12th
January, 2013
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
(குறள் 265:
தவம் அதிகாரம்)
Transliteration:
thavamseyvAr thangkarumanj
seyvArmaR RallAR
avanjseyvAr AsaiyuT paTTu
thavamseyvAr – those who practice of penance
thangkarumanj seyvAr – do it as their
prime duty
maRRallAR- those who don’t or have no interest in penance
avam + seyvAr - indulge in useless activities (wasting
living days)
AsaiyuTpaTTu – pursuing materialistic or physical pleasures
Those wise and respected persons in practice of penance will always to
the righteous things. Those who are not practicing penance, will dwell in the
worldly materialistic as well as sensory organs- desiring pleasures and spend
their days on earth in wasted life
Parimelazhagar in his commentary says, “ the wisemen will practice
penance to be rid of life, disease, oldage and death cycle understanding that
which is not permanent, separate from the soul and causing pain to the physical
body must be rid of from their lives. Others who are caught in the web of
worldly pleasures will spend their days uselessly to only invite more births to
be this inescapable cycle of above-mentioned maladies.
Since these verses come under the canto on Ascetics, we must think that
they are meant only for ascetics and relinquished. But the general tone of
“maRRallAR” is slightly confusing. If it means those who are in that life and
do not do it as prescribed, it makes sense. We have to surmise that he has not
meant it for people of family life whose path is that of earning wealth and
purse all legitimate sensory pleasures of life.
As before, there are several works that have references to the thought
expressed by this verse either partially or fully.
“Serious pursuants of penance will
do the prescribed duties
Others will spend their life in
wasted and useless activities “
தமிழிலே:
தவஞ்செய்வார் - தவத்திலே ஈடுபடுவோர்
தங்கருமஞ் செய்வார் - அதையே தம்முடைய தலையாய கடனாகச் செய்வர்
மற்றல்லார் - மற்று அத்தவத்தை செய்யாதார்,
ஈடுபாடில்லாதார்
அவம் செய்வார் - வீணான செயல்கள் செய்வார்
(வாழ்நாளை வீணாளாக்கி)
ஆசையுட்பட்டு - பொருள் சார்ந்த, புலன்சார்ந்த இன்பங்களை நோக்கி
எவை முறையான கடமைகளோ அவற்றையே தவ வாழ்க்கையில் நாட்டமுடைய
பெரியர் செய்வர். அநத வாழ்க்கை நெறியினைக் கொள்ளாதார் உலக வாழ்வியலில் உழன்று பொருள்
மற்று புலன் சார்ந்த இன்பங்களில் தம் வாழ்நாட்களை வீணாக செலவழிப்பார்.
பரிமேலழகர் உரையில் “அநித்தமாய் மூவகைத் துன்பத்ததாய் உயிரின் வேறாய உடற்கு
வருத்தம் வரும் என்று ஒழியாது தவத்தினைச் செய்ய, பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களான்
அநாதியாகத் துன்பம் எய்தி வருகின்ற உயிர் ஞானம் பிறந்து வீடு பெறும் ஆகலின், தவம் செய்வாரைத்
'தம் கருமம் செய்வார்' என்றும், கணத்துள் அழிவதான சிற்றின்பத்தின் பொருட்டுப் பலபிறவியும்
துன்புறத்தக்க பாவஞ்செய்து கோடலின், அல்லாதாரை 'அவம் செய்வார்' என்றும் கூறினார்” என்று
தவம் செய்வாருக்கும், அவம் செய்வாருக்கும் உள்ள வேற்றுமையை தெளிவாகக் காட்டுவார்.
துறவறவியலில் வருவதால் இக்குறள்
மட்டுமல்லாது, இவ்வதிகாரத்தில் வரும் ஏனைய குறள்களையும் துறவறத்தில் ஈடுபட்டவர்களுக்கு
மட்டும் ஏற்றதாகக் கொள்ளலாம் என்றாலும், மற்றல்லார் என்பதில் யாரைக் குறிக்கிறார் என்கிற
தெளிவில்லை. துறவு வாழ்க்கையில் ஈடுபட்டு அதற்குரிய கடமைகளை செய்யாதவர் என்று கொண்டால்
குற்றமில்லை. மற்றபடி, இல்லற தருமத்தையும், அதைச் சார்ந்த பொருள் மற்று புலன் இன்பங்களை
வள்ளுவரே மற்ற அதிகாரங்களில் போற்றிச் சொல்லியிருக்கிறார்.
தவம் செவார் தம்கருமம் செய்வார் என்பதை “தலையாயார்
தம்கருமம் செய்வார்” (நாலடி 54) என்று நாலடியாரும், “ஈட்டுவார் தவமலான் மற்றீட்டினால்
இயைவதின்மை காட்டினார் விதியார்” என்னும் கம்பராமாயாணப் பாடல் வரிகளும் கூறும்.(கம்ப:
ஊர்தேடு 104)
ஆசையுட்பட்டு
அவம் செய்தலை ஒழிக்குமாறு, மணிமேகலையில் வரும், “தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த அவத்திறம் ஒழிகென்றவள்வயின் உரைத்தபின்
(மணி:7:12.4) வரிகள் கூறுகின்றன.
இக்குறளின் முழுக்கருத்தைக் கூறுவதாக அமைந்த கம்பராமாயணப்
பாடல் இதோ: (கம்ப: மந்திர 25)
“இழைத்த
தீவினையையும் கடக்க எண்ணுதல் தழைத்த பேரருளுடைத் தவத்தினாகுமேல்
குழைத்ததோரமிர்தினைக்
கோடல் நீக்கி வேறழைத்த தீவிடத்தினஇ அருந்தலாகுமே”
இன்றெனது குறள்:
தவமே
கடனாம் தவத்தோர்க்கு - அற்றோர்
உவப்பதோ
வீண்விருப்பி லே
thavame kaDanAm thavaththOrkku –
aRROr
uvappadhO vINviruppi lE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam