ஜனவரி 12, 2013

குறளின் குரல் - 276


13th January, 2013

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
                   (குறள் 266:  தவம் அதிகாரம்)

Transliteration:
Sudachchudarum ponpOl oLiviDum thunbanj
Chudachuda nOrkkiR pavarkku

Sudach – to refine with put it in high temperature fire
chudarum – shines, removed of dirt
ponpOl – like the gold
oLiviDum – will be bright with knowledge
thunbanj- when hardship and misery
Chudachuda – burns a person
nOrkkiRpavarkku – while does penance.

When the gold is put in fire its blemishes are removed and it becomes purer and shinier.  Simlarly, the more pains and obstacles that a person of penance endures, his blemishes are burnt and his mind becomes a dwelling place of supreme knowledge – is the meaning of this verse. Sage Agasthiya’s song has a line, “thunbap puDaththil iTTu ennai thUyavanAkki vaiththAi”  which addresses the Goddess saying, “you immersed me the miseries and gave me the resolve to endure and become purer”.

Penance is an effort, and an act of focusing mind toward a higher goal. Many impediments and miseries may befall on the person engaged in that goal trying to ruin the resolve. When the person engaged in penance is able to emerge victoriously facing all those, supreme knowledge is guranteed. A very simple thought to make us understand the value of endurance in our pursuit of higher goals.

By subjecting to burning fire more the gold does shine;
Enduring the pains of penance, make a pursuant to refine”

தமிழிலே:
சுடச் - தீயிலிட்டு புடமிடும்போது
சுடரும் - ஒளிரும், பொலிவு பெறும்
பொன்போல் - தங்கத்தைப் போல
ஒளிவிடும் - ஞான ஒளி பெருகிடும்
துன்பஞ் - துன்பமென்னும் தீயினால்
சுடச்சுட - தன் தீவினைகளை எரிக்க எரிக்க
நோற்கிற்பவர்க்கு - தவம் செய்கின்றவருக்கு

பொன்னைத் தீயிலிட்டு புடம் போடும்போதுதான் அது மாசைக்களைந்து, ஒளிரும் தூய தங்கமாகிறது. அதேபோல் துன்பபுடமிட இட, தவம் செய்பவர்களின் அஞ்ஞான மாசு அகன்று அறிவு ஒளிரும் அவர்கள் ஞானிகள் ஆகிறார்கள் என்பது இக்குறளின் கருத்து. அகத்தியர்பாடலென்று சொல்லப்படும் அம்பிக்கையைப் பற்றிய ஒருபாடலில், “துன்பப்புடத்தில் இட்டு என்னைத் தூயவனாக்கி வைத்தாய்” என்னும் வரியொன்று உண்டு.

தவம் என்பது ஒருமுகப்படுத்தும் ஒரு பயிற்சி, முயற்சி. அவ்வாறு முயலும் போது எத்தனையோ தடங்கல்களும், துன்பங்களும் வருவது இயல்பே. அத்தடங்கல்களையும் தாண்டி, துன்பங்களைப் பொறுத்துகொண்டு, அறிவை நோக்கிய ஒரு உறுதியும், அதனால் தெளிந்த ஞானம் அடைவதும் உறுதி.

பெருங்கதையில், இக்குறளின் முழுக்கருத்தையும் ஒட்டி வரும் வரிகள்: “கொள்கைக் கட்டழல் உள்ளுரமூட்டி மாசுவினை கழித்த மாதவர் போலத் தீயகதிலங்கித் திறல்விடு கதிரொளி சேடுறக்கிடந்த செம்பொன்”.

இன்றெனது குறள்:
புடமிட்ட பொன்னாய் பொலிவர் தமையே
புடமிட்டு  நோற்கின் றவர்

puDamiTTa ponnAi polivar thamaiyE
puDamiTTu nORkkinRavar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...