பிப்ரவரி 22, 2013

குறளின் குரல் - 315


22nd February, 2013

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
                       (குறள் 307:  வெகுளாமை அதிகாரம்)

Transliteration:
Sinaththaip poruLenRu koNDavan kEDu
nilaththaRaindhAn kaipizhaiyA dhaRRu

Sinaththaip – getting angered
poruLenRu – as virtue to be proud of
koNDavan kEDu – thinking as such, will yield only painful consequences
nilaththaRaindhAn kai – like when somebody hits the ground with bare hand
pizhaiyA dhaRRu – his hand will only feel the pain and sometimes may break too

தமிழிலே:
சினத்தைப் - சினங்கொள்வதை
பொருளென்று - பெருமைக்குரிய பண்பாகக்
கொண்டவன் கேடு - கருதி கொள்பவர்கள் பெறக்கூடிய இன்னல்கள், துன்பங்கள்
நிலத்தறைந்தான் கை - நிலத்தினை ஓங்கி தன் கையால் அடிக்கிறவருடைய கை
பிழையாதற்று - தானேதான் வலியினால் துன்புறுவதோடு, சிலசமயம் முறிந்தும்விடுவதுபோலாம்

சிலர் தாம் சினம் கொள்வதை தமக்குரிய ஒரு பண்பாகக் கருதி, அதில் பெருமையும் கொள்வர். அவ்வாறு செய்வது, தன்னுடைய வெற்றுக்கையால் ஒருவன் நிலத்தை “இது என்னுடையது என்று உரிமைக்கொண்டாடி”, ஓங்கி அடிப்பதற்கு ஒப்பாகும். அவ்வாறு செய்வது அடித்தவனுடைய கைக்குத்தான் வலியைத் தரும். சிலநேரங்களில் முறிவையும் தரும்.

இவ்வொப்புமைக்குப் பரிமேலழகர் உரையே கடினமாகவும், பொருள்விளங்காதவாறும் உள்ளது. குறள் சொல்லும் வழியே பொருள்கொண்டால், இதுபோல அது என்கிற ஒப்புமை பொருந்திவரவில்லை. ஒருவர் நிலத்தின்மேல் கைகொண்டு அறைவதற்கும், சினத்தைப் பண்பென்று கொண்டவர்க்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும்?

இரண்டிலும் கேடுவிளையும், துன்பமே எஞ்சும் என்பது உறுதி. இரண்டுமே அறியாமையினாலும், தற்பெருமையிலும் செய்யப்படுவதாயின், துன்பமே தருவதை வேண்டுமானால் ஒப்புமையாகக் கருதலாம். பொருந்தா உவமையாகத்தான் இது தெரிகிறது. மற்றவுரையாசிரியர்களின் உரையும் மேம்போக்காக, உள்ளது உள்ளவாரே உரைக்கப்பட்டுள்ளது, பொருத்தமின்மையை ஆராயாது.

இன்றெழுதிய விளக்கக்குறளில், “மலையினை முட்டியவன் மண்டைபோல்” என்றது, மண்டை உடையுமென்கிற துன்பநிலையைக் குறிக்கத்ததான். இதை உயர்வை  எதிர்க்கும் மரமண்டையையோ, எதற்கும் அசைந்து கொடுக்காத ஒன்றிடம் மோதுவதையோ உவமையாகக் குறிக்கவில்லை!

Some view getting angry is a noble thought, justified and, a sign of power and pride themselves. Doing so is like striking a ground with bare hand which can cause only hurt to the hand and can fracture it too.

The expanation given by Parimelazagar is unclear and vague. Also, the comparison employed in this verse does not fit the context that much. How these two acts are comparable is only known to vaLLuvar. Obviously other commentators have simply interpreted the verse as it is without introspecting or investigating as to what is being conveyed or whether the comparison makes any sense.The main thought of  “anger” being bad is very clear, but the comparison fails to convey the intended meaning.

Perhaps the comparison is because both the acts cause harm and hardship. Both are done because ignorance and unworthy pride.

In the explanatory vese written today, I have used  hitting the head against the hill as equivalent to the thought expressed in the original, to imply the plain incurred if done so. It does not have any metaphorical context such as  dull head against the mighty or fighting with something that does not move.

As striking hard with a bare-hand will give only a sting and hurt
So is the pain for those who, the anger is a substantive thought

இன்றெனது குறள்:
மலையினை முட்டியவன் மண்டைபோல் துன்ப
நிலைதான் சினம்சீரென் பார்க்கு

malayinai muTTiyavan maNDalpOl thunba
nilaithAn sinamsIren bArkku


ன்றைய குறளுக்கு ஒரு திருத்திய சுய பின்னூட்டம். ஒரு நண்பி சுட்டிக்காட்டியதுபோல, இதில் நிலத்தை அடித்தால் வலி நமக்குத்தான் என்பதுபோல, நாம் சினந்தால், அதனால் வரும் கேடும் நமக்கேதான் என்பதை குறிப்பதாகக் கொண்டோமானால், இக்குறளில் சொல்லப்படும் உவமை பொருந்திவரும். ஆனாலும் நிலத்தை அறைவது என்பது கேட்டிராத உவமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...