1st
January, 2013
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.
(குறள் 286: கள்ளாமை அதிகாரம்)
Trasliteration:
aLavinkaN ninROzhugal ARRAr kaLavinkaN
kaNRiya kAdha lavar
aLavinkaN – understanding
the bounds of life’s virtuous ways, ethical conduct
ninROzhugal ARRAr –
those that are not abiding by the same,
kaLavinkaN – (do) steal from
others, with cunning
kaNRiya – vile ridden
kAdhalavar – excessive desire
(to steal from others)
This verse seems an extension of previous verse. One
who does not abide by the limits of ethical and virtuous conducts in life, will
be avaricious to steal others wealth by cunning – this is what the verse says.
Since this chapter is under the part of Asceticism, we
must surmise that these verses are written towards pretentious ascetics, though
the tone seems more generalistic, without specifying who these talk about.
Yet another verse that makes one to think if there
have been insertions into vaLLuvar’s work. Those who don’t live within the
ethical bounds always cannot all be construed or generalized as to be indulging
in stealing or even entertain such thoughts. Also, this verse even in
interpretation is not very different from previous verse. The usage of word “aLavu”
seems to be used more for poetic metrical consideration as it is difficult to
interpret in the context of these verse directly.
“Aware of ethical bounds, the person that does not abide by
Have the cheap big desire
of stealing from others in the sly”
தமிழிலே:
அளவின்கண் - தம் வாழ்க்கைக்கு ஏற்ற நெறிகள் அவற்றின் எல்லைக்கோடுகளுக்குட்பட்டு
நின்றொழுகல் ஆற்றார் - அவற்றிற்குத்
தக்கவாறு ஒழுகமாட்டாதார்
களவின்கண் - வஞ்சித்து பிறை பொருளைத்
திருடிக்கொள்ளும்
கன்றிய - அற்பமான, மிகுந்த
காதலவர் - வேட்கை உடையவர்
சென்றகுறளில் சொல்லப்பட்ட
குறளின் நீட்சியாகத்தான் இக்குறளைக் கொள்ளவேண்டும். தம் வாழ்க்கைக்கு ஏற்ற நெறிகளின்
எல்லைக்கோடுகளுக்கு உட்பட்டு, அவற்றிற்கு தக்கவாறு ஒழுகமாட்டாதார், பிறர் பொருளை வஞ்சித்து
அவர்பொருளைத் திருடிக்கொள்ளும் அற்பமான வேட்கை உடையவர், என்பதே இக்குறளின் கருத்து.
துறவறவியலின் கீழ்வரும்
இவ்வதிகாரத்தின் குறள்கள் எல்லாமே துறவறம் மேற்கொண்டவர்களை நோக்கிச் சொல்லப்பட்டனவென்றால்,
இக்குறளும் பொய்த்துறவிகளைப்பற்றி குறிப்பதாகக் கொள்ளலாம்.
வள்ளுவர் செய்த திருக்குறள்களில்
கட்டாயம் இடைச்செருகல்கள் இருக்குமோவென ஐயப்படவைக்கும் பாடல்களுல் ஒன்று இக்குறள்.
தம்வாழ்க்கையின் எல்லைக்கோட்டைத் தாண்டுபவர்கள் எல்லோருமே அற்பத் திருட்டினில் வேட்கையுள்ளவர்
என்று பொதுவாக சொல்லிவிட முடியாது. தவிரவும் கருத்து வகையிலும் முந்தையகுறளுக்கு, இக்குறளுக்கும்
பெரிய வேற்றுமைகள் இல்லை! தவிரவும் “அளவு” என்ற சொல், களவுக்கு எதுகை வேண்டுமென்கிறதாலேயே
பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நேரடியாகப் பொருள்கொள்ளும்படியான சொல்லில்லை.
இன்றைய குறள்:
நெறியினெல்லை நின்றொழுகார் அற்பக் களவு
குறித்தொழுகும் ஆசையு ளோர்
neRiyinellai ninRozhugAr aRpak kaLavu
kuRithozhugum
Asaiyu Lor
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam