24th December, 2012
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
(குறள் 247: அருளுடமை அதிகாரம்)
Transliteration:
aruLillArkku avvulagam illai poruLilArkku
ivvulagam illAgi yAngu
aruLillArkku – For people unkind
avvulagam illai – the heavens will not open the door
poruLilArkku – For people of no wealth (all wealth included
here)
ivvulagam – life on this earth, while they live
illAgiAngu – will not be there or it is as worse as that
(like it is for unkind in heavens)
Here is
another verse that is used as a quotable verse by many! Those who are unkind
and not compassionate towards others, after their passing away will not be
welcome by heavens, similar to how the world will not be a happy living place
for those who don’t have weath. Without wealth the life is wasted on this
earth.
What is
alluded here as wealth? Is it just material wealth? It cannot be so. Just material wealth can not
make anyone happy. It is the collective wealth of good family, education and
hence knowledge, good children, material wealth, fame and fortune. By using the word “poruL illArkku” he must
mean a “without a meaningful life”
But all
quotes and old poetical references say is as “material wealth” only. The most popular one is “Auvayyar’s”, “illAna
illALum vEnDAL” (even the wife will shun a poor man). There are several verses in Tamil poetical
works of nAlaDiyAr, Jeevaka ChinthAmaNi, ThevAram and even in ThirukkuraL
conveying a similar idea.
“For unkind, heavens have no place, are shut
As
earth is for people of no wealth, havenots”
அருளில்லார்க்கு - கருணையில்லா நெஞ்சினருக்கு
அவ்வுலகம் இல்லை - வானோர் உலகமென்று சொல்லப்படுலகிற “வீடு”, “சுவர்க்கம்” என்பதில்லை
பொருளில்லார்க்கு - செல்வமில்லாதவர்களுக்கு
(எல்லா செல்வங்களுக்கும் ஆகிவந்தது)
இவ்வுலகம் - இப்புவிமீது
இல்லாகியாங்கு - வாழ்க்கை இல்லை அதுபோலே.
மிகவும் மேற்கோளாகப் பயனாகிற
குறள் இது. குறளின் கருத்தாகச் சொல்லப்படுவது: அருள் நோக்கு, அதாவது கருணையில்லாவதற்கு,
அவர்கள் மறைந்தபிறகு வானோரகம் எனப்படும் வீட்டுப்பேறு (சுவர்க்கம்) இல்லை; வையகத்தில்
வாழும்போது, பொருள் செல்வம் இல்லையென்றால், வாழ்க்கையே வீணாகும்.
வையத்தில் வாழும்போது பொருள்
செல்வம் என்று சொல்லப்பட்டாலும், அப்பொருளும் வெறும் பணமும் அதைச் சார்ந்த வாழ்க்கை
வசதிகள் மட்டுமில்லை. இப்புவி வாழ்வும், எல்லா செல்வங்களும் ஒருவரிடம் நிறைந்திருந்தால்
மட்டுமே வாழ்வாகும். கல்விச் செல்வம், நல்லகுடும்பம், மக்கட் செல்வம், வாழ்வசதிகளுக்கான
செல்வம், புகழ்செல்வம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய “பொருள் பொதிந்த வாழ்வு” என்பதைத்தான் “பொருள் இல்லார்க்கு” என்று வள்ளுவர் குறிப்பதாகக் கொள்ளவேண்டும். வெறும்
பொருள், அருள் என்கிற எதுகைக்காகமட்டும் வள்ளுவர் இக்குறளைப் புனையவில்லை
ஆனால் மேற்கோள் வழக்கில்
பொருள்செல்வம் என்பது, பணம் சார்ந்ததாகவே சொல்லப்படுவதை இன்றைய வழக்கிலும், பழம்பாடல்களிலும்
கூட காணலாம்.
குறுந்தொகைப்பாடல் ஒன்று,
“இல்லோன் இன்பம் காமுற்றாங்கு” என்கிறது.
நாலடியார் பாடல் (281), “ஒத்த குடிப்பிறந்தார்க்
கண்ணும் ஒன்றில்லாதார் செத்த பிணத்திற்கடை”! அப்பர் சுவாமிகள் கூட, “மாடு தானத்தில்லெனின் மானுடர் பாடுதான் செல்வாரில்லை”
என்று வேடிக்கையாகவோ, அல்லது வேதனையுடனோ கூறுவார். “இல்லானை இல்லாளும் வேண்டாள், மற்று
ஈன்றெடுத்த தாய்வேண்டாள், செல்லாது அவன்வாய் சொல்” என்பது “நல்வழி”யில் ஔவை வாக்கு.
ஆனால் வள்ளுவரே கூட பொருள்செய்வகை அதிகாரத்தில், “இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும்
செய்வர் சிறப்பு” என்று கூறுகிறார். சீவக சிந்தாமணிப்பாடல்
ஒன்று, “எட்டானும் பத்தானும் இல்லாதார்க்கிவ்வுலகில் இன்பமேபோல் ஒட்டாவே கண்டீர்” என்று
கூறுவதும் பணவசதி சார்ந்த வளப்பத்தைப் பற்றிதான்.
இன்றெனது குறள்:
அருளிலார்க்கு வானுலகில் வாழ்வும் - புவியில்
பொருளிலார்க்கு வாழ்வும் இலை
aruLilArkku vAnulagil vAzhvum- puviyil
poruLilArkku vAzvum ilai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam