4th
January, 2013
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
(குறள் 258: புலால்மறுத்தல்அதிகாரம்)
Transliteration:
seyirin
thalaipirindha kATchiyAr uNNAr
uyirin
thalaipirindha Un
seyirin - blemish
thalaipirindha – removed
kATchiyAr –knowledgeable person
uNNAr – will not eat
uyirin – a life
thalaipirindha – removed (by killing)
Un – meat.
The word “seyirin” used in this verse means “flawless sharp intellect”
as per ParimElazhagar. ParidhiyAr has
meant this to be “unclean” and KALingar as “sin”. Regardless of how we take it,
they all point to deficiency of human in some form or other. The verse says:
The persons of sharp and blemish free intellect will not kill another life to
eat that. It is like eating the corpse.
vaLLuvar has given two important subtle points here. First, he kindles
the ego of a person and says only people of flawful intellect will eat by
killing. Secondly, he creates disgust by saying; it is equivalent to eating a
corpse. We can see his keenness to avert people from eating meat by saying the
evil of meat eating in many ways.
But we have several counters for such forceful arguments. When I was
writing the alternate verse for this, and sharing it with my mother, she said,
“pasi vandhiDa paththum paRandhu pOm”. (When hunger strikes, all the ten will
fly away) and people will not even think about good or bad. What are these ten
things that will leave a person to let him go to such a lowly state? Self-respect,
good family, education,helping others, intellect, benovelence, stature, good occupation,
effort, and even love towards good woman partner, are these ten aspects of a
persons life that he should not lose.
Truly, if these things leave a person, would eating meat is going to be
viewed a sin by such persons? Thought to ponder.
“Persons
of flawless and sharp intellect
Will
not kill a life to eat the corpse of that”
தமிழிலே:
செயிரின் - குற்றத்தினை
தலைப்பிரிந்த - நீங்கிய
காட்சியார் - அறிவினை உடையவர்
உண்ணார் - உண்ணமாட்டார்
உயிரின் - ஓர் உயிரைக்
தலைப்பிரிந்த - நீங்கிய (கொன்று நீக்கப்பட்ட)
ஊன் - புலாலை
இக்குறளில் பயனாகியிருக்கும் சொல்லான “செயிரின்” என்பதற்கு
“(அறிவு) மயக்கமாகிய குற்றம்” என்று பொருள் செய்துள்ளார் பரிமேலழகர். பரிதியார், அசுத்தம்
எனவும், காளிங்கர் பாவம் எனவும் பொருள் கொண்டுள்ளனர். எவ்வாறு கொண்டாலும் அவை குறையானவையே.
குறள் கூறும் கருத்து இதுதான் குற்றமில்லாத, தெளிந்த அறிவுடையவர், ஓருயிரைக் கொன்று
கிடைக்கும் ஊனை உண்ணமாட்டார். அவ்வாறு உண்ணுவது ஒரு பிணத்தை தின்பதற்கு ஒப்பாகும் என்றும்
சொல்லுகிறார்.
இரண்டு செய்திகளை மிகவும் நுட்பமாகப் புகுத்திவிடுகிறார்
வள்ளுவர். ஒன்று கொன்று தின்பவர் அறிவு மயக்கத்திலிருப்பவர் என்பது.இரண்டாவது கொன்று
தின்பவர்கள், பிணத்தைத் தின்கிறார்கள் என்பது. முதலில் சொன்னது தன்மானத்தைத் தூண்டுவதாகவவும்,
இரண்டாவது அருவருப்பை உண்டுபண்ணுவதாகவும் உள்ளது. எப்படியெல்லாம் சொல்லி புலால் உண்ணலைத்
தவிர்க்கச் செய்யலாம் என்று வள்ளுவர் சிந்தித்திருப்பது தெளிவாகிறது.
ஆனால் நாம்தான் எல்லாவற்றுக்கும் ஒரு மாற்றமைதி வைத்திருக்கிறோமே!
இந்தக்குறளைப்பற்றி என் தாயாரிடம் நான் எழுதிக்கொண்ட்ஏ பேசும்போது, அவர்கள் சொன்னது
இதுதான்! “ஆமாம்! பசி வந்திட பத்தும் பறந்துபோம்” என்றும் சொல்லியிருக்கிறார்கள்! ஆனால்
பசிநோய் வரின், மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை, தானம்,
தவம், உயர்வு, தொழில், முயற்சி, தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய மங்கையர்மேல்
ஆசை கொள்ளுதல் ஆகிய பத்தும் ஓடிப்போம்! இதில் புலால் உண்ணலைச் சொல்லவில்லையானாலும்,
இவையெல்லாம் பறந்து போனவர்க்கு, புலால் உண்ணல் மட்டும் என்ன விதிவிலக்கா!
இன்றெனது குறள்:
குற்றமற்ற கூர்த்த மதியினார் கொள்ளாரூண்
செற்றோர் உயிரதன் ஊன்
kuRRamaRRa kUrththa madhiyinAr koLLARUN
seRROr
uyiradhan Un
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam