23rd December, 2012
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
(குறள்
246: அருளுடமை
அதிகாரம்)
Transliteration:
poruLnIngip pochchAndAr enbar aruLnIngi
allavai seidhozhugu vAr
poruLnIngip – Devoid of virtuous demeanor
pochchAndAr – and forgetting what is right
enbar – are called so by great people (for being as described
about)
aruLnIngi – If is devoid of kindness and neglect it
allavai – doing harmful and unkind acts
seidhozhuguvAr – doing for others as their life’s mission
பொருள்நீங்கிப் - நல்ல அறவழி ஒழுகுதலை கைவிட்டு
பொச்சாந்தார் - (தாம் துன்புறுவதை ) மறந்தவர்
என்பர் - என்று கூறுவர் நல்லோர்கள் (யாரை?
மேலே படிக்கவும்)
அருள்நீங்கி - மற்றவர்களிடல் கருணை அற்று
அல்லவை - கொடுஞ்செயல்களை அவர்மாட்டு
செய்தொழுகுவார் - செய்வதை தன்வாழ்வின்
தலைக்கடனாகச் செய்கின்றவர்
எளிய, எல்லோரும் உணர்திருக்கிற கருத்துதான் இக்குறள் சொல்லும் கருத்து. மற்றவர்களிடம்
கருணையற்று கொடுஞ்செயல்களை அவர்மாட்டு
செய்பவர்களை, நல்ல அறவழிகளிலே வாழ்வதை கைவிட்டு, அதனால் தாமே துன்புறுவதையும்
மறந்தவர்கள் என்பர் நல்லோர்கள். இதில் “தாமே துன்புறுவதை” என்பது உள்ளுரையாகச் மறந்தாருக்குச்
சொல்லப்பட்டது
துன்பங்களாவன பிறவித்துன்பங்களாம். அவை தம்மைப்பற்றியும், பிற உயிர்களைப்பற்றியும்,
தெய்வத்தைப் பற்றியும் மூவகையான் வருமென ஏற்கனவே பரிமேலழகர் முதல் அதிகாரத்தின் குறள்
எண் நான்கிற்கான உரையில் கூறியிருப்பார். இவற்றை வடநூலார் “தாபத்ரயம்” என்பர். அவை
ஆதியாத்மிகம், ஆதிபௌதிகம் மற்றும் ஆதிதெய்விகம் எனப்படும். பின்னாளில் இசைப்பாடல்களில்
“தாபத்ரய வெயில்” என்று இவற்றை தகிக்கும் வெயில் சூட்டுக்கு இணையாக இசையாசிரியர்கள்
கூட எழுதியிருக்கிறார்கள்.
This verse is yet another easily understood thought. Those who are not
kind to others and do evil deeds towards them are known as people that have
forsaken the virtuous ways and have forgotten that they are the ones who will
suffer the sorrowful consequences because of that. Though the word “pochchAndhAr” means those who have “forgotten”, implied meaning says, what
is that they have forgotten – the consequences.
The sorrowful consequences are of three types, and have been mentioned
in the 4th verse of the very frist chapter. Parimelazagar says that
erudite form North have classified these in three different categories viz,.
“AdhiyAthmikam”, “Adhibaudhikam” and “Adhidhaivikam”.
“Those that forsake kindness and
do harm and evil deeds to others
Are known to forgot the sufferings that will come
to them together”
(இன்றும் இரண்டு குறள்களை எழுதவேண்டியிருந்தது.
மூலக்குறள் சொல்வதை தெளிவுபடுத்த எனக்கும் தெளிவு தேவையாயிருந்தது. முதலில் எழுதிய
குறள் சொல்வது அதே கருத்தாயிருந்தாலும், இரண்டாவது குறள் எழுதிய பின்புதான் மனம் நிறைவு
அடைந்தது)
இன்றெனது குறள்(கள்):
அருள்மறந்து அல்லவை செய்தார்
அறந்தான்
தருபொருள் தானுமிழந் தார்.
aruLmaRandhu allavai
seydhAr aRandhAn
tharuporuL thAnumizhan
dhAr
அல்லவை செய்வார் அருளிழந்து ஆன்றோர்சொல்
நல்லறங்கள் தாம்மறந் தோர்
allavai seyvAr
aruLizhandhu AnROrsol
nallaRangaL thAmmaRan
dhOr
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam