ஜனவரி 16, 2013

குறளின் குரல் - 280


28:  (avertable conduct - கூடாவொழுக்கம்)
[This chapter is about the avertable conducts traits for ascetics that are in penitential path of seeking supreme knowledge for the worldly well being. Such persons are identified, described, condemned, scolded and advised through the chapter]

17th January, 2013
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
                   (குறள் 271:  கூடாவொழுக்கம் அதிகாரம்)

Transliteration:
Vanja manaththAn paDiRozhukkam bhudangaL
Aindhum agaththE nagum

Vanja manaththAn – person of cunning heart and mind
paDiRR(u) ozhukkam – deceitful conduct
bhudangaL Aindhum – the five elements of nature that govern five perceptory organs
agaththE nagum- will laugh within themselves (looking at the feigned conduct)

Being cunning at heart, and without any proper conduct, those who show themselves as serious penitents, will be laughed at for their deceitful conduct by the five elements that govern perceptory organs – vaLLuvar says in his very first on this topic.

This verse fits the feigning ascetics. They advise others to be devoid of attachments and desires, while the very same are in them in plenty of measure. He underscores the double-faced nature of such shallow ascetics in this verse.

That is allright; but why then five elements be laughing at such lowly bogus ascetics? It is just the belief that has been there forever that these five elements bear witness to all acts of any human being, even if none other is there as witness to their deceit.

“The fivelements of perceptory organs will laugh and mock
 At the deceitful penitents that are cunning and shallow stock”

தமிழிலே:
வஞ்ச மனத்தான் - மனதிலே வஞ்சமும், நெறியின்மையும் உடைய தவத்தோர்
படிற்றொழுக்கம் - போலி ஒழுக்கம்
பூதங்கள் ஐந்தும் - பொறிகளை செலுத்தும் ஐம்பூதங்களும்
அகத்தே நகும். - தமக்குள்ளாகவே எள்ளிச் சிரிக்கும்

நெஞ்சிலே வஞ்சமும் நெறியின்மையும் உடையவராயும் தம்மை தவநெறியில் ஒழுகுபவராகவும் காட்டிக்கொள்பவர்களின் போலி ஒழுக்க்கத்தை, அவரது பொறிகளைச் சார்ந்த ஐம்பூதங்களுமே தமக்குள்ளாக எள்ளி நகைக்கும் என்கிறார் வள்ளுவர் இக்குறளில்.

இக்குறள் ஆஷாடபூதிகள் எனப்படும் போலி சந்நியாசிகளுக்கு நன்றாகப் பொருந்தும். காமம் (புலன்வழி இச்சைகள் யாவும்) தம்மிடத்திலேயே மண்டியிருக்க, அதைக்கொள்ளாமைப்பற்றி பிறருக்கு அறிவுறுத்தும் இரட்டைவேட களவொழுக்கத்தை சுட்டுகிறார் வள்ளுவர். அதைத்தான் படிற்றொழுக்கமாகக் குறிக்கிறார்.

ஏன் ஐம்பூதங்களும் நகைக்கவேண்டும். பிறர் அறியார் என்று நினைத்து செய்வனவற்றிர்க்கு ஐம்பூதங்களே சாட்சி என்னும் தொன்றுதொட்டு வரும் நம்பிக்கைத்தான் அதற்குக் காரணம்.

இன்றைய குறள்:
பொறியைந்தின் பூதங்கள் எள்ளிநகும் நெஞ்சால்
நெறிகெட்ட பொய்த்தவத்தோர் கண்டு

poRiyaindhin bhUdhangaL eLLinagum nenjAl
neRikeTTa poithavaththOr kaNDu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...