2nd
February, 2013
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.
(குறள் 287:
கள்ளாமை அதிகாரம்)
Transliteration:
kaLavennum kAraRi vANmai aLavennum
ARRal purindhArkaN il
kaLavennum – Stealing (the deed of stealing)
kAr – that which is black as dark cloud
aRivANmai – imposing intellect
( or lack of that? aRivinmai?)
aLavennum – The limits
imposed by ethical and virtuous tenets
ARRal – capable of following them
purindhAr kaN il –
those who understand will not have (such thoughts of stealing)
This verse is
similar to the previous one. After discussing as to who succumbs to cheap
desires of stealing in the last verse, here he says who will not indugle in
such things. The scheming mind, and the knowledge to only to do things of dark
nature, like pregnant clouds which are also dark, will not be there in ascetics that know their
bounds to virtuous ways.
The phrase “kAr
aRivAnmai” literally means that “knowledge
that is like pregnant clouds that carry water in abundance”. This
interpretation is exactly opposite to what the kuraL wants to convey. But, commentators have taken the “darkness”
attribute as the main attribute to imply “the dark nature of intellect” that is
used to harm others. vaLLuvar could have avoided the confusion to says “kAraRivinmai”
which could have straightaway conveyed the intended meaning, “aRivinmai”,
“lack of intellect”.
ManakkuDavar, another respected commentator, would interpret the same as
“ the evil intellect that stealing is”.
vaLLuvar probably meant that to do evil deeds one must have twisted
intellect, which some people of ascetic life have as we see from time to time.
“There will not be blinding darkness of knowledge, to thieve
For that are bound by the
limits of virtuous tenets to live”
தமிழிலே:
களவென்னும் - பிறரை வஞ்சித்து அவர்களின் பொருளை களவாடும் எண்ணம்
கார் - கருத்த மேகம்போன்ற இருண்ட
அறிவாண்மை - அறிவினை உடையராதல் (அறிவின்மையாக இருந்திருக்கலாமோ?)
அளவென்னும் - நல்வழிகளின் எல்லைகளுக்ககுள்ளே
ஆற்றல் - நின்று தம்கடமைகளை ஆற்றி (தவசீலர்களுக்கு என்று கொள்ளவேண்டும்)
புரிந்தார்கண் இல்.- துறவறம் புரிவார்களுக்கு இல்லை.
சென்ற குறளின் கருத்தை
அடியொட்டிய குறள்தான் இதுவும். முன்னரே எழுதியிருந்தபடி, சென்ற குறள், “அவ்வாறு
இருக்கிறவர், இவ்வாறு இருக்கமாட்டார்” என்றது. இந்த குறள், “இந்த தீய குணம்,
இவ்வாறு நல்ல இயல்பினைக் கொண்டவர்களிடம் இருக்காது” என்கிறது.
யார் அற்பக்களவில்
ஆசையுளோர் என்று கூறிய பின்னர், இக்குறளில் யாருக்கு அற்பக்களவில் ஆசையில்லை என்று
கூறப்படுகிறது. இதில் களவு செய்யுமறிவு கரிய மேகத்தின் இருண்ட தன்மையைப்போல என்று கூறி,
அதுபோன்ற வழிகளில் தம் நெறிக்கு வகுக்கப்பட்ட எல்லைகளுக்கு உட்பட்டு தம் கடமையை ஆற்றும்
துறவிகள், இருக்கமாட்டார்கள் என்று கூறுகிறார்.
“கார் அறிவாண்மை” என்பது, கரிய மேகம் மழைநீரைத் தேக்கியுள்ளது
போன்ற அறிவுடமையென்று ஆகிறது. அது இக்குறள்
சொல்லவரும் கருத்துக்கு முரணாக இருக்கிறது. பரிமேலழகரும் மற்றவர்களும், கரிய மேகத்தின்
இருண்ட தன்மையை எடுத்துக்கொண்டு அதை “இருண்ட அறிவு உடையவர்கள்” என்கின்றனர். காரறிவின்மை என்றாலாவது இருண்ட அறிவின்மை
என்ற பொருள் பொருந்திவரும். மணக்குடவர் இதற்கு, “களவாகிய பொல்லா அறிவுடமை” என்பார்.
ஒருவேளை அறிவின்மையாயிருந்தால், அவர்களுக்கு தீமைகள் செய்ய தோன்றாதிருக்கலாம் என்றும்,
தீமைகள் செய்யவும், தீய சிந்தனைகளை செய்யவும் தீயறிவு வேண்டுவதால் இவ்வாறு கூறியிருக்கலாம்
என்று கருதவும் இடமிருக்கிறது.
இன்றைய குறள்:
இருள்போல் அறிவாம் களவு அளவின்
பொருளை அறிந்தவர்க்
கில்
iruLpoL
aRivAm kaLavu aLavin
poruLai
aRindhavark kil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam