21st
January, 2013
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.
(குறள்
275: கூடாவொழுக்கம் அதிகாரம்)
Transliteration:
paRRaREm enbAr paDiRRozhukkam eRReRenRu
Edham palavum tharum
paRRaREm enbAr –
Claiming they have no attachments, yet living a false sainthood
paDiRRozhukkam – the
pretense of a discipline from such falsehood
eRReRenRu – to be
self-pitiful repeatedly as to why they ever did all the evil they did
Edham – painful and sorrowful repurcussions
Palavumtharum – many
will befall on them
Showing as if unattached in worldly
pleasures, yet iindulgent in evil deeds hidden from public eyes, the falsely
renounced beings will get painful sorrows for them to dwell in self pity
repeatedly as to why they did what they did.
The word “paRRaRREm” used in this verse has
been used in a similar context of “hospitality” for family persons. In later
chapter to be seen on “renouncing or saintly state”, two verses echo the same
thought. The verse “paRRiviDA iDumbaikkaN….”, says that as long as a renounced
person does not leave the attachments that he is holding on to, (but appearing
as if the person does not have attachments), the person will have painful
miseries that follow him always. Another verse in the same chapter gives a
similar thought (“paRRaRRa kaNNe piRappaRukkum”) also.
“Unattched
in words, yet drowned in evil practices
Will
only give painful sorrows to self deceiting sages”
தமிழிலே:
பற்றற்றேம் என்பார் - சொல்லளவில் நாங்கள் எவ்வித பற்றுமில்லோம் என்னும் பொய்த்துறவிகளின்
படிற்றொழுக்கம் - பொய்யான ஒழுக்கம்
-அவர்கள் மறைவாகச் செய்கின்ற ஒழுக்கம் தவறிய செயல்கள்
எற்றெற்றென்று - தம்மீது தாமே இரங்கி
இரங்கி வருந்தும் படியான
ஏதம் - கேடு மற்றும் அதனால் விளையும் துன்பம்
பலவுந்தரும் - பலவற்றைத் தந்துவிடும்
பிறரிடத்தில் தம்மை பற்றுகள் ஏதுமில்லா ஞானியரைப்போலவும்,
துறவியர்களைப் போலவும் காட்டிக்கொண்டு, ஆனால் மறைவாக அனைத்து வித குற்றங்களையும் செய்துகொண்டிருக்கும்
போலித்துறவிகள், ஞான வேடதாரிகள், தம்மீது தாமே, ஏன் இவ்வாறு செய்தோம் என்று எண்ணி எண்ணி
வருந்தும்படியான துன்பங்களை, அவர்களது தீய ஒழுக்ககேடுகளே தந்துவிடும்.
பற்றற்றேம் என்பதைப்பற்றி இல்லறவியலிலும், “பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படாதார்” என்று வள்ளுவர்
கூறியிருப்பார். அங்கு போலியான விருந்தோம்பலில் ஈடுபடும் இல்லறத்தர்களைப் பற்றி கூறியிருப்பார்
வள்ளுவர்.
இக்குறள் சொல்லும் கருத்தை ஒட்டிய இருகுறள்கள் துறவு அதிகாரத்திலும்
பின்னால் கூறப்படும். இதே குறளின் கருத்தையே அங்கு கூறியுள்ள குறள்: “பற்றி விடாஅ இடும்பைகள்
பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு” பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத
வரை, துன்பங்களும் விடாமல் பற்றுகின்றன என்பது இதன் பொருள். இது இன்றைய குறளின் மறு பதிப்பேதான், துறவிகளின்
பொய்யொழுக்கம் பற்றி பேசாமல் தவத்தைப்பற்றி மட்டும் குறித்து.
சற்றே மாற்றிச்சொல்லும் குறள்: “பற்றற்ற
கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்” ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான்
பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்,
என்பதுதான் இதன் பொருள்.
இன்றைய குறள்:
சொல்லளவில் பற்றிலார் பொய்யொழுக்கம் துன்பமே
நல்குமென்றும் எண்ணிவருந் த
sollaLavil paRRilAr poiyozukkam thunbamE
nalgumenRum eNNivarun dha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam