14th
January, 2013
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
(குறள் 267: தவம் அதிகாரம்)
Transliteration:
Thannuyir
thAnaRap peRRAnai Enaiya
Mannuyi
rellAn thozhum
Thannuyir
– The illusion of life of thinking that soul is “self”
thAn –
and the ego of “me” and “I”
aRappeRRAnai
– who are rid of that (penitents)
Enaiya –
other
Mannuyir
ellA(m) – all lives on earth
Thozhum –
will worship
Why does anyone have
the ego of “I”, “me”, or “mine”? Usual
answer for this from the wise souls for long has been, because of illusory
feeling that the soul is “self”. This could be either because of true
realization, or just as a figurative expression. The human life cycle that is
subject to birth, growth, living, decaying and eventually retiring to pass
away, is known to all of us. Who gives this life to our body? Or where does it
go after passing away? These questions have been asked time and again for ever
with seemingly sensible, understood but mostly riddled answers.
Without getting caught
in these illusions,before the soul escapes the mortal coil, to be rid of the
self bloatedness of “me”, a search with clarity for true knowledge and the
rigor of penance are required. Only penitents endure the torturous extremes of
weather, be in penance with the single pointed focus. Such penitents will be
worshiped all living beings of this earth. This is thought expressed in this
verse.
While writing the
equivalent verse, a poem of Sage Arunagiri from Kandar Anubhuthi, flashed in
mind with the words, “agamAyai” and “segam” as if it is providential. In a way
that verse is indirectly connected to idea of penance; expresses how the sage
feels that he is so caught in the web of worldly temptations without focusing
on higher being.
Penitents, rid of the illusion of “self” from soul
Are worshiped by lives on earth, one and all”
தமிழிலே:
தன்னுயிர் - உடலோடு ஒட்டியிருக்கும்
தன்னுடையது என்று எண்ணவைக்கும் உயிரே
தான் - தான்தான் என்கிற அகங்கார மாயை
அறப் பெற்றானை - சூழாமல் அகன்றாரை, ஒழியப்பெற்றாரை
ஏனைய - மற்றைய
மன்னுயிரெல்லா(ம்) - உலகில் வாழும் உயிரினங்கள்
யாவும்
தொழும் - வணங்கித் தொழும்
நான், தான், எனது, என்கிற அகம் சார்ந்த ஆணவம் ஏன் வருகிறது? இவ்வுடலோடு ஒட்டியிருக்கும்
உயிரே தான் என்கிற ஒரு மாயையினால். இது அநந்தகாலாமாக ஞானிகள் உணர்ந்தோ, உருவகித்தோ,
உரைப்பது. இவ்வுடல் அழியக்கூடியது, பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, தேய்ந்து, ஓய்ந்து,
முடிவது. கொடுக்கப்பட்ட உயிர் யாரால் கொடுக்கப்பட்டது? எங்கே சென்றது இறப்பிற்குப்
பின்னால்?என்கிற கேள்விகள் காலங்கள் தோறும் கேட்கப்பட்டு, புரிவது போலத்தோன்றும் விடைகளில்
இன்னும் புதிராகவே இருக்கின்றன.
இவ்வித மாயைகளுக்குள் சிக்காமால், உடலென்னும் கூட்டைவிட்டு ஓட்டம் பிடிக்கும்
உயிரையே “தான்” என்று நினைக்கும் அக மயக்கம் அறுவதற்கு தெளிந்த ஞானத்தேடலும், அதை அடையக்கூடிய
அருந்தவமும் தேவை! ஏனெனில் தவசீலர்கள்தான் வெயில், மழை, போன்ற மற்ற துன்பங்களைப் பாராது,
உயிரின் நிலையாமையை உணர்ந்து, அதைப்பொருட்படுத்தாது, அவமகற்றி தவத்திலிருப்பர். அத்தகைய
தவத்திருவுருவினரை இவ்வுலகத்தில் வாழும் உயிர்கள் அனைத்தும் வணங்கித் தொழுவர் என்பதே
இக்குறள் சொல்லும் கருத்து.
இக்குறளுக்கான மாற்றுக்குறள் எழுதும்போது அருணகிரியாரின் கந்தர் அநுபூதிப்
பாடல்,
“மகமாயை களைந்திட
வல்ல பிரான் முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ் சகமாயையுள் நின்று தயங் குவதே” என்னும் வரிகள் கீற்றாகத்தோன்றி,
தமிழ்க்கடவுளே வந்து நின்று வரிகள் தந்தாற் போன்று தோன்றியது.
தவத்தோடு தொடர்புடைய பாடலாகத்தான்
தோன்றுகிறது. எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி
நம்புலன்களை மறைக்கும் திரைகளை அகற்றிட வல்லோனான முருகனை (உயர் இறைப்பொருளை என்றே பொதுவாகக்கொள்வோம்),
அவனுடைய ஆறுமுகங்களால் மாயையை அகற்றும் வழிகளை மொழிந்தும், அவை ஒழியாமல், மூவாசைகளாகிய
மண், பொன், பெண் என்றிவற்றில் அமிழ்ந்து இவ்வுலகென்னும் மாயையில் நின்று தாம் உழலுவதை
அருணகிரியார் சொல்லி அலமருகிறார்.
இன்றெனது குறள்:
அகமாயை அற்றிட ஆற்றும் தவத்தோர்
செகத்தால் வணங்கப்
படும்
agamAyai aRRiDa ARRum thavaththOr
segaththAl vaNangap paDum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam