25th December, 2012
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.
(குறள்
248: அருளுடமை
அதிகாரம்)
Transliteration:
poruLaRRAr pUppar orukAl aruLaRRAr
aRRArmaR RAdhal aridhu
poruLaRRAr - Those
who don’t have material wealth
pUppar orukAl – may blossom later with wealth again
aruLaRRAr – Those who don’t have kindness or compassion
aRRAr – are doomed for ever
maRRAdhal – to become kind and compassionate
aridhu – is difficult
Due to ill fate, or
misfortune, some people may lose their material wealth. But their life may
blossom again and they may regain their lost wealth. But the unkind people are
doomed. It is because being unkind and not compassionate is considered a sin.
Since vaLLuvar has used the word “aridhu”,
he himself has suggested that there may be a recourse, even for unkind people, if
they change themselves; their sin may be annuled by remedial course action over
a period of time. It is difficult, but not impossible.
“For who have lost their
wealth, blossom can be again
For unkind, it is doom, difficult to change
and regain”
பொருளற்றார் - செல்வம் இல்லாதவர்
பூப்பர் ஒருகால் - பின்னொரு காலத்தில் செல்வராய் மலருவர் (அழகான சொல்லாட்சி)
அருளற்றார் - அருள், கருணை இல்லாதவர்
அற்றார் - அழிந்தவரே
மற்றாதல் - மற்று+ ஆதல் - பின்னர் அருள் உள்ளவராக ஆகிக்கொள்ளலாம் என்பது
அரிது - மிகவும் கடினம்
ஊழின் வலியாலோ, அல்லது செய்தொழில் முடக்கத்தினாலோ ஒருவர் வறியராகக்கூடும். அவ்வறுமை
மாறி பின்பு அவர்கள் வாழ்வு மீண்டும் மலர்ந்து, அவர்கள் செல்வராய் ஆகக்கூடும். ஆனால்
அருள் உள்ளம் இல்லாதவர்கள் அழிந்தவரே. இதுவும் அருளின்மை பாவம் என்பதனால் என்பது பரிமேலழகர்
உரை. அவர்கள் அவ்வழிவில் இருந்து மீளுவது கடினம்.
வள்ளுவர் இங்கு “அரிது” என்றே சொல்லியுள்ளதால், அவ்வாறு அழிந்தாலும், அவர்களும்
முயன்று தம்மை மாற்றிக்கொண்டால், பாவம் கரைந்து அவர்களும் எப்போதாவது உய்யலாம் என்று
கொள்ளலாம்.
இன்றும் இரண்டு குறள்கள் நாள். முதல் குறளில்
சொல்லாட்சி சிறப்பாக வந்தாலும், பிரித்து பொருள் கொள்ளவேண்டியிருப்பதால், இரண்டாவது
குறளை எழுத நேர்ந்தது.
இன்றெனது குறள்(கள்):
செல்வம் செறிவழிந்தும் சேருமே சேராது
செல்வத்தின் சீரரருட் சீர்
selvam seRivazhindhum sErumE
sErAdhu
selvaththin sIraruT sIr
இழந்தவர் ஈட்டலாம் செல்வம் - அருளை
இழந்திடின் ஈட்டல் அரிது
izhandhavr ITTalAm selvam –
aruLai
izhandhiDin ITTal aridhu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam