ஜனவரி 19, 2013

குறளின் குரல் - 282


19th January, 2013

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று
                   (குறள் 273:  கூடாவொழுக்கம் அதிகாரம்)

Transliteration:
Valiyil nilaimaiyAn valluruvam peRRam
puliyinthOl pOrththumEyn dhaRRu

Valiyil – without the strength of conviction required
nilaimaiyAn – a person of that state of weakness
valluruvam – the form of ascetic he adorns
peRRam – a cow or bull or buffalo (more likely cow! Why read on!)
puliyinthOl – tiger’s skin
pOrththu – wearing over to cover
mEyndhaRRu – trying to eat the new crop on the field.

A person without a determined mind, wanting to show off self as a strong person through the façade of ascetic face or other wise strong demeanor is like a cow trying to dress up in tiger’s skill and eat the grass crop.

The usual expression of tiger adorning cow’s skin to hide itself from its prey for attacking is used to depict the cruel villainy. But in this verse the revers is used. Parimelazhagar interprets this with a bit of his own imagination, which seem quite fitting too. Here, vaLLuvar refers to a cow adorning tiger’s skin to deceitfully eat new crop of grass. This could be either to scare away the people or to deceptively make the people think that even if the tiger is hungry, it would not eat grass. Either way, it is the cunning intent that is highlighted.

Those who forsake, family life to pursue ascetic path, when chase after other women exhibit their lack of conviction as well resolve to stay true to what they have undertaken. The go after what is not theirs because of weak persona for the path undertaken.

KALingar, another widely quoted commentator says, more directly. Even adorning tiger’s skin, a cow can only eat grass, not other animals. Similarly, the weak minded, even when they adorn the form of savants or mighty, can only be as weak as they are. This explanation seems more direct and makes sense too.

“A Weakminded person’s mighty façade
 Is like a cow eating grass in tiger’s hood”
தமிழிலே:
வலியில் - மனதின் உறுதியற்ற
நிலைமையான் - இயல்புடையவன்  (அதனால் ஒழுக்கம் தவறுகின்றவர்)
வல்லுருவம் - தம்மை ஒரு வலிமை உடையவராக காட்டிக்கொள்வது (தவத்திலோ, மற்றவாறோ)
பெற்றம் - பசுவானது (எருது, எருமை) - பசுவென்பதே பொருந்தும் (ஏன்?)
புலியின்தோல் - புலியினுடைய தோலை
போர்த்து - தன்னுடைய உண்மையான உருவத்தை மறைக்கப்போற்றிக்கொண்டு
மேய்ந்தற்று - இளம்பயிரை கள்ளத்தனமாக மேய்ந்தழிப்பது போலாகும்

தம்மனதில் உறுதியற்ற இயல்புடைய ஒருவர்,  தம்மை வலிமையுடையவராக தாமணியும் வேடத்தினால்  (தவத்திலோ அல்லது மற்றைய வழியிலோ) காட்டிக்கொள்ள முயல்வது, தன்னுடைய உண்மையான உருவத்தை ஒளித்து புலித்தோலை அணிந்த பசு கள்ளத்தன்மாக இளம்பயிரை மேய்வதைப்போல.

பசுத்தோல் போர்த்திய புலி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கு பசு என்பது வலிமை இல்லாதவரைக் குறிப்பதற்காக. புலிவேடம் போட்டால் பிறருக்கு நெருங்க பயம் வரும் என்கிற எண்ணம் ஒருபுறம். தவிரவும், “புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்கிற வழக்கு இருப்பதனால் பயிரை மேயும் போதும், பார்க்கும் காவலர்கள் அவ்வாறு எண்ணமாட்டார் என்னும் திருட்டு எண்ணம் வேறு.

இல்லறம் துறந்து, துறவறம் மேற்கொள்பவர்கள், அதற்குரிய ஒழுக்க வலிமைக் கொள்ளாது, பிறருக்குரிய பெண்டிர்மேல் விழைவதும்,  தமக்குரியன விட்டு பிறர்குரியன தேடி அலையும் கள்ளத்தனம் இக்குறளால் விளக்கப்படுகிறது.  இக்கருத்து பரிமேலழகர் கருத்தினை ஒட்டியது.

காளிங்கர் இதை வேறுவிதமாக உரை செய்திருக்கிறார். வலிமைபோல் புலியின் உடை அணிந்தாலும் பசு அதற்குண்டான புல்லைத்தான் தின்னும். அதே போல ஒழுக்கத்தில் தவசிகளப் போல தோன்றினாலு, மனதில் அந்நிலைக்குண்டான திட்பம் இல்லாதவர்கள் ஒழுக்கக்கேடான செயல்களையே செய்வார்கள் என்கிறார் காளிங்கர். பரிமேலழகர் உரை, கற்பனைச் செறிவுடன் இருந்தாலும், காளிங்கர் உரை இக்குறளைப் பொருத்த அளவில், நேரடியாகவும், பொருத்தமாகவும் உள்ளது.

இன்றைய குறள்:
புலித்தோல் அணிந்துபயிர் மேய்ப்பசுபோல் கள்ளம்
வலிவின்றி கொள்வோர் தவம்

puliththOl aNindhupayir mEyppasupOl kaLLAm
valivinRi koLvOr thavam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...