24th
January, 2013
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.
(குறள்
278: கூடாவொழுக்கம் அதிகாரம்)
Transliteration:
Manaththadhu mAsAga mANDAr nIrADi
mARaindhozhugu mAndhar palar.
Manaththadhu – Mind is
mAs(u) Aga – ruined, filled
with filthy thoughts
mANDAr – as if a respectable person,
nIrADi – taking dip in the holy waters
(putting up an act for others to see)
mARaindh(u) ozhugu – but
dwell in the filthy thoughts and practice away from others eyes.
mAndhar palar –
there are many such people (who are two faced)
The commentary
for this verse is truly confusing from almost all commentators. Salomon Pappaiah one of the contemporary commentators
has given a very short and apt commentart on this verse. Others from
M.Varadharajanar, M.Karunanidhi (in recent times), Parimelazagar, are confusin
and unclear. Parimelazagar seems to have quoted ManakkuDavar verbatim for this
kuraL, pointing out how he interpreted “mAnDAr nIRrADi”. So both could be from
the same time period.
The word ordering
seems to have posed the confusion for this verse. The metrical and grammatical
structure are in tact, but the poem not does lend itself for an easy
interpretation. If we use, “mAnDAr nIrADi manaththadhu mASAga maRaindhozgugu
mAndhar palar” as the word order, then though the poetry is lost, meaning
is clear.
There are people
that have filth in their minds and do deeds, hidden and ignominious, unfitting
their external appearance of puritans, portray a respectable front by
going and taking dips in holy waters.
vaLLuvar implies to avoid such company in this.
Including this
verse, the last above three verses are all about fake puritans. All of them
caution to beware of such disreputable
characters.
“Holy dips for the sake of world,
to portray a fake glorified puritan;
Such people of ignominious thoughts and deeds of filth are a ton"
தமிழிலே:
மனத்தது - மனமானது
மாசாக - மாசு+ஆக - அழுக்கான எண்ணங்களினால்
பாழாக
மாண்டார் - மாட்சிமை பொருந்தியவர்போல்
அல்லது மாண்பு மிக்கவர்கள் போல்
நீராடி - புண்ணிய நீர்களிலே மூழ்கி எழுவர்
(பிறருக்கான வேடம்)
மறைந்தொழுகு - ஆனால் மாசான எண்ணங்களில்
மறைவிலே ஒழுகுவர்
மாந்தர் பலர் - அப்படிப்பட்ட
மனிதர்கள் பலர் இருக்கின்றனர்
இந்த குறளுக்கான விளக்கத்துக்கு
ஏறக்குறைய அத்துணை உரையாசிரியர்களும் தடுமாறியிருக்கிறார்கள். சாலமன் பாப்பய்யா அவர்கள்
இரண்டுவரிகளில் சொல்லியதே சரியாக இருக்கிறது. பரிதியார், மு.வ, கருணாநிதி, பரிமேலழகர்
இவர்கள் உரைகள் தெளிவாகவும் இல்லை, பொருந்துகிறார் போலவும் இல்லை. மணக்குடவர் “மாண்டார் நீராடி” என்பதை, “மாட்சிமைப்பட்டாரது
நீர்மையைப் பூண்டு” என்று பொருள் செய்திருப்பார். பரிமேலழகர், இதை மேற்கோள் காட்டி,
இப்படிச் சொல்வாரும் உண்டு என்பதனால், மணக்குடவர் சமகாலத்தவராகவோ அல்லது பரிமேலழகருக்கு
முன்போ இருந்திருக்கவேண்டும். அல்லது வேறு ஒருவர் இதே கருத்தைச் சொல்லி, அதை பின்னாளில்
மணக்குடவர் எடுத்துக்கொண்டிருக்கவேண்டும்.
வார்த்தைகளை சரியான
முறையில் பொருத்தி பொருள் செய்தால், எளிதில் விளங்கக்கூடிய குறள்தான். “மாண்டார்
நீராடி மனத்தது மாசாக மறைந்தொழுகு மாந்தர் பலர்” என்று படித்தால் நேரடி பொருளே
வருகிறது. மாண்புடையவர்போல் புண்ணிய நீர்களுக்குச் சென்று நீராடியும் (உலகத்தோருக்கு
உத்தமராகக் காட்டிக்கொள்ள), உள்ளத்திலே அழுக்கு எண்ணங்களால் பாழாகி, அப்பாழாம்
எண்ணங்களுக்கேற்ற தீய நடவடிக்கைகளில்,யாரும் அறியாமல் ஒழுகும் மனிதர்கள் பலர் இருக்கின்றனர்
என்பதே இக்குறள் சொல்லும் கருத்து.
வேடதாரி ஒழுக்கசீலர்களைப்பற்றி
மற்றொரு குறள்தான் இது. இதுவுள்ளிட்ட மேற்கண்ட
மூன்று குறள்களுமே போலி ஒழுக்கசீலர்களைப் பற்றி கூறி அவர்களோடு சேராமல் நீங்கியிருக்க
வேண்டுமென்று அறிவுறுத்துகின்றன.
புறத்தே புண்ணியரைப்போலவும்
அகத்தே மற்றவர்கள் அறியாவண்ணம் தீயெண்ணங்களையும் செயல்களையும் கொண்டவரைச் சேராதிருக்கவேண்டியதைப்
பற்றியே இம்மூன்று குறள்களும் பேசுகின்றன.
இன்றைய குறள்:
புண்ணியநீர் ஆடுவர் மாண்பினர்போல் வேடமிட்டு
எண்ணத்தில் மாசுடைய வர்
puNNiyanIr ADuvar mANbinarpOl vEDamiTTu
eNNaththil mAsudaiya var
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam