29: (Not entertaing thought of stealing - கள்ளாமை)
[The word “kaLLAmai”
means to avoid thinking about stealing from anyone by conniving. Since even
thinking tantamounts to the very deed, he has used this word. Parimelazhagar
guives concession to family people that it may be acceptable to entertain such
sly thoughts as a matter of living for their welfare, however inappropriate it
is; but for ascetics even to think so is unsuitable for their pursuit of higher
knowledge and exemplary life for the welfare of the society. Hence it is part
of the section on asceticism.]
27th
January, 2013
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
(குறள் 281:
கள்ளாமை அதிகாரம்)
Transliteration:
eLLAmai vENDuvAn enbAn enaiththonRum
kaLLAmai kAkkathan nenju
eLLAmai vENDuvAn enbAn – One
who does not want to be ridiculed or laughed at
enaithth(u) onRum –
nothing from others
kaLLAmai – from the cunning
thought of stealing from others
kAkka – should save
than nenju – his heart (from
the desire of stealing)
The first verse of this chapter appeals to the
ascetic aspirants that always fear the redicule of others for something wrong
they may inadvertently do. More than the person of normal life they should save
their hearts from the desires to covet or steal what belongs to others. Or else
they will face the redicule of the world. Again and again the appeal to avoid
desires in the heart is preached because heart cultivates desires though
intellect may discard it. The use of two words “vEnDuvAn” and “enbAn”
back to back, seems kind of redundant as the first word itself implies the person that has the desire
to steal other’s belongs and 2nd word seems sort of redundant
“Desiring not to be rediculed by the world, an ascetic must not
Lust to connivingly steal
others belongings, even in thought!”
எள்ளாமை வேண்டுவான் என்பான்
- பிறரால் இகழ்ந்து, பழிப்பு நகைக்கு ஆளாக விரும்பாதவன்
எனைத்(து) ஒன்றும் - யாதொரு பொருளையும் (பிறரிடமிருந்து)
கள்ளாமை - திருடிக்கொள்ளும் எண்ணத்திலிருந்து
காக்க - காக்கவேண்டும்
தன் நெஞ்சு - தன் நெஞ்சினை.
இவ்வதிகாரத்தின் முதற்குறள், துறவறத்தில் இருக்க விழைபவர்களை நோக்கி,
அவர்கள் தம்மைப் பிறர் இகழ்ந்து நகைக்காமல் இருக்க, அவர்கள் தவறியும் கூட செய்யக்கூடாதவொன்றைச்
சொல்கிறது. சாதாரண மனிதர்களிடம், இவ்வெண்ணங்கள்
வாழ்வியலின் ஒரு தவிர்த்திருக்கக்கூடிய குற்றமானாலும், மற்றவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.
எக்குற்றம் இது? பிறரிடமிருந்து வஞ்சனையால் தமக்கு உரிமையில்லாத, அவர்களின் உடமைகளை
திருட எண்ணுவது கூடாது. துறவறத்தில் உள்ளவர்களுக்கு இது உலகத்தோர் எள்ளி நகைக்கூடிய
செயலாகிவிடும்.
மீண்டும் மீண்டும், நெஞ்சைக்குறித்து சொல்லுவது ஏன்? நெஞ்சமே ஆசைகளின்
விளைநிலம், அறிவு புறக்கணித்தாலும், நெஞ்சம் விழைவதை கட்டுப்படுத்துவது, துறவுக்குத்
தேவையான ஒரு பண்பு.
இக்குறளில் “வேண்டுவான் என்பான்” என்று இரண்டு சொற்களை ஏன் வள்ளுவர்
பயன்படுத்தினார் என்று தெரியவில்லை. எள்ளாமை வேண்டுவான் என்பதே பொருளத்தந்துவிட, என்பான்
என்பது சற்று தேவையில்லாத சொல்லாக இருக்கிறது. தவிரவும் துறவிகளுக்கு மட்டுமே சொல்லப்பட்டதென்றால்
“வேண்டும் துறவோர்” என்று சொல்லியிருக்கலாம்.
இன்றைய குறள்:
பழிநகைக் காளாகார் வஞ்சக் களவாம்
இழிசெயல் நெஞ்சுகொ ளார்
pazhinagaik kALAgAr vanjak kaLavAm
izhiseyal nenjuko LAr
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam