5th
January, 2013
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
(குறள் 259: புலால்மறுத்தல் அதிகாரம்)
Transliteration:
Avisorindh
dhAyiram vETTalin onRan
Uyirseguth
thuNNAmai nanRu
Avisorindh(u) - Better
than droping oblations to the sacrificial fire
Ayiram – (and doing) a thousand
vETTalin - sacrifices
onRan – A life’s
Uyirseguthth(u) – killing it (life) for meat and
uNNAmai – not eating
nanRu – is good
Purposeless offerings in terms of ghee and other
material things in a sacrificial fire and do such sacrifices, thousands of them
is of no use compared to not eating meat by killing another life, however
inferior tha life is. That’s the only way and high path to reach Godhead – A
simple thought espoused in this verse.
Parimelazhagar in his
commentary says that the usage of Sacrificial fire is bigger than ordinary
resolve to not kill other life forms to eat meat. Suggests that by doing the
smaller thing there is an easy way to salvation.
“More than of thousands of oblations in sacrificial fire
Better not to eat
meat by killing a life, a sinful desire”
தமிழிலே:
அவிசொரிந்(து) - நெய் உள்ளிட்ட வேள்வித்தீயில் இடக்கூடிய
அவிசை நெருப்பிலிட்ட்உ
ஆயிரம் - ஆயிரமாய்
வேட்டலின் - வேள்விகள் வளர்த்தலின்
ஒன்றன் - ஒரு உயிரின்
உயிர்செகுத்து - உயிர்மையைக் கொன்று (புலாலுக்காய்)
(உ)ண்ணாமை - அந்த புலாலை உண்ணாதிருத்தல்
நன்று - நல்லதாம்.
வெற்று விரதங்களாலும் இறைவழிபாடுகளிலும் ஈடுப்பட்டு, ஆயிரமாய்
வேள்விகள் செய்து, அதில் நெய் முதலான பலவற்றை அவிசு எனப்படும் அர்ப்பணிப்பாகக் கொடுத்தலைவிட
ஒரு உயிரைக்கொன்று அதன் இறைச்சியை உண்ணாமை புண்ணியத்தைத் தரும் என்பதே இக்குறளின் கருத்து. கொல்லாமையே உயரிய அறம், அதுவே இறைப்பொருளை அடையும் வழி
என்பதை உணர்த்துகிற குறளிது.
பரிமேலழகர், வேள்விகள் என்பது அளவில் பெரியவை; ஆனால் கொல்லாமையாகிய
விரதம் அளவில் சிறியது, இருந்தாலும் இதுவே உயர்ந்தது, இறைப்பொருளை அடைய என்று உணரும்படி
உரைசெய்துள்ளார்.
இன்றெனது குறள்:
வேள்விபல யாத்தலின்
நன்றாம் உயிர்களைக்
மாள்வித்து ஊனுண்ணா மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam