26: (Penance - தவம்)
[The chapter on penance discusses the
definition of penance, nature of people that do penance, what comes out of it
etc,. Penance in short is to control the mind from not going in the path of
desire as dictated by the sensory organs of one’s own body. This is possible only if we concisouly choose
the righteous path of life and train our sensory organs systematically to shun
the desires. Austerities such as food restrictions, meditating towards the
source of higher knowledge without minding the heat of summer of the cold of winter
or any surroundings with one point focus should be practiced. Being
compassionate at heart towards other lives which includes shunning meat, are
essential to people of penance.]
7th
January, 2013
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு
(குறள் 260: தவம் அதிகாரம்)
Transliteration:
uRRanOi thOnRal uyirkkuRukaN
seyyAmai
aRRE thavaththiR kuru
By denying the self, nourishment of food, to control the organs and the
faculties they govern to drive us towards desires and to not intend or do harm
to other lives form basis of penance. This verse defines the grammar of
penance.
The phrase “uRRa nOi” has been interpreted as “harm caused by others to
self” by some commentators. That should be under the virtue of tolerance, not
in this chapter. Here vaLLuvar talks only about curbing the desires of our
bodily faculties and calls such desires as disease. To be rid of those,
practicing severe austerities is the first and foremost of the paths.
A poem in Sirupancha mUlam, says: Not harming other lives, and curbing
desires, anger, are collectively known as what penance is!
“Austerities of curbing desires,
and not causing harm
To other lives are attributes of
“penance” as a norm.”
உற்றநோய் - வருந்துன்பங்கள் (உண்ணா
நோன்பு முதலியவற்றால் உடல் வருந்தும்படி)
நோன்றல் - நோன்பிருத்தல்
உயிர்க்கு - எந்தவொரு உயிர்களுக்கும்
(உ)றுகண் - துன்பம்
செய்யாமை - செய்யாதிருத்தலும்
அற்றே - அல்லவோ
தவத்திற்கு - தவம் என்று சொல்வதற்கே
(உ)ரு - வடிவம் எனப்படுவது?
தன் உடலை உண்ணாமை முதலியவற்றால்
வருத்தி பொறிகளும் புலன்களும் அடங்க நோன்பிருத்தலும், பிற உயிர்களுக்கு எவ்வித துன்பமும்
செய்யாதிருத்தலும் அல்லவோ தவம் என்பதன் வடிவம்? தவம் என்ற சொல்லுக்கு இலக்கணமாக இக்குறள் சொல்லப்படுகிறது.
உற்ற நோய் என்பதற்கு சிலர், பிறரால் தரப்படும் துன்பங்கள்
என்றும் பொருள் செய்துள்ளனர். மெய்ப்புலன் விழையும் பொறிகள் சார்ந்த இன்பங்களையே நோய்
என்று கொள்வதே சரி. அந்நோய்களிலிருந்து விடுபட நோன்பிருத்தலே தவத்தின் முதலும், இன்றியமையாததுமான
வழி.
சிறுபஞ்சமூலப்பாடல் (கி.வா.ஜ
ஆராய்ச்சிப் பதிப்பு) ஒன்று தவம் என்பதற்கான விளக்கமாகப் இப்பாடலைச் சொல்கிறது.
உயிர் நோய் செய்யாமை, உறு
நோய் மறத்தல்,
செயிர் நோய் பிறர்கண் செய்யாமை,
செயிர் நோய்
விழைவு, வெகுளி, இவை விடுவான்
ஆயின்,-
இழவு அன்று, இனிது தவம்.
இதன் பொருள்: பிற
உயிர்கட்குத் துன்பஞ் செய்யாமை முதலியன மேற்கொண்டு விழைவு வெகுளி முதலியவற்றை விட்டுவிடுவானாயின்,
அவன் செய்யுந் தவம் இனிமையுடையதே யாகும்.
இன்றெனது குறள்:
தன்துன்பம்
தாங்கின்னா தாராமை மற்றுயிர்க்
கன்றோ
தவத்தின் வடிவு?
Thanthunbam thAngiyinnA thArAmai
maRRuyirk
KanRO thavaththin vaDivu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam