ஜனவரி 25, 2013

குறளின் குரல் - 288


25th  January, 2013

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன    
வினைபடு பாலால் கொளல்.
                   (குறள் 279:  கூடாவொழுக்கம் அதிகாரம்)

Transliteration:
kaNaikoDidhu yAzkODu sevvidhuAn ganna
vinaipaDu pAlAl koLal

kaNai – the arrow from the bow (thought straight in appearance)
koDidhu – is a weapon for killing
yAzkODu – the lute which is curved and not straight
sevvidhu – is capable of producing fine music
Anganna – The same way ( to decide ascetics as to who is true or false)
Vinai paDupAlAl – by the deeds that they are indulged in (not by their appearance)
koLal – we must understand
We can understand this verse in two different ways, a straight meaning as well as implied one.

An arrow kills, a symbol of cruelty; a lute pours sweet music, a symbol of goodness and peace.  Similarly based on a person’s deeds we can say if the person is ethical, good or otherwise. This is the straightway of interpreting the verse.

An arrow is a straight one, but does a crooked job of killing; A lute is bent and curved and appear not straight and pointed, but produces the mellifluous and pacifying music. Now can decide as to based on shape or looks, which one is bad or good. What looks staright may kill and what looks curved is indeed producing a sweet music. Hence, only the actions of people will reveal what their inner persona is, not the outwardly looks! – This is the second way of interpreting the verse.

All commentators have interpreted the second way, led by Parimelazhagar’s adding of a word “vadivu” in his commentary, which is entirely his surmising as to what vaLLuvar says. He also says directly referring to ascetics in this verse, which is also not explicit in vaLLuvar’s verse. All that vaLLuvar says is that we should see people by their acts and deeds; He does not even hint that we should not go by looks. Anyways, interesting interpretations are always welcome.  While it shows the genius of Parimelazhagar to come up with such an explanation, it shows only herd mentality of other commentators to go the same route, unless it is out of appreciation or reverence to Parimelazhagar.

This verse posed considerable challenge to write an alternate verse in Tamil. The first one was not conveying the direct meaning well and hence the second one too!

“An arrow kills and the lute gives delightful music – likewise
 By the deeds we get to know people to be good or otherwise”

தமிழிலே:
கணை - வில்லிலிருந்து எய்யப்படும் அம்பு நேரானது,
கொடிது - ஆனால் கொல்லும் கொடியது
யாழ்கோடு - வளைந்திருக்கும் இசைக்கருவி யாழ், உருவத்தில் வளைந்தாலும்
செவ்விது - இனிய இசையைத் தரவல்லது
ஆங்கன்ன    - அதுபோல
வினை - சீலரென்று சொல்வது ஒருவர் செய்யும் வினைகளை
படுபாலால் - செய்யும் பாங்கால்
கொளல் - இவர் உண்மையான ஒழுக்கசீலர் அல்லது அல்லர் என்பது.

இக்குறள் சொல்ல வருங்கருத்தை நேரடியாகவும் கொள்ளலாம், அல்லது உட்பொருள் தேடியும் சொல்லலாம்.

அம்பு கொல்லவல்லது, கொடியது. யாழ் நல்ல இசையைத் தரவல்லது, நல்லது. இதே போன்றுதான ஒருவர் செய்யும் செயலை வைத்தே அவர்கள் ஒழுக்க சீலரா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும் - இது நேரடியாகக் கொள்ளப்படுவது.

அம்பு நேராகத்தான் இருக்கும், ஆனால் கொல்லுகின்றது. யாழோ வளைந்திருந்தாலும் இனிமையான இசையைத் தருகிறது. அதேபோல் உருவத்தில் செம்மையாக இருப்பவர்கள் ஒழுக்கசீலர்களாக இல்லாமல் கொடியவர்களாக இருக்கலாம். வடிவத்தில் வளைந்திருந்தாலும்,  சிலர் உயர்ந்த ஒழுக்கசீலர்களாய் இருப்பர். அவரவர்களை வடிவால் கொள்ளாது, அவர்கள் செய்யும் செயல்களை வைத்தே அறிய வேண்டும்.

எல்லோரும் உரையெழுதும்போது பரிமேலழகர் கூறியதை வைத்து, வடிவு என்று சொல்லப்பட்டிருப்பதாக கற்பனை செய்து, இரண்டாம் வழியிலே எழுதியிருக்கிறார்கள். பரிமேலழகர் சொல்வது இதுதான்: ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல் - அவ்வகையே தவம் செய்வோரையும் கொடியர் செவ்வியர் என்பது வடிவால் கொள்ளாது அவர்செயல்பட்ட கூற்றானே அறிந்து கொள்க. (கணைக்குச்செயல் கொலை, யாழுக்குச் செயல் இசையால் இன்பம் பயத்தல். அவ்வகையே செயல் பாவமாயின் கொடியர் எனவும், அறமாயின் செவ்வியர் எனவுங் கொள்க என்பதாம். இதனால் அவரை அறியும் ஆறு கூறப்பட்டது”. “ஆங்கு அன்ன” என்பதற்கு “அதே போல” என்றும், “வினைபடு பாலல் கொளல்” என்பதற்கு “அவர்கள் செய்யும் செயல்களை வைத்தே அவர்களை அறிதல் வேண்டும்” என்றும் பொருள் கொள்ளவேண்டும். பரிமேலழகர் தாமாக அம்பு நேரானது, யாழ் வளைந்தது என்பதனால், “வடிவால் கொள்ளது” என்று தம்முடைய கற்பனையைச் சேர்த்திருக்கிறார்.மற்றவர்களும் அதையே பின்பற்றி பொருள் செய்துள்ளனர்.

மாற்றுக்குறள் அதே உவமைகளை வைத்து எழுதுவது சற்று கடினமாக இருந்தது இன்று! சுற்றி வளைத்து சொல்வது போல தோன்றியதால் இரண்டாவது குறளை எழுதினேன்.

இன்றைய குறள்(கள்):
செந்நெறியோர் செய்வினையே காட்டிவிடும், கொல்லுமம்பும்
தந்துயிர்க்கும் யாழிசையும் போல்
seneRiyOr seyvinayE kATTiviDum kollumambum
thandhuyirikkum yAzhisayum pOl

இசைவீணை, கொல்லம்புப் போலொருவர் செய்கை
இசைவசையைக் காட்டி விடும்
isaivINai kollambup pOloruvar seigai
isaivasaiyaik kATTi viDum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...