் விளைவையும் எதிராக்கும் தன்மையது. யார்மாட்டும் என்பதற்கு முதலிரண்டு குறள்களின் கருத்தினை அடியொட்டி, மீண்டும் வலிந்து கூறுவது, யார்மாட்டு என்று. பரிமேலழகர் இதை தம்மை விட வலிமையில் மிக்கார், ஒப்பார், எளியார் என்ற மூன்று வகையினரையும் குறிப்பதைக் கூறுகிறார்.

மறத்தல் என்னும் சொல், இரண்டாமடிக்கு ஒத்துவருவதாக இருந்தாலும், ஒரு செயலைக் குறிப்பதாக உள்ளது. மறக்க என்றிருந்தால் அதை வேண்டுகோளாகவும், ஆணையாகவும் கொண்டிருக்கலாம். பொருள்செய்யும் வழியும் இயல்பாக இருந்திருக்கும். வள்ளுவரைக் குறைகூறுவது நோக்கமில்லை என்றாலும், மறக்க, பிறந்து என்றிருந்தால் மூலக்குறளே சிறப்பாக இருந்திருக்கும். படிமம் எடுத்தலில் நேர்ந்த பிழையாயிருக்குமோ?

இன்றெனது குறள்:
சினத்தால் விளைவது தீதே - மறந்து
மனத்தகற்றல் யார்க்கும் நலன்

sinaththAl viLaivadhu thIdhE – maRandhu
manththagaRRal yArkkum nalan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...