பிப்ரவரி 19, 2013

குறளின் குரல் - 312


19th February, 2013

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
                       (குறள் 304:  வெகுளாமை அதிகாரம்)

Transliteration:
Nagaiyum uvagaiyum kollumm sinaththin
Pagaiyum uLavO piRa?

Nagaiyum - smile
uvagaiyum – and happiness
kollumm - killing
sinaththin – anger, rage
Pagaiyum - enemy
uLavO piRa? – is there other than this? (anger)

In a later verse, vaLLuvar will say, that anger is a killer to those who get it. When a good smile and happiness are destroyed in a person, it is as bad as his life is over. When smile and happiness are snatched away from a person, it is equivalent to killing the spirit in the person. Hence, is there a worse enemy than anger or rage that does that? The question has the answer hinted here.

We call renounced penitents as compassionate souls. Their compassion should be in their smiling face as well as sweet speak, when they guide others as well as do things to elevate other’s lives. Devoid of such pleasant things, though they may not have external enemies, their aims of inner purification and crossing the ocean of life and death cycle will be far fetched for them.

Is there any worse enemy other than anger or rage?
That kills the smile and happy demeanor of a sage!

தமிழிலே:
நகையும் - சிரிப்பும்
உவகையும் - மகிழ்ச்சியும்
கொல்லும் - இவற்றைக் கொல்லக்கூடிய
சினத்தின் - சினத்தை விட
பகையும் - கேடுவிளைவிக்கக் கூடிய எதிரி
உளவோ பிற - வேறு ஏதேனும் உண்டா?

பின்னர் வரப்போகும் குறளில் சினத்தைச் சேர்ந்தாரைக் கொல்லி என்பார். ஒருவரிடத்தில் புன்னகையும் நல்ல மகிழ்ச்சியும் சிதைந்து போனால், அவரது வாழ்வு முடிந்தது போலாகும். அவற்றைப் பறிப்பது, அவரையே கொல்லுவதற்கு ஒப்பாகும். ஒருவரிடத்தில் புன்னகையையும், மகிழ்ச்சியையும் கொல்லக்கூடிய சினத்தைவிட கொடிய பகை வேறு ஏதேனும் இருக்குமா? கேள்வியே சொல்லும் பதில், “இல்லை”யென்று.

துறவிகளை அருளாளர் என்கிறோம். அவ்வருளானது, அவர்கள் பிறரிடத்தில் பேசும்போது மலர்ந்த முகத்தைக் காட்டவேண்டும், மகிழ்ச்சியைத்தரக்கூடிய சொற்களைச், செயல்களைச் செய்யவேண்டும். இவை இல்லாமையின் அவர்களுக்கு வெளிப்பகை ஏதுமில்லையாயினும், துறவறத்தின் உட்பயனாம் அகத்தூய்மை அகன்று, பிறவிப் பெருங்கடலை நீந்தார்; இறைப்பொருளையும் சேரார்.

இன்றெனது குறள்:
சினம்போல் பகையில், சிரிப்பும் மகிழ்வும்
சினத்தாலே கொல்லப் படும்  -  (பகை இல்)
sinampOl pagaiyil sirippum magizhvum
sinaththAlE kollappaDum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...