ஜனவரி 29, 2013

குறளின் குரல் - 292


29th January, 2013

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
                               (குறள் 283:  கள்ளாமை அதிகாரம்)
Transliteration:
kaLavinAl Agiya Akkam aLaviRandhu
Avadhu pOlak keDum

kaLavinAl Agiya – By deceiving others with cunning
Akkam - The illgotten wealth
aLaviRandhu – in excess
Avadhu pOlak – may appear to grow (in excess)
keDum – will deplete completely eventually.

இன்று ஒரு உபரித் தகவல். திருக்குறளுக்கு, உரையெழுதிய பழைய ஆசிரியர்கள் யாரென்று பார்க்கையில் இப்பாடலைக் கண்டேன். இப்பாடல், உரைசெய்தவர்களின் கால வரிசையிலே செய்ததாகக் கூறப்படுகிறது. சீருக்காக வரிசை மாறியிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

This verse says that, the ill-gotten wealth by connivingly thieving from others may seem to grow the wealth in excess, but eventually will completely be depleted and bring distress. The word excess used here to show not only the wealth, but the distress that will come out of such wealth.  Why so? The such act of deception and thieving, will also ruin the earlier goodness accumulated.

There is a line in the “pazhamozhi nAnUru” which says it more generally, not particularly in the context of this verse. “Evild deeds, will destroy though seem to be bringing good”.

Here is a piece of information, though not connected to this verse. It is more like good to know information. Have you wondered who were all the early commentators of ThirukkuraL? , Dharumar, maNakkuDavar, thAmaththar, nachchar, parimelazhagar, parudhi, thirumalaiyar, mallar, paripperumAL, kaLingar are the names given in the poem above (in Tamizh)

“The illgotten wealth by thieving may seem to be in excess
And growing, but will deplete eventually to bring distress”

தமிழிலே:
களவினால் ஆகிய - பிறரை வஞ்சித்துத் திருடிய
ஆக்கம் - செல்வம், வளங்கள்
அளவிறந்து - அளவுக்கு மிகுதியாக
ஆவது போலக் - பெருகுவது போல தோன்றினாலும்
கெடும் - இறுதியில் அழிந்துபடும்

இக்குறள் சொல்லும் கருத்து: பிறரை வஞ்சித்து அவர்களின் பொருளை களவினால் கொள்ளுதல், மிகுந்த செல்வத்தையும் வளத்தையும் சேர்ப்பதுபோல தோன்றினாலும், இறுதியில் முற்றிலுமாக அழிந்துபடும். அளவிறந்த என்பதை ஆக்கத்துக்கும் , கெடுதலுக்கும் சேர்த்தே கொள்ளவேண்டும். அளவிறந்து கெடுதலானது, களவுதல் பற்றிய வஞ்சக எண்ணம், களவுதல் இவற்றுக்காகக் கெடுதலோடு மட்டுமின்றி, முன்பு செய்த அறவினைகளுக்கான பயன்களும் அழிந்துபடுமாகையால்.

பழமொழிப் பாடலொன்று “தீயன, ஆவதே போன்று கெடும்” என்று சொல்லுகிறது.

தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர்
பரிமேலழகர், பருதி, திருமலையர்,
மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர், வள்ளுவர் நூற்கு
எல்லை உரை செய்தார் இவர்

இன்றைய குறள்(கள்):
வஞ்சத்தில் வந்த வளங்கள் வரையற்று
விஞ்சினாலும் வற்றி விடும்
vanjaththil vandha vaLangaL varaiaRRu
vinjinAlum vaRRi viDum

To make it obvious that wealth obtained was by thieving, changed the word in the 1st line and re wrote the verse as below,

வஞ்சத்தால் வந்தகள வாக்கம் வரையற்று
விஞ்சினாலும் வற்றி விடும்
vanjaththil vandhakaLa vAkkam varaiaRRu
vinjinAlum vaRRi viDum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...