பிப்ரவரி 23, 2013

குறளின் குரல் - 316


23rd February, 2013

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
                       (குறள் 308:  வெகுளாமை அதிகாரம்)

Transliteratton:
iNareri thOyvanna innA seyinum
puNarin veguLamai nanRu

iNareri – several tongus of flame
thOyvanna – like cluster together to befall on someone
innA - harm
seyinum – even they cause it (harm)
puNarin – if it possible
veguLamai – not being angered is
nanRu – good

Even if somebody does harm like several tongues of a big fire or flame bunched together, if possible, not showing anger to the person, keeping the harm the person did in mind, is good. To imply the excess of the harm, vaLLuvar has used the word “iNar eri” – bunched up several tongues of flame.

The word “puNarin” means, “if possible” and it is important to understand why vaLLuvar used “if possible” instead of insisting. When the excess of harm is done, it is difficult for even the renounced to ignore and not be angry. The thought has been espoused in a different verse in the following chapter as “innA cheidhArai oruththal avar nANa nannayam seidhuviDal”.

There are references in PadhiRRup paththu, pazhamozhi nAnURu, Kamba RAmAyaNam stressing a the same or similar thought.

“Even if the harm comes like bunched up tongues of flame,
If possible, never indulge in anger of retaliation and blame”

ஒருவர் நெருப்பின் நாக்குகள், இணைந்து பொழிந்தார்போல கொடுமையான தீமைகளைச் செய்தாலும், முடியுமானால், அதைப் பொருட்படுத்தாது, சினவாதிருக்கவேண்டும். இழைக்கப்படும் கொடுமையின் தீவிரத்தைக்குறிக்க வள்ளுவர், “இணர் எரி” என்கிறார். இதன்பொருள், ஒருங்கு சேர்ந்து கொடுமையாய்க் காயும் தீநாக்குகள் என்பதாம்.

“புணரின்” என்னும் சொல், “கூடுமானால் அல்லது, இயலுமானால்” என்ற பொருளைத்தருவது. செய்யாதீர் என்று அறுதியிட்டுச் சொல்லாமல், இயலுமானால் அல்லது முடியுமானால் என்று ஒரு ஐயப்பாட்டு நிலையோடு சொன்னதன் காரணம் என்னவாயிருக்கும்? கொடுமையின் உச்சத்தைக் குறித்துப் பேசிவிட்டு, அக்கொடுமையானது, துறந்தவர்களுக்கே கோபத்தை விளைவிக்கக்கூடிய தன்மையது என்பதால் தான், ஒரு விதிவிலக்கை உணர்த்தக்கூடிய வகையில் புணரின் என்ற சொல்லைப் பயனாக்கியுள்ளார் வள்ளுவர்.

அடுத்த அதிகாரத்தில், இக்குறளின் பொருளினையொட்டி, “இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்” என்பார் வள்ளுவர்.

பதிற்றுப்பத்துப்பாடல், இன்னா செயினும் வெகுளாமையை “பெரிய தப்புநராயினும் பகைவர் பணிந்து திறை பகரக்கொள்ளுநை” என்கிறது. பழமொழி நானூறுப் பாடலும், “ இறப்பச் சிறியவர் இன்னாசெயினும் பிறப்பினான் மாண்டார் வெகுளார்” என்கிறது

இன்றெனது குறள்:
பெருந்தீ பொழிந்தார்போல் துன்பஞ்செய் தாலும்
வருஞ்சினம் காத்தலே நன்று
perunthI pozindArpOl thunbanjchei dhAlum
varunjchinam kAththalE nanRu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...