26th
January, 2013
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
(குறள்
280: கூடாவொழுக்கம் அதிகாரம்)
Transliteration:
Mazhiththalum nITTalum vENDA ulagam
Pazhiththadhu ozhiththu viDin
Mazhiththalum –To
shave the head to be completely bald (like Jain, Buddhist monks)
nITTalum – To grow hair and
beard like hindu saints
vENDA – is not required
ulaga Pazhiththadhu – what
the world discards as undesireable conduct
ozhiththuviDin – if
get rid of those!
Ascetics don’t need external appearance indicative of their renounced
state such as shaving the head completely to be bald headed, or growing the
hair and the beard . The true renouncing should be from within, not in external
appearance. To be truly renounced, one must adhere to the ethical ways that
world celebrates and be devoid of that which are not ethical. This verse has
been composed particulary for the Jain, Buddhist monks that complete shave and
the Hindu saints that grow hair and beard.
Though vaLLuvar does not mention anything about bearing the staff and
wearing a saffron garb, commentator kALingar mentions them also. After the
discovery of vaLLuvar and his works, we have given him a look with a matted hair coiled into
a crown, a trimmed mustache and a long pointy beard too. Who knows! He could
have just looked like Kamban or ILangO or even Bharthiyar for what we know. We did
not apply his verse to him. Our imagery of vaLLuvar must have come form temple statues
depicting saints.
“Neither complete shaving nor growing hair
profusely, needed for the renounced truly
If they
be rid of what the world has discarded as unethical code of conduct sincerely”
தமிழிலே:
மழித்தலும் - தலையை முண்டனம் செய்து
மொட்டை அடித்தலும் (சமண, பெளத்தர்களைப் போல்)
நீட்டலும் - சடைமுடியும், தாடி
போன்றவற்றை வளர்த்துக்கொள்ளலும் (சநாதனத்துறவிகள் போல்)
வேண்டா - செய்வது தேவையில்லை
உலகம் பழித்தது - உலகம் எவற்றை கூடா ஒழுக்கம் என்று பழித்து விலக்குமோ
ஒழித்துவிடின் - அவற்றை துறந்து விட்டால்
துறவிகளுக்குப் புறவேடங்கள் தேவையில்லை,
அகத்துறவும், அதற்குண்டான உலகம் கொண்டாடும் நல்ல பண்புகளைக் கொண்டு, அல்லனவற்றை விலக்கி இருப்பதே உண்மைத்துறவறம் என்கிறது
இக்குறள். அக்கால வழக்கில் இருந்த சமண, பௌத்தத் துறவிகள் தங்கள் சிகையை முழுவதுமாக்
எடுத்து முண்டனம் செய்ததையும், சநாதன மதத்தைச் சேர்ந்த துறவிகள் சடை வளர்த்து, முகத்தில்
மீசை, தாடி இவற்றை எடுக்காமலே இருந்ததைக் குறித்து, அவ்வாறு முழுக்க மழிப்பதும், நீண்டு
வளர்ப்பதும் தேவையில்லை என்கிறார் வள்ளுவர்.
வள்ளுவர் தண்டம் ஏந்துவதையும், காவியுடை
அணிவதையும் பற்றி ஒன்றும் சொல்லவில்லையானாலும் காளிங்கர் தம்முரையில் அவற்றையும் சேர்த்துச்
சொல்லுகிறார். பின்னால் வள்ளுவரைக் கொண்டாட துவங்கிய நாமோ அவருக்கு சடையாலாகிய கொண்டையும்,
நீண்ட தாடியையும் வைத்து சிலைகளை உருவாக்கிவிட்டோம். இவ்வுருவை நாம் கோவில் சிலைகளில்
முனிவர்களின் சிலைகளை வைத்துதான் செய்திருப்போம். வள்ளுவர் சொல்லிய குறளை நாம் அவருக்கே
பயன்படுத்தவில்லை. அவர் கம்பரைப்போல், இளங்கோவைப்போல், ஏன் பாரதியைப்போல் கூட இருந்திருக்கலாம்!
கீ.வா.ஜ. சீவகசிந்தாமணியில்(1427)
இதே கருத்து சொல்லப்படுவதைச் சுட்டுகிறார்.(வீடு வேண்டி விழுச்சடை நீட்டல்.. இன்னவை
பீடிலா பிறவிக்கு வித்து என்பவே)
இன்றைய குறள்:
தவத்தோர்க்குக் கோலமேதும் தேவையில்லை உலகில்
அவமொழிந்து ஆற்றுப் படின்
thavaththOrkkuk kOlamEdhum thEvayillai
ulagil
avamozhindhu ARRup paDin
தவத்திற்கு வேடங்கள் தேவையில்லை உலகோர்க்
கவமென்ப நீக்கிச் செயின்
thavaththiRku vEDangaL thEvaiyillai ulagORk
kavamenba nIkkich cheyin
(உலகோர்க்கு அவம்
என்ப - உலகினருக்குப் பயனில்லை என்பவற்றை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam