ஜனவரி 06, 2013

குறளின் குரல் - 269


6th January, 2013

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
               (குறள் 259: புலால்மறுத்தல் அதிகாரம்)

Transliteration:
kollAn pulAlai maRuththAnaik kaikkUppi
ellA uyirum thozhum

kollAn – Those who don’t kill other lives (even for others to eat meat)
pulAlai - meat
maRuththAnaik – devoid of eating that (meat)
kaikkUppi – woth both hands, held together
ellA uyirum – all lives will
thozhum – worship with reverence and in adulation

One who does not kill for others to eat meat and will refuse to eat meat will be worshipped with both hands clasped, with adulation and reverence by all the living beings of this world. Based on the strong terms of this chapter urging to refuse eating meat, people have conjured vaLLuvar to be of Jain orientation.

This concluding verse of this chapter puts the concept of not killing for others to eat and not eating meat – both in highlight to stress the importance of not eating meat.

“A person that does not kill and will refuse meat consumption,
The world will hold hands together and worship with venration”

கொல்லான் - பிற உயிர்களைக் கொல்லாதவன்
புலாலை - இறைச்சியை
மறுத்தானைக்  - உண்ண மறுப்பவனை
கைகூப்பி - இருகைகளையும் கூப்பி
எல்லா உயிருந் - உலகில் வாழும் எல்லா உயிர்களும்
தொழும் - வணங்கித் தொழும்

பிறர் உண்ணுதலுக்காக உயிர்களைக் கொல்லாதவனையும், தானும் புலால் உண்ணலை மறுக்கிறவனையும், இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களுமே, இருகரத்தையும் கூப்பித் தொழும் என்கிறது இக்குறள். இவ்வதிக்காரத்தின் குறள் கருத்துக்களின் வலிமையைக் காரணங்காட்டி, வள்ளுவரை சமண மதத்தினராகச் சொல்வோருண்டு.

இவ்வதிகாரத்தின் நிறைவுக் குறளான இக்குறளில், புலால் மறுத்தல், மற்றும் புலால் உண்டாகக் காரணமான செயலைச் செய்யாமை இவ்விரண்டின் உயர்வையும் சொல்லி, அவர்களை உலகின் உயிர்களெல்லாம் எவ்வாறு வழுத்தும் என்று சொல்லி நிறைவு செய்கிறார்.

இன்றெனது குறள்:
கொல்லலும், ஊனுணலும் கொள்ளாரை இவ்வுல
கெல்லாமே  ஏற்றிவணங் கும்

kollalum, uNuNalum koLLArai ivvula
kellAmE ERRivaNan gum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...