18th
January, 2013
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.
(குறள்
272: கூடாவொழுக்கம் அதிகாரம்)
Transliteration:
vAnuyar thORRam evanseyyum thannenjam
thAnaRi kuRRap paDin
vAnuyar thORRam – An
elevated appeareance as an ascetic
evanseyyum – would do what to
a person
thannenjam – in whose heart
thAn aRi – he/she knows
kuRRappaDin – and still
indulges in misneeds that are non virtuous
What use will it yield just having sky-high demeanor
of an ascetic, with ill thoughts in heart, and improper conduct in deeds?
vaLLuvar, pokes at the falsehood of those who wear the hood of renunciant and
yet indulge in all improper deeds. In the previous verse, he said the governing
five element would laught at such people.
When someone does not know that they are indulging
in misdeeds, at least appropriate propiation or atonement is possible. Since
vaLLuvar uses the phrase “thAm aRi”, implies the indulgent is fully aware of
the misdeeds committed – which makes the heart permanently tainted.
vaLLuvar could have probably named this chapter as “avertable
conduct for ascetics” as he has addressed almost all the verses towards them
and also because this chapter follows the chapter on “penance”
“What use is to have a sky high
demeanor of a penitent,
When ones own heart
knowingly is in deeds of miscreant?
தமிழிலே:
வானுயர் தோற்றம் - ஒருவருக்கு வானளவுக்கு தோற்றம் தரும்
கோலம் மட்டும் (தவக்கோலம்)
எவன்செய்யும் - என்ன பயனளிக்கும்?
தன்னெஞ்சம் - அவருடைய நெஞ்சத்தில்
தான் அறி - அவரே அறிந்த
குற்றப்படின் - ஒழுக்கமற்ற குற்றத்தில்
அவர் ஈடுபடுவாராயின்?
நெஞ்சிலே கள்ளத்தோடு,
ஒழுக்கமற்ற குணங்கொண்டு குற்றஞ்செய்வாருக்கு, வானளவு உயர்ந்தோராகக் காட்டும் தவக்கோலம்மட்டும்
என்ன பயனளிக்கும்? இக்குறளில், அவர் கண்ணுற்ற வேடம்பூண்ட போலியான தவசிகளை கேலியாகக்
குத்தி வினவுகிறார் வள்ளுவர். சென்ற குறளில் ஐம்பூதங்களும் நகைக்கும் என்றார். பிறர்
கண்டுபிடிப்பதற்கு முன்னரே தவறு செய்யும் நடிப்பு ஒழுக்க சீலர்களுக்கே அவர்களின் குற்றம்
தெரியுமல்லவா? அவர்களுக்காகவே சொல்லப்பட்ட குறளிது,
அறியாமல் செய்தகுற்றங்களுக்காவது
கழுவாய் உண்டு. தாம் அறி குற்றங்கள் என்றதனால், தவவேடம் பூண்ட ஒருவர் தெரிந்தே செய்த
குற்றங்களுக்கு அவரது நெஞ்சே சாட்சியாக இருப்பதால், அதுவும் கறைபடிந்ததாகவே ஆகிவிடும்.
இவ்வதிகாரத்தை படிக்கும்போது,
இதற்கு போலி தவஒழுக்கு என்றே வைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. தவம் அதிகாரத்திற்கு
பின்னர் வருவதோடு, இது தவசிக்களுக்குக் கூடா ஒழுக்கத்தைப் பற்றியே பேசுகிறது.
இன்றைய குறள்:
தம்குற்றம் தன்னெஞ்சில் தாமறிந்தும் தன்னுருவில்
அம்பரம் போலுயர்வெ தற்கு?
thamkuRRam thannenjil thAmaRindhum thannuruvil
ambaram pOluyarve dhaRku?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam