10th
January, 2013
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.
(குறள் 263: தவம் அதிகாரம்)
Transliteration:
onnArth theRalum uvandhArai
Akkalum
eNNin thavathAn varum
onnArth – enemies (those who are opposed to virtuous pursuits)
theRalum – destroying them
uvandhArai – those who desire pursuit of penance
Akkalum – elevate them in status in their life
eNNin – even by just thinking
thavathAn varum – is possible by power of penance.
This verse is about the power of penance. Penitents of power can ruin
the people that are enemies to or against, virtuous ways. Like wise the power of
penance can raise the stature of a person who desires it. Many a fallen
villains abound the puranic stories because of their acts against righteous and
virtuous ways. Similarly there are stories which describe the pardon granted to
people that have repented their follies. After all we have heard the story of
Thirisangu for whom sage Vishwamithra created a separate heaven.
This verse does not talk about ascetics in the sense of renounced
people. Such people have no anger, no
enmity nor friendship. Everyone is same in his or her eyes. They are such
elevated souls. But penitents are people that either are on the path of being
ascetics or in pursuit of some powers for them. The word use of “eNNin” is
because of the fact that nobody thinks of these things automatically. Also to
highlight the glory of “penance” he implies for the power of penance there is
no difference such as person of elevated status or inferior status.
“Power of peance can destroy
adversaries against it
Or keep in elevated stature those, desire its
pursuit”
தமிழிலே:
ஒன்னார்த் - பகைவரை (தம் அறத்திற்கு பகையாய் அழிவு செய்தாரை)
தெறலும் - கெடுத்தல், அழித்தல், செறல்
உவந்தாரை - தம்மை உவந்து விழைவோரை
ஆக்கலும் - உயர்ந்த நிலையில் வைத்தலும்
எண்ணின் - நினைந்தால்
தவத்தான் வரும் - தவ வலிமையாலே, அது கொண்டவர்க்கே வரும்.
இக்குறள் தவத்தின் வலிமையைப்பற்றியது. தவவலிமை கொண்டோர்
அதனால் தம் அறத்துக்கு கேடுவிளைவிக்கும் பகைவருக்கு அழிவை ஏற்படுத்த முடியும். தவவலிமயால்
தவறு செய்தவர்களுக்கு முனிவர்கள் சாபமிட்ட வரலாறுகள் புராணங்களில் ஏராளம். வருந்தி
மன்னிப்பு வேண்டியவர்களுக்கு அவர்களை மன்னிக்கவும் செய்து, உயர்ந்த நிலைக்கு கொண்டு
சென்ற தவவலிமையையாளர் வரலாறுகளும் ஏராளம். தன் தவவலியினானே திரிசங்குவுக்கென்று தனியாக
சுவர்கத்தையே விசுவாமித்திரர் ஏற்படுத்திய புராணக்கதை எல்லோருக்கும் தெரியும்.
இக்குறளில் துறந்தோர் என்னாது தவத்தோரை மட்டும் கூறியதன் காரணம், முற்றும் துறந்தோர் முனிய மாட்டார்.
அவர்களால் அழிவு செய்தவர்கள் கேடு உறுதலும், உவந்தார்க்கு ஆக்கம் அடைதலும் கிடையாது.
அது மிகவும் உயர்ந்த நிலை. எண்ணின் என்றது எதனால். பொதுவாக இவற்றைப்பற்றி எண்ணிப்பாராமை
இயல்பு என்பதால். பகைவர் பெரியோராயிருக்கலாம். உவப்போர் சிறியோராயிருக்கலாம். இருப்பினும்
தவத்தின் வலிமைக்கு முன்னர் அந்த வேற்றுமைகள் கிடையாது என்பதினால் தவத்தின் பெருமையின்
மேல் ஏற்றிச் சொல்லப்பட்டது.
கம்பராமாயண மந்திரப்படல பாடலொன்றில் கம்பன் இவ்வாறு கூறுகிறான்: “இழைத்த தீவினையையும்
கடக்க எண்ணுதல் தழைத்த பேரருளுடைத்
தவத்தினாகுமேல்”.
இன்றெனது குறள்:
அறப்பகை செற்று விழைந்தோர் உயர்த்தும்
சிறப்பு தவவலிமைக் கே
aRappagai seRRu vizhaindhOr
uyarththum
siRappu thavavalimaik kE aggrandizement
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam