பிப்ரவரி 20, 2013

குறளின் குரல் - 313


 20th February,2013

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
                       (குறள் 305:  வெகுளாமை அதிகாரம்)

Transliteration:
ThannaiththAn kAkkin chinangkAkka kAvAkkAl
thannaiyE kollunj chinam

ThannaiththAn kAkkin – To save and preserve self (from the rage that can kill self)
chinangkAkka – one must save self from anger, rage
kAvAkkAl –  for those fail to do so,
thannaiyE kollunj  - will destroy the self,
chinam – the rage/anger

This verse is precursor to the verse that follows. This verse addresses “self”, and the following verse is said in the context of people that are associated to “self”, friends and relatives.  Anger can kill the person that has it. It has both physical and metaphysical connotations. A person’s rage can create heat in the physical body; make breathing hotter and heavy; the brain feel fuzzy and clobbered in thinking. All these will result in the gradual but sure destruction of the physical body.

Also anger instigates harm to the person that one is angry with, either mentally or physically or to their property. What goes around, comes around is the philosophy of action and reaction, which is what is seen in the form repurcussive deeds from affected persons. There is a reason why vaLLuvar has kept this verse before a general one. vaLLuvar believes at least the self interest would prompt a person to be devoid of the ill that anger is.

The verse says, one must save self from the destruction, of his or her own anger that can ruin the self with repurcussive deeds from the affected ones as the ill of anger is self-destructive.

“To save the self one must be devoid of anger
 Else it will kill the self, a repurcussive danger”

தமிழிலே:
தன்னைத் தான் - தன்னைத் தானே
காக்கின்  - (அழிக்கும் தன்மையதாகிய சினத்தின் விளைவிலிருந்து) காத்துக்கொள்ள வேண்டுமானால்
சினங்காக்க - ஒருவர் தன்னை சினம் வராமல் காத்துக்கொள்ள வேண்டும்
காவாக்கால் - அவ்வாறு காத்துக்கொள்ளாவிட்டால்
தன்னையே கொல்லுஞ் - தன்னையே மாய்த்துவிடும் துன்பங்களைத் தந்துவிடும்
சினம் - அச்சினம்

இக்குறளும் அடுத்துவரப்போகிற குறளின் கருத்துக்கு முன்னோடி. இதில் தன்னைச் சார்ந்து சொல்லியும், பின்னர் தம்மைச் சார்ந்தவரைச் சொல்லியும் செய்திருக்கிறார் வள்ளுவர். சினம் அது கொள்பவரையே அழிக்கும். இதை பௌதீகமாகவும், தத்துவார்த்தமாகவும் கொள்ளலாம். ஒருவர் கொள்ளும் சினம் அவருடைய உடலில் வெப்பத்தை உண்டு பண்ணுகிறது, மூச்சுக்காற்று வெப்பமடைகிறது, மூளையைத் தன்வசம் இழக்க வைக்கிறது. சிந்தனையை மழுங்க அடிக்கிறது.

இதனால் புலன்களின் வெளிப்பாடு தம்மையும் அறியாமல், மனத்தாலோ, உடலாலோ, பொருளாலோ தீங்கை செய்துவிடுகிறது. “பிறர்கின்னா முற்பகல் செய்யின்” என்ற வினைசுழற்சி விதியின் படி, எதிர்வினையாக தம்மையே வேறு வடிவத்தில் வந்தடைகிறது. இதை ஒட்டியே வள்ளுவர், பிறரைச் சார்ந்து சொல்லுவதற்குமுன், சுயநலம் பற்றியாவது, சொல்வதைக்கேட்பார்கள் என்ற நம்பிக்கையில் இக்குறளைச் சொல்லுகிறார்.

ஒருவர் தன்னையே அழித்துவிடும் எதிர்வினகளைக் கொணரக்கூடிய சினத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், அச்சினமானது, ஒருவருடைய புலன்களாலாகிய உடலையும் சிதைக்கும்; சினத்தின் எதிர்வினைகளால் அழிவையும் தந்துவிடும்.

இன்றெனது குறள்:
கொல்லுஞ் சினமதனைக் காவாரை, ஆதலால்
வெல்லல் சினத்தினை நன்று

kollunj chinamadhanaik kAvArai, AdhalAl
vellal chinaththinai nanRu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...