ஜனவரி 23, 2013

குறளின் குரல் - 286


23rd January, 2013

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து
                   (குறள் 277:  கூடாவொழுக்கம் அதிகாரம்)

Transliteration:
puRankunRi kaNDanaiya rEnum agankunRi
mUkkiR kariyAr uDaiththu

puRam(n) - in external appearance (some pretentious ascetics are)
kunRi – a red seed with a nose like tip in black
kaND(u) anaiyarEnum – though look like fair (in their appearance not in physical color but in character)
agam – in their hearts,
kunRi  - a red seed with a nose like tip in black
mUkkiR kariyAr uDaiththu –  they are like its tip which is black (again not in physical sense, but the character) and have a chatacter which is black

We must read this verse with an assumption that this is also about pretentious ascetics. The “kunRi” referred to here is a red seed with a tip that’s black. Here in this verse vaLLuvar likens some pretentious ascetics that appear fair as the redseed (the color is likened to the character), but they are in fact in their hearts, he further says, like the black tip of the same seed, completely unpleasant and evil with a lot of dirt in their mind.

This verse has a generic tone that seems to fit generally to everyone, not just for ascetics. In fact the very chapter is applicable to everyone, those it comes under the major part of “ways of ascetic life”

“Even the people appear as fairness of redseed, their character being bright
 They may in fact be like the tip of the same seed, as black as darkness in sight”

தமிழிலே:
புற(ம்)ங் - வெளித்தோற்றத்தில்
குன்றி - குன்றிமணி (
கண்(டு) அனையரேனும்  - போல செம்மை நிறத்தராக (குணத்துக்குச் சொலப்பட்டது) தோன்றினாலும்
அக(ம்)ங் - உள்ளத்தில்
குன்றி - குன்றிமணியின்
மூக்கிற் கரியார் உடைத்து - முனையில் (மூக்கு போன்றது) கருமையாக இருப்பது போல இருப்பர் சில புறத்தவ வேடத்தர்.

இக்குறளும் தவப் போலிகளைப்பற்றியது என்றுகொண்டு படிக்கவேண்டும். குன்றிமணி ஒரு சிறிய சிவப்பு நிற விதை, அதன் முனை அல்லது மூக்கு கருத்திருக்கும். இக்குறள் குன்றிமணியை எடுத்துக்காட்டாகக்கொண்டு, வெளித்தோற்றத்தில் பெரும்பாலும் சிவந்த நிறத்தை உடையதான குன்றிமணியைப் போன்றவர்களாக குணத்தில் செம்மையோடு இருந்தாலும், உள்ளத்தில் அதே குன்றிமணியின் மூக்கினைப் போல கருப்பு எண்ணங்கள் கொண்டவ தவவேடர்களும் இருக்கிறார்கள்.

குன்றிமணியின் செம்மை, கருமைப் பகுதிகள் செப்பமுடமை, அது இன்மையாகிய பண்புகளுக்கு உவமையாக்கியதால், பண்புவமையாகின்றன.

இக்குறள் இவ்வதிகாரத்துக்குமட்டும்தான் அல்லது துறவியருக்கு மட்டும்தான் என்றில்லாமல், ஒரு பொதுக்கருத்தாக பலவகைப்பட்ட மனிதருக்கும் பொருந்தி வருகிறது. சொல்லப்போனால் கூடா ஒழுக்கமும் சமூகத்தில் எல்லோருக்குமே பொருந்திவரக்கூடிய கருத்துதான். தவப்போலிகளுக்கு என்பது ஒரு அதிகாரத்தைச் சேர்ந்த கருத்துதான்.

இன்றைய குறள்:
குன்றிமணி  போல்செம்மைத் தோற்றமுண்டாம் - உள்ளத்தில்
குன்றிநுனி  போல்கருத்த வர்க்கு

kunRimaNi pOlsemmai thORRamunDAm– uLLaththil
kuNRinuni pOlkaruththa varkku

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...