ஜனவரி 07, 2013

குறளின் குரல் - 271


8th January, 2013

தவமும் தவமுடையார்க் காகு மவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.
                   (குறள் 261:  தவம் அதிகாரம்)

Transliteration:
Thavamum thavamuDaiyArk kAgu mavamadhanai
ahdhilAr mERkkOl vadhu

Thavamum – Even for somebody to try and do penance
thavamuDaiyArk(ku) – Either because he/she had the blessing of doing penance of had the good attributes towards that kind of refinement in life
Agum – only those can do
Avam – futile effort it is
Adhanai – the penance
ahdhilAr – those who neither had the good fortune of doing penance in previous births nor had the refinement in life to blessed in subsequent birth.
mERkkOlvadhu – to try and do penance.

To accept the thought expressed in this verse completely is difficult. According to this verse, only those who had done penance in their previous births or had developed the good attributes or traits would be able to do penance in this birth. For others, it is a futile effort.

Though it is a generally understood thought that the current birth is a gift or curse based on the deeds of previous births, only words that give ways to accomplish a stature to do penance would be encouraging people to be treading good path. After all human tendency is not to see or hear any deterrant for their efforts. If there is no reward in the current birth itself, most would not even do good deeds.

In Periapuranam, the saint poet sEkkizhAr says that NAgA, the father of KaNNappan, got his gift of penance as a son in KaNNappan in this birth, but was in the job of killing, due to his birth in hunter class. Such a verse gives a contradicting picture that even the penance in the previous birth does not guarantee the ability to do penance in the current birth, for someone.

Understanding the mass psychology one would give ways to accomplish something in this birth, instead of deterring them from even trying, which is what vaLLuvar has done in this verse.

Penance possible only for penitents of previous life
For others,even to attempt is futile and a vain strife”

தமிழிலே:
தவமும் - தவம் கூட
தவமுடையார்க்கு - முற்பிறப்பில் தவம் செய்ததனாலோ அல்லது செய்தற்குரிய பண்பு நலன்களைப் பெற்றதாலோ
கு(ம்) - அவர்களால் மட்டும்தான் இயலும்
அவம் - பயனில் முயற்சியும், கேடுமாம்
தனை - அத் தவத்தை
அஃதிலார் மேற்கொள்வது - முற்பிறப்பில் தவமோ அதற்குரிய பண்பு நலன்களோ பெறதாவர்கள் மேற்கொள்வது.

இக்குறளின் கருத்தை முற்றிலுமாக ஏற்றுக்கொள்வது கடினம். இக்குறளின் படி, முற்பிறப்பினில் தவம்செய்தவருக்கோ அல்லது செய்யத்தக்க குணநலன்களைப் பெற்றவருக்கோ மட்டுமே இப்பிறப்பில் தவம் செய்யக்கிடைக்கும். மற்றவர்கள் அதை மேற்கொள்வது பயனில்லாத வீண்முயற்சியாம்.

முற்பிறப்பின் வினைகளின் விளைவே இப்பிறப்பின் நடப்பெல்லாம் என்பது பொதுக்கருத்தானாலும், இப்பிறப்பிலும் ஒருவர் ஒழுக்கத்தையும் அறவழிகளையும் கடைபிடித்தால் அவர்களுக்கும் தவவாழ்க்கை வேண்டின் கிடைக்கும் என்றலே மக்களை நல்வழிப்படுத்த ஊக்குவிப்பதாகும்.  

பெரியபுராணத்தில் சேக்கிழார் கண்ணப்ப நாயனாரின் தந்தை நாகனைப் பற்றிக் கூறும்போது, அவன் முற்பிறப்பில் தவம் செய்ததனால்  கண்ணப்பனை மகனாகப் பெற்றானாயினும் அவன் பிறந்த பிறப்பால்  மிருகங்களைக் கொலைசெய்யும் குற்றத்தையே தன்னுடைய குல ஆசாரமாகக் கொண்டு வாழ்ந்து, கொலையாகிய கொடுமையை தன்னுடைய குணமாகக் கொண்டு வாழ்கிறான் என்கிறார்.

“பெற்றியாற் றவமுன் செய்தா னாயினும் பிறப்பின் சார்பாற்
குற்றமே குணமா வாழ்வான்; கொடுமையே தலைநின்றுள்ளான்;”

முற்பிறப்பில் செய்த தவம் நல்ல மகவை மட்டுமே ஈந்தது என்றும், இப்பிறப்பில் குலம் சார்ந்தே தொழிலும் வாழ்வும் அமைந்தது என்கிறார். இவ்வாறு குலம் சார்ந்து குற்றங்கள் செய்வோர்க்கு பின்வரும் பிறவிகளில் உய்வதற்கு என்ன வழி? இப்பிறப்பிலேயே மீண்டு வருவதற்கு என்ன வழி?

மக்களின் மனம் சார்ந்த உளவியல் அறிந்தவர்கள், இப்பிறப்பிலேயே தவம் அடைவதற்கான வழிகளைச் சொல்லவேண்டுமே அன்றி, முற்பிறப்பைக் காட்டி தவம் செய்ய முற்படுவது பயனற்றது என்பது ஒப்புக்கொள்ளும்படியான ஒன்றல்ல.

பரிபாடல் வரியும் இக்குறளின் கருத்தையொட்டி இவ்வாறு கூறுகின்றது. “முன்முறை செய்தவத்தின் இம்முறை இயைந்தேம்”.

இன்றெனது குறள்:
முன்தவத்தோர்க் கேதவம் இப்பிறப்பில் மற்றோர்க்கு
இன்றியும் வீண்பயனு மாம்

munthavaththOrk kEthavam ippiRappil maRROrkku
inRriyum vInpayanu mAm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...