ஜனவரி 11, 2013

குறளின் குரல் - 274


11th January, 2013

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
                  (குறள் 264:  தவம் அதிகாரம்)

Transliteration:
vENDiya vENDiyAng keydhalAl seydhavam
InDu muyalap paDum

vENDiya – Whatever wished
vENDiyAng(u) – as wished
eydhalAl – because they will be attained
seydhavam – the penance done
InDu – in this place or birth
muyalappaDum – will be tried to be practiced (seriously by wise)

This verse forcefully tells the reason and advocates doing penance. Humanbeings do not do anything without appropriate returns; hence he says penance gives whatever one wishes as he/she wishes and hence the wise would do penance in this birth itself. In promoting this idea, vaLLuvar does it in two different ways. First, by saying that penance gives whatever one wishes, whenever. Secondly, vaLLuvar implies that those who do penance are wise to realize all that it gives. By saying so he kindles the self-respect of individuals to attempt it seriously.

The word “INDu” (ஈண்டு) denotes the current birth; hence implies that the benefits are in the following births according to some commentators. Others say that it assures a heavenly seat. We don’t have to take it exactly as commentators have said it. After all we have ample examples in “Siddhaas” and “jeevan mukthaas” that we see in our present birth itself that have achieved great heights due to their penance in the real sense of penance.

There is an inner connotation to all this. Penance, essentially is self-control and being focused. Both are essential ingredients for accomplishing a goal in anyone’s life. We see many glowing, glorious examples of human achievments in arts, science and sports every day. They don’t sit and meditate in a place or shut of their senses to absolute quiet and calmness to accomplish. They breathe and spend all their energies towards one thing they passionately pursue to accomplish the heights they desire; and they get the prize of penance in their lifetime itself.

There are several examples in literature about penance giving what is desired. kaliththogai, pazhamozhi, perungkadhai, sIvaga ChinthAmaNi, and Kamba RAmAyaNam are all the literary works that have ample citations to convey the thought as expressed by vaLLuvar.

What is wished will be attained as wished by penance;
Hence the wise would, in this birth for future assurance

வேண்டிய - விரும்பிய பயன்கள்
வேண்டியாங்(கு) - விரும்பியவாறு
எய்தலால் - அடைய முடியுமாதலால்
செய்தவம் - செய்யதக்கதான தவம்
ஈண்டு - இவ்விடத்தில், இப்பிறப்பில்
முயலப்படும் - முயற்சி செய்யப்படும் (அறிவுடையோரால்)

தவம் செய்யவேண்டியதன் காரணத்தை வலுவாகச் சொல்லுகிற குறளிது. மனிதர்கள் பயனில்லாமல் ஏதும் செய்யார் என்பதால், தவத்தை விரும்பியதை விரும்பியவாறு தருவது எனச்சொல்லி அதனால் அதை அறிவுடையோர் இப்பிறப்பிலேயே, இப்பூமியிலேயே செய்துவர் என்று சொல்லி இரண்டுவிதமாக ஊக்குவிக்கிறார். முதலாவது, விரும்பியதை விரும்பியவாறு தருவது. இரண்டாவது, அறிவாளிகள் இதைச் செய்வார்கள் என்று சொல்லி, தன்மானத்தை வேறு தூண்டுதலால்.

ஈண்டு என்ற சொல் இப்பிறப்பென்ற பொருளில் வருவதால் பயன்களை மறு பிறப்புக்கு ஏற்றிச் சொல்லுவதாகவும், இறந்த பின் அடையும் சுவர்கபதவியைச் சொல்வதாகவும் உரையாசிரியர்கள் சொல்லுவர். அப்படித்தான் பொருள்கொள்ள வேண்டும் என்றில்லை. இப்பிறப்பில் நற்பயனுறவும் தவவழியே சிறந்தது எனக்கொள்ளலாம். சித்தரும் முத்தரும் தவத்தின் பயனாக சித்திகளை இப்பிறப்பிலேயே அடைந்த சரித்திரங்கள் உண்டு.

இக்குறள்களில் ஓர் உள்ளுரைப் பொருளும் இருக்கிறது. தவம் என்பது புலன்களை வெல்லும் சுயக்கட்டுப்பாடு, மற்றும் கூரிய குவிந்த ஒருமுக எண்ணம் நிறைந்த செயற்பாடு.  இவை இரண்டுமே இன்றியமையாத மூலக்கூறுகள், ஒருவரின் வாழ்க்கைச் சாதனைகளுக்கும், அவர் வேண்டியன கிடைக்கப்பெறுதற்கும்! கலைகள், அறிவியல் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் பலர் அடைந்துகொண்டிருக்கும் வெற்றிகளையும் சாதனைகளையும் நம் வாழ்நாளிலேயே நாம் பார்க்கிறோம். அவையெல்லாம் அத்தனிமனிதர்களின் ஆழ்ந்த தவங்களே, அவற்றின் பயன்களே. அவர்கள் ஓரிடத்தில் இருந்து, மூச்சையடக்கி, ஆழ்நிலை தியானம் செய்து அவற்றை சாதிக்கவில்லை. ஒருமுக மனத்தோடும், சிந்தனையோடும் தாம் எடுத்துக்கொண்ட துறையில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாலேயே அவர்களால் உயரங்களைத் தொடமுடிகிறது. தவத்தின் பரிசாக அவர்கள் கருதுவதும் அவைதான்.

தவம் வேண்டியதைத் தரும் என்பதை உணர்த்தும் இலக்கியப்பாடல்கள் பல உள்ளன. “அருந்தவம் ஆற்றியார் நுகர்ச்சிபோல்” என்கிறது கலித்தொகை. “நோற்றார்க்குச் சோற்றுள்ளும் வீழும் கறி”, “முற்பெரிய நல்வினை முட்டின்றிச் செய்யாதார் பிற்பெரிய செல்வம் பெறலாமோ?” என்கின்ற பழமொழி வரிகள். “பெருந்தவம் உள்வழி விரும்புபு செல்லும் பொருளும் போகமும் புகழும் போல” என்கிறது பெருங்கதை. சீவகசிந்தாமணி, “விழுப்பொருள் பரவை ஞாலம் நோற்பவர்க்குரியவாகும்”  என்று தவத்தின் பயனைக் கூறுகிறது. கம்பன்பாடலோ வள்ளுவரை அடியொட்டி, “ வேண்டின வேண்டினர்க் களிக்கும் மெய்த்தவம்” என்கிறது. இலக்கியங்கள் பலவற்றிலும் தவம் வேண்டியதைத் தருவதையும், அதை அறிவுடையோர் முயன்று ஆற்றுவர் என்பதையும் காணலாம்.

இன்றெனது குறள்:
விழைவதெய்தல் செய்தவத்தால் ஆகும் அதனால்
விழைக தவத்தை விரைந்து

vizhaivadheidhal seythavaththAl Agum adhanAl
vizhaiga thavaththai viraindhu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...