ஜனவரி 14, 2013

குறளின் குரல் - 278


15th January, 2013
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
                   (குறள் 268:  தவம் அதிகாரம்)

Transliteration:
kURRam kudhiththalum kaikUDum nORRAlin
ARRal thalaipaT Tavarkku

kURRam - Death
kudhiththalum – escape from that (death)
kaikUDum – is attainable
nORRAlin – penance
ARRal – to do
thalaipaTTavarkku – if a person attempts and does

The story of Markanteya, where Lord Shiva protects his devotee from the “pasaa”, the death noose of the Lord of death, forms basis for this verse. One who is seriously focused in penance can escape from the dealth – i.e at least for a long period of time, if not permanently.

Permanent escape from death is impossible and is against the nature’s law. Even the incarnations of heavenly God were subject to passing away eventually. What is born must perish is the nature’s law.

Since penance involves rigor to withstand the torturous conditions that cause physical discomfort, to bear the external pains becomes easy for penitents. Also the breathing exercise practiced by such penitents grant them a long life.

“Those that practice penance will even pass death
as before penitents, his job will fail, for god of death”

தமிழிலே:
கூற்றம் - மரணம்
குதித்தலும் - பிழைத்தலும்
கைகூடும் - கிடைக்கப்பெறும்
நோற்றலின் - தவம்செய்தலை
ஆற்றல் - செய்ய
தலைப்பட்டவர்க்கு - முற்பட்ட ஒருவருக்கு

மார்க்கண்டேயேனை காலன் அணுகாமல் சிவன் காத்த புராணம் அறிந்தவொன்று. இக்குறள் சொல்வது அப்புராணக்கதையின் அடியை ஒட்டிதான். முனைந்து தவவொழுக்கத்தில் ஈடுபடும் ஒருவருக்கு, மரணத்திலிருந்துகூட பிழைத்துக்கொள்ளுவது இயலும்.

மரணத்திலிருந்து பிழைத்துக்கொள்ளலாம் என்று சொல்வதால், நிரந்தரமாக என்ற பொருள் கொள்ளக்கூடாது. இறைவனின் அவதாரங்களும் கூட, பூமியில் பிறந்தால், வாழ்ந்து முடிந்து மடியவேண்டும் என்பது இயற்கை.

தவம் என்பது ஒரு கடுமையான பயிற்சி. அதற்கு தேவையான பயிர்ச்சி உடலுக்கு நேரக்கூடிய புறத்துன்பங்கள தாங்ககூடிய வலிவை தந்துவிடும். தவிரவும், மூச்சுப்பயிற்சியும் தவயோகிகள் செய்வதுதான். இவற்றால் ஆயுளை நீட்டிக்கலாமே தவிர, இறவாமலே இருப்பது இயற்கைக்கு ஒவ்வாதது.

இன்றெனது குறள்:
கூற்றமும் தோற்றிடும் நோற்பெனும் ஆற்றலைத்
தேற்றிய ஏற்றமிக்கார்க் கு

kURRamum thORRiDum nORpenum ARRalaith
thERRiya ERRamikkArk ku

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...