ஜனவரி 30, 2013

குறளின் குரல் - 293


30th January, 2013

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
                       (குறள் 284:  கள்ளாமை அதிகாரம்)   

kaLavinkaN kanRiya kAdhal viLaivinkaN
vIyA vizhumam tharum

kaLavinkaN – stealing form others by conniving
kanRiya – vileness ridden
kAdhal – though love in normal meaning, it is excessive desires
viLaivinkaN – though the desire is fulfilled, the after effects will
vIyA - undying
vizhumam tharum – gives distress or trouble

In the previous verse, vaLLuvar said, cunnivingly stolen wealth, though appears to be growing, will evetually perish. In this verse, he refers to the person who does that, such vile desires will eventually give undying, endless troubles and distress to people.

There are two words that vaLLuvar has used in this verse, we inspect here closely. “kanRiya” means, “with anger” generally, but also means, “insignificant, or mean” too. “kanRu” means that which is not grown. Here vaLLuvar alludes to the “ungrown in thinking” for a person to indulge in thieving.  The apt tamil word for this is “aRpam”. The second word, “vizhumam” also means “excellence” and at the same time, “distress or painful consequences”. vaLLuvar has used this word to denote “excellent looking outwardly but causing distress”,  a clever usage indeed.

KI.vA.ja, in his research edition gives enough examples of “causal effect of deeds” from maNimEkalai, sIvaka chintAmaNi, vaLaiyApathi. The very topic of this chapter is one of the most important tenets of Jainism.

“Undying consequence of disress and trouble will ensue
 For vile desire to scheme cunnivingly to steal and pursue”

தமிழிலே:
களவின்கண் - வஞ்சித்து பிறர் பொருளைத் திருடுதலில்
கன்றிய - அற்பமான (“மிக” என்ற பொருளில் உரையாசிரியர்கள் சொல்லுவர்**)
காதல் - வேட்கை, விழைவு
விளைவின்கண் - அது நிறைவேறினாலும், பின்வரும் விளைவுகளினால்
வீயா - அழியாத
விழுமம் தரும் - துன்பத்தினைத் தரும் (சிறப்பு என்ற பொருளும் தரும் ஆதலால், சிறப்பு போன்று தோன்றும் துன்பம்)

முந்தைய குறளில், வஞ்சித்து திருடிய செல்வம், வளர்வதுபோல தோன்றினாலும், அது முடிவில் அழியும் என்றார். இக்குறளில், அவ்வாறு வஞ்சித்து திருடுதலில் உள்ள அற்பமான வேட்கை, அவ்வாறு திருடினாலும், அழியாத துன்பத்தினையும், தொல்லைகளையும் தந்துவிடும்.

கன்றிய என்ற சொல் சினந்து என்ற பொருளும், அற்பம், வளர்ச்சியில் இளமையானது என்ற பொருளையும் தரும். வாழைக்கன்று, பசுவின் கன்று என்று சொல்வதைக் கேட்கிறோம். அற்பமும் அதைப்போன்றது தான், வளராதது, முதிராதது என்றே கொள்ளவேண்டும். ஏன் அற்பம் என்னல் பொருந்துகிறது? பிறரை வஞ்சித்துத் திருடுதல் என்பது ஒரு முதிரான அறிவின் விளைவு என்பதால்.

விழுமம் என்ற சொல் “சிறப்பு” என்ற பொருளிலும், “துன்பம்” என்ற பொருளிலும் வரும். இதை வள்ளுவர் பயன்படுத்தியதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும். வள்ளுவர் சிறப்பு போல தோன்றும் துன்பம் என்பதை குறிக்கவே இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் என்று கொள்ளலாம்.

கீ.வா.ஜகன்னாதன் ஆராய்ச்சித் தொகுப்பில், வினைப்பயன் விளைவைப்பற்றி மணிமேகலையிலிருந்து இவ்வாறு கூறுகிறார். “வினைப்பயன் விளையும் காலை உயிர்கட்கு மனப்பேரின்பமும் கவலையும் காட்டும்” (மணி:30:62-3). முற்றுக் கருத்தையும் எதிரொலிக்கும் பாடல் வரிகளையும் சீவகசிந்தாமணி, வளையாபதி போன்ற காவியங்களிலிருந்து எடுத்துக்காட்டியிருப்பார். கள்ளாமை என்பது சமணக்கோட்பாடுகளில் முக்கியமான ஒன்றானதால், சமணகாவியங்களே இவற்றைப் பற்றி வெகுவாகப் பேசியுள்ளன.

இன்றைய குறள்:
வஞ்சத் திருட்டிலே அற்பவேட்கை துன்பமே
நெஞ்சில் நிலைக்கத் தரும்

vanjath thiruTTil migavETkai thunbamE
nenjil nilaikkath tharum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...