ஜனவரி 22, 2013

குறளின் குரல் - 285


22nd  January, 2013

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
                   (குறள் 276:  கூடாவொழுக்கம் அதிகாரம்)

Transliteration:
Nenjin thuRavAr tuRandhArpOl vanjiththu
vAzhvArin vankaNAr il

Nenjin thuRavAr – In their hearts never renounce anything
tuRandhArpOl – But they put up a façade for the world, as if they have.
vanjiththu vAzhvArin –  and thus, cheating the world for their livelyhood
vankaNAr il – none worse and hard hearted than they are.

Once again, a verse about ascetics that are appearing to be renounced, yet have all desires in mind; This verse scolds them as merciless cruel people without any compassion for people that the cheat by their cheap tactics.

Why would they be described as cruel and unkind towards others? Those who believe in their appearances keep them in pinnacle of a place and listen to their words blindly, getting misled. How many lives do such cameo ascetics affect adversely? Is there a worse heinous act other than cheating others for serving self, that too in the garb of an elevated ascetic, projecting something contray to their true color?

A couple of verses from “NIdhi neRi viLakkam”, a known poetic work on ethics, say, such people should not be happy that they cheat others as the God above is watching them and they should be fretting about that instead of being happy; other garbs will at least cover the body from the torturous cold of winters and heat of summers. But the garb of an ascetic will not cover any, most especially the mind and heart of the person that can steer away to further evil ways, if the person is truly not an ascetic.

Who else is more merciless than the one that cheats
 With the façade of renounced, yet none but evil replete”

நெஞ்சின் துறவார் - நெஞ்சத்தாலே எதையும் துறக்காமல்
துறந்தார்போல் - எல்லாவற்றையும் துறந்த துறவியரைப்போல உலகோர்முன் நடித்து
வஞ்சித்து வாழ்வாரின் - நம்பும் உலகோரை தம்முடைய வஞ்சகதால் ஏமாற்றி வாழ்வோரை விட
வன்கணார் இல் - இரக்கமிலாத கொடும் நெஞ்சினர் யாருமில்லை.

மீண்டும் புறத்தே துறவும், அகத்தே ஆசைகளையும், வஞ்சனைகளையும் துறவாத போலித்துறவிகளைப்பற்றிய குறள். இக்குறளில் அத்தகையோரைப்போல் கொடிய, ஈரமில்லாத, இரக்கமில்லாத நெஞ்சத்தினர் வேறு யாருமில்லை என்று நிந்திக்கிறார் வள்ளுவர்.

புறத்துறவு கொள்வோர் ஏன் இரக்கமில்லாதவர்கள் என்று சித்தரிக்கப்படுகிறார்கள்? அவர்கள் துறவு வேடத்தை நம்பி, அவர்களை உயர்ந்த இடத்தில் வைத்து, அவர்களின் சொற்களைக்கேட்டு நடப்பதும், அவர்களுக்காக செயல்களைச் செய்யவைப்பதுமான துறவிகளால் எத்தனை வாழ்வுகள் பாழ்படுகின்றன? பிறரை தம் சுய நலத்துக்காக நம்பவைத்து ஏமாற்றுதலைவிட வஞ்சகச் செயல் ஏதேனும் உண்டா? நெஞ்சில் சற்றும் இரக்கமில்லாதவர்களே அவ்வாறு செய்வார்கள்.

இத்தகையோரைக் குறித்தே பாடப்பட்ட, நீதிநெறிவிளக்கப்பாடல் ஒன்று:
                                                                                                                            
வஞ்சித் தொழுகு மதியிலிகாள் யாவரையும்
வஞ்சித்தே மென்று மகிழன்மின் - வஞ்சித்த
எங்கு முளனொருவன் காணுங்கொ லென்றஞ்சி
அங்கங் குலைவ தறிவு.  

வஞ்சிப்பவர்கள் எல்லோரையும் வஞ்சித்தோம் என்று மகிழ்ந்திருக்வேண்டாமென்றும், மேலேயிருக்கும் கடவுள் எல்லாவற்றையும் கண்டுகொண்டிருக்கிறான் என்று அங்கம் நடுங்குவதே அறிவுடமையாம்.

மற்றுமொரு பாடலும் அவர்களுக்கு அறிவுறுத்தவே சொல்லப்படுகிறது.
நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை                                                  
கஞ்சுக மன்று பிறிதொன்றே - கஞ்சுகம்  
எப்புலமுங் காவாமே மெய்ப்புலங் காக்குமற்  
றிப்புலய் காவா திது.   

மற்ற போர்வைகளாவது, மெய்ப்புலன்களை பனி, வெயில் இவற்றிலிருந்துகாக்கும், தவவேடமாகிய பொய்ப்போர்வை, எவ்வித புலனையும் காக்காது என்பதிதன் பொருள்.

இன்றைய குறள்:
துறக்கா  ருளத்திலாயின் அன்னார்போல் ஏய்க்கும்
புறத்துறவோ ரின்கொடியர் யார்? 
(துறக்கார் உளத்தில்; ஆயின் அன்னார்போல் ஏய்க்கும் புறத் துறவோரின் கொடியர் யார்?)

thuraKKa ruLathilAyin annArpOL Eykkum
puRaththuRavO rinkoDiyar yAr?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...