ஜனவரி 02, 2013

குறளின் குரல் - 266


3rd January, 2013

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.
               (குறள் 257: புலால்மறுத்தல்அதிகாரம்)

Transliteration:
uNNAmai vENDum pulAal piRithonRan
puNNadhu uNarvArp peRin

uNNAmai vENDum – Should not eat
pulAal - meat
piRithonRan puNNadhu – After all it is like a wound on a body (disgusting)
uNarvArp peRin – if that’s realized

In this verse, vaLLuvar depicts meat eating as a digusting act by comparing to a disgusting thought. One must definitely avoid eating meat if they realize how disgusting it is as it tatamount to eating a raw wound on a body. It gives as much disgust. To say it in the strongest possible terms, and to make a lasting impression of disgust about meat eating, he has used a truly disgusting act.

The moment one hears the word “pulAl”, a raw wound should appear in our vision and imagination of eating that wound should come to mind.That will set the utmost disgust in us about eating meat.

Some people advocate killing for eating as nature’s law and argue that it has been so designed by the omniscient God. They cite examples of small fish eaten by big fishes, and weaker animals killed for food by bigger animals and say it is the food cycle design of God, justifying the act of killing for food. They would also ask, after all humans did not know agriculture until they evolved and they were only eating meat for a long time. Yes, vegetarianism may be a later thought; but as part of evolving, dressless man became eventually fashionable to wear dresses. After all, as the world formed and became the breeding ground for different life forms, before humans evoled either due to Darwinian theory or in other ways, there were fruit bearing trees and other forms of vegetation.  Strong and big elephants and milk giving cows have stayed vegetarian instinctly by birth. So to advocate killing citing what is convenient to them is futile.  This verse  is one of the best forceful verses of vaLLuvar to condemn the meat eating practice, invoking disgust in people.

“One must not eat meat if only they understand
 It is as disgusting as eating the sickeing wound”

தமிழிலே:

உண்ணாமை வேண்டும் - புசிக்கக்கூடாது
புலாஅல் - இறைச்சி, மாமிசம்
பிறிதொன்றன் புண்ணது - மாமிசம் மற்றொரு உடலில் உள்ள புண் போன்றது (அருவருப்பானது)
உணர்வார்ப் பெறின் - இதை உணர்ந்து கொண்டால்.

வள்ளுவர் இக்குறளில், புலால் உண்ணலை ஒரு அருவருக்கத்தக்க செயலாக உருவகிக்கிறார்.புலால் உண்ணலை ஒருவர் தவிர்க்கவேண்டும்; ஏன் எனில் அது ஒரு உடம்பின்கண் உள்ள புண்ணை உண்ணுதலுக்குச் சமம். அது எந்த அளவுக்கு அருவருப்பைத் தருவதோ அந்த அளவுக்கு அருவருப்பானது புலால் உண்ணுதல் என்கிறார் வள்ளுவர். இதை தன்னுடைய புலால் மறுத்தல் கொள்கையினை பிறர் மனதில் எப்படியாவது ஊன்ற செய்யவேண்டுமென்கிற தீவிரத்தில் சொல்லப்பட்டதாகக் கொள்ளவேண்டும்.  

புலால் என்ற சொல்லைக் கேட்டாலே, புண்ணும், அது புரையோடிப் போனது அகக்காட்சிக்கு வந்து அருவருப்பு மேலிடுமல்லவா? அப்படியாவது தவிர்க்கமாட்டோமா என்கிற எண்ணமே இக்குறளுக்குக்காரணம். அறநெறிச்சாரப் பாடலொன்று புலாலை புண்ணுக்கொப்பாகச் சொல்கிறது. “தம்புண் கழுவி மருந்திடுவர் தாம்பிறிதின் செம்புண் வறுத்த வறைதின்பர்”

சிலர் இயற்கையின் நியதியென வாதிட்டு, இறைவனை சாட்சிக்கு அழைத்து, சிறுமீனைப் பெருமீன் விழுங்குவதையும், வலிய மிருகங்கள் வலிகுன்றிய மிருகங்களை கொன்றுண்பதையும் சுட்டிக்காட்டி, மிருகங்களைக் கொன்றுண்பதை நியாயப்படுத்துவர். இது உணவுச்சுழற்சி விதி என்பர். உணவைப் பயிரிட அறிவதற்குமுன் வேட்டையாடி மிருகங்களைத்தானே உண்டு வாழ்ந்தனர் என்பர். ஆடையில்லாமல் பிறந்த மனிதன், ஆறாம் அறிவினால் பரிணாம வளர்ச்சியடைந்து, நாகரீகம் அடைந்து ஆடை அணிந்தார்போலத்தான் இதுவும். தவிரவும், உலகம் பிறந்து உயிர்கள் பிறந்தவுடனே, மரங்களும், செடிகளும், கொடிகளும், காய்களும், கனிகளும் உண்டாகிவிட்டன. யானைபோன்ற பெரிய மிருகங்களும், பசுபோன்றவையும் இலைகளையும் தழைகளையும், புல்லையும் உண்டு வளரவில்லையா? வாய் இருக்கிறதென்று வாதிடுவோர், இதை சிந்திக்கவேண்டும். வள்ளுவர் அவர்களுக்கெல்லாம் அறிவிலுரைக்க வேண்டுமென்று இவ்வாறு கூறியுள்ளது மிகவும் பாராட்டி வியக்கத்தக்கது.

இன்றெனது குறள்:
மற்றோர் உயிரினது புண்ணுண்ணல் ஒப்பாகும்
செற்றோர் உயிரினூனுண் ணல்

maRROr uyirinadhu puNNuNal oppAgum
seRROr uyirinUnuN Nal

2 கருத்துகள்:

  1. பெயரில்லா5:11:00 AM

    are you a vegetarian?
    If yes, was it by birth or after you read thriukkural?

    பதிலளிநீக்கு
  2. I am a vegetarian; It was the choice of our family since my birth, though I know some of my cousins try out all kinds of food; But I can tell you this; I have raised two daughters in the USA, who have considerable peer pressure. They went the other way, one is a staunch vegetarian and other one is a Vegan :)

    பதிலளிநீக்கு

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...