டிசம்பர் 25, 2012

குறளின் குரல் - 258

26th December, 2012

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
               (குறள் 249: அருளுடமை அதிகாரம்)

Transliteration:
theruLAdhAn meypporuL kanDaRRAl thErin
aruLadhAn seyyum aRam

theruLAdhAn - unwise
meypporuL – the true knowledge and essence of life
kanDaRR(u)Al – found and attained (as if) – (Al is the
thErin – if you ponder over that (this word is to be added to the end of kuraL)
aruLadhAn – One who does not have kindness towards other lives
seyyum aRam – doing the virtuous deeds.

To hear and know persons that have no compassion or kindness in their heart for other lives, are doing virtuous deeds is like, saying that people that have no discerning knowledge have attained the wisdom and essence of True and higher knowledge. Both are pseudo and have no real significance.

Unkind hearts being virtuous may an outwardly act for cheap publicity and ultimate person gain, not to help the deserving ones.  A lot of people are well read and bookish in their knowledge, without internalizing the true essence of higher knowledCge, the wisdom to understand the higher self. What use is it to attain such knowledge?

“To say the unwise has the higher knowledge, wisdom of truth with clarity
 Is to say, unkind and non compassionate does virtuous deeds of charity

தெருளாதான் - அறிவில் தெளிவு இல்லாதாவர்
மெய்ப்பொருள் - உயர் அறிவாம் நூலோர் வகுத்த வழிகளை பற்றி
கண்டற்றால் - கண்டு அடைதல் என்பது
தேரின் - ஆராய்ந்தால் (அறம் என்னும் முடிவுக்குப்பின் சேர்க்கவேண்டியது)
அருளாதான் - பிற உயிர்களிடத்தில் அருள் இல்லாதான்
செய்யும் அறம் - அறச்செயல்களைச் செய்கிறார் என்பதற்குச் சமம்

பிற உயிர்களிடத்தில் அருள் நெஞ்சமில்லாவர்கள் அறச்செயல்கள் செய்கிறார்கள் என்பது, தெளிந்த அறிவு இல்லாதவர்கள் நூலோர் வகுத்த மெய்பொருள் தெளிந்தார்கள் என்பது போலாகும். சிலர் பெரிய அறிவினை ஏட்டளவில் பெற்றிருப்பர், ஆனால் அவற்றை உள்ளார்ந்து உணர்ந்திரார். அத்தகைய அறிவு ஏட்டுச்சுரைக்காய் போன்றதாகும்.  நெஞ்சிலே ஈரமும், ஏனைய உயிர்களிடத்து அன்பொடு அருளும் கொள்ளாதவர்கள் பிறர் மெச்ச, வெளிப்பூச்சாக அறமென்ற பெயரிலே செய்வது போன்றதே அது. வள்ளலார் சுவாமிகள் சொன்னது போல, “வாடியபயிரைக் கண்டபோதெல்லா வாடினேன்” என்னும் அன்புடன் அருள் சுரக்கும் நெஞ்சமில்லாதோர் அடையும் அறிவின் பயன்தான் என்ன?

இன்றெனது குறள்:
தெளிவிலார் காணாத மெய்பொருளாம் போல
அளியிலார்செய் அன்பில் அறம்
(அளி - அருள்; அன்பில் - அன்பு + இல்)

theLivilAr kANAdha meypporuLam pOla
aLiyilArsei anbil aRam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...