28th
January, 2013
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
(குறள் 282:
கள்ளாமை அதிகாரம்)
Transliteration:
uLLaththAl uLLalum thIdhE piRanporuLaik
kaLLaththAl kaLvEm enal
uLLaththAl – Even in the
heart
uLLalum – to think is
thIdhE – sinful
piRanporuLaik -
things that belong to others
kaLLaththAl – by fraudulent or
connivingly
kaLvEm enal – to usurp.
To steal somebody’s belonging is definitely a sin for
everybody. For asctics even to entertain a thought in the heart to steal what
belongs to someone else is a great sin. Purity in heart is greatly emphasized
for ascetics
Earlier, we had seen a chapter full of verses
(veghAmai) on not desiring for other’s belongings. Even for family people that
have other compulsions, it is better not to desire for what belongs to
others. For people of ascetic path, it
is even a worse sin.
“It is sinful to even entertain a thought to steal
Others belongings that
too by conniving zeal”
தமிழிலே:
உள்ளத்தால் - தன்னுடைய நெஞ்சத்தில்
உள்ளலும் - நினைந்தலும்
தீதே - தீமையும் பாவமும் ஆனதே
பிறன்பொருளைக் - மற்றவருக்கு
உடமையாகிய பொருளை
கள்ளத்தால் - வஞ்சனயாலே
கள்வேம் எனல் - திருடிக்கொள்வோம்
என்று நினைத்தல்
பிறருக்கு உரியதாகிய பொருளை வஞ்சனையால் தமதாக்கிக் கொள்ள
தன்னெஞ்சு நினைத்தலே தீமையும் பாவமுமாம். இது
பொதுவாக எல்லோருக்கும் பொருந்துவது எனினும், துறவறத்தில் இருப்பவர்களுக்கு குறிப்பாகச்
சொல்லப்பட்டது. அவர்கள் களவு முதலியவற்றை விலக்கியவர்களாக இருப்பினும், மனத்திலும்
தூய்மையாகவும், வஞ்சக எண்ணங்கள் இல்லாமலும் இருக்கவேண்டும்.
வெஃகாமை அல்லது விழையாமை
அல்லது வேண்டாமை என்பதைப்பற்றி இல்லறவியலில் கூறும்போது பிறர் பொருளுக்கு விழையாமை
நன்று என்பார். இல்லறத்தில் இருப்பவர்களுக்கே விழைவதே தவறு, துறவறத்தில் உள்ளவர்களுக்கு,
அது பெரும்பாவம். அவ்விழைதல் களவாடும் எண்ணத்தைச் சேர்க்கும், பிறகு களவிலேயே ஈடுபடுத்தி
பெரும் பாவத்தில் சேர்க்கும் என்பதால் “உள்ளத்தால் உள்ளலும்” என்றார்
இன்றைய குறள்:
பிறனுடமை வஞ்சித்துக் கொள்ளுதற்கு நெஞ்சம்
திறம்பித் திரிவதும் தீது
piRanuDamai vanjiththuk koLLudhaRku nenjam
thiRambith thirivadhum thIdhu.
(திரிவதும் என்பதற்கு பதிலாக நினைவதும் என்றும் சொல்லலாம். ஆனால் திரிவது
நற்குணம் தீகுணமாக மாறுவதை குறிப்பதால், அதையே கையாண்டிருக்கிறேன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam