21st February, 2013
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
(குறள்
306: வெகுளாமை அதிகாரம்)
Transliteration:
Sinamennum sErndhAraik kolli inanennum
Emap puNaiyaich chuDum
Sinamennum – anger that which,
sErndhAraik – those who have
it,
kolli – kills (the person that has anger as
said in previous verses)
inanennum – those that are
their own (who support in the pursuit of penitence)
Emap – for the wellbeing
puNaiyaich – that stand as
support as well a boat to reach shores (elevated stature)
chuDum – will burn the relationship to prompt
them keep away
In the last verse, vaLLuvar stressed the reason for
not entertaining anger, based on self-interest of a person. In this verse, he
underlines how anger can even keep the people that direct us in good virtuous
path away, by burning the relationships.
Anger is like a poison for those who have it, a
disease that kills being part of the system. Why does anger destroy a person?
Those who are at the receiving end of anger can think and do harm with
vengeance in retaliation. Also anger can keep away, even the persons that think
and mean well, to keep a person in virtuous path as their support or a boat to
reach the shores of their spiritual destiny. When such good support and
well-meaning people leave a person’s company, it sure is a sign for the
destruction of that person who has easily gives in to anger. Hence vaLLuvar
says, “seRndhAraik kolli” (kills a person that gives in to anger easily)
“Wrath that kills a person that has it, burns relationship
Of the well wishing near
that are a boat to spiritual trip”
தமிழிலே:
சினமென்னும் - சினம், வெகுளியாகிய விலக்கத்தக்கவை
சேர்ந்தாரைக் - யார் அவற்றைக் கொள்கிறார்களோ
கொல்லி - அவர்களையே அழிக்கும் தன்மையது (முந்தைய குறள்களைப் பார்க்க)
இனமென்னும் - (அத்தகைய சினமானது), தம்மைச் சார்ந்தவர்களாகி,
தவத்துக்கு உறுதுணையானவர்களை
ஏமப் - தன்னுடைய சேமத்துக்கு, நலத்துக்கு
புணையைச் - கட்டுக்காவலாக, உறுதியாக, உதவியாக, கரையேற்றும்
தோணியாக இருப்பவர்களைச்
சுடும் - தீங்கென்னும் தீயினால் சுட்டெரித்து, அவர்களை விலக்கிவிடும்
சென்ற குறளில் ஒருவரின்
சுயம்சார்ந்த நலத்துக்காக, சினம்கொள்ளாதிருத்தலைச் சொல்லி, இப்போது, அது தம்மைச்சார்ந்தவர்களையும்
எப்படி தீங்கென்னும் தீயால் தமக்கு நலம் விழைந்து, நன்னெறிப் படுத்தலிலு உறுதுணையாக
இருப்பவர்களையும் தீயென சுட்டெரித்து, அவர்களை நம்மிலிருந்து விலக்கிவிடும் என்று கூறுகிறார்
வள்ளுவர்.
சினம் என்பது, அதை
அடைவோரைக் கொல்லக்கூடிய ஒரு நஞ்சாம், நோய் - உடனிருந்தே கொல்லும் நோய்போல! ஒருவரின்
சினம் ஏன் அவர்களை அழிக்கிறது? சினத்துக்காளனவர்களின் எதிர்வினையான ஊறு செய்விக்கும்
சினத்தினால். தவிரவும், ஒருவரின் சினமானது, அவர்களை நன்னெறியிலே செலுத்தி, இருத்தி
நல்வழிப்படுத்தும் கட்டுக்காவலாக, உதவியாக, கரையேற்றக்கூடிய தெப்பமாக இருப்பவர்களை
செயல்களால், சொற்களால் சுட்டெரித்து, அவர்கள விட்டு விலகச்செய்துவிடும். நல்லவர்கள்
ஒருவரை நீங்கிவிட்டால், அவர்களுக்கு அழிவு நிச்சயம் என்பதனால், அதற்குக் காரணியான சினத்தைச்
“சேர்ந்தாரைக் கொல்லி” என்கிறார் வள்ளுவர்.
இன்றெனது குறள்:
கொண்டாரைக் கொல்லும்
சினம்நலம் நாடுவோர்கள்
அண்டாத தீயாய்
சுடும்
konDAraik
kollum sinamnalam nADuvOrgaL
aNDAdha
thIyAi suDum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam