22nd December, 2012
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.
(குறள்
245: அருளுடமை
அதிகாரம்)
Transliteration:
Allal aruLALvArkku illai vaLivazhangum
mallanmA njAlang kari
Allal - Dificulties
aruL ALvArkku – those who are kind to others
illai – none
vaLivazhangumn – the gift of air (that it gives)
mallal - powerful
mA njAlang – big earth
kari – is witness
The air circulation of this huge world, gives
strength of life to all living beings. This itself is a proof that people of
kind heart will not face any difficulties or pains associated.
Superficially said, we may wonder what the
connection is between these two seemingly unrelated things. Another example of
where commentators of this great work have miserably failed to bring the
essence and have simply written based on how the verse reads.
Another verse of kuraL has a key to it. “nallAr
oruvar uLarEl avar poruTTu ellOrkkum peyyum mazhai” is that key. Even if there
is a single good soul out there, that itself becomes the reason for rains to
benefit everyone – the verse says. Such is the truth of kindness.
For life to sustain in this world, even if
only a few kind hearts are there, the world will have the life force of air for
everyone to breath and live under its roof. VaLLalAr swamigaL would say, “vADiya
payiraik kaNDapOdhellAm vADinEn”. Such a great disposition of even being
kind and compassionate to a crop that is withering away! Why would it not rain
or the earth be filled with air all of us to breathe with such souls?
A well known, rhyme to make babies sleep says
thus: “ karuNai oLiyE saindhADu”. The point here is even as a baby our a
culture has taught has kindness and when such kindness exists in our minds even
for a fraction of second, then the sustenance of the world would be guaranteed.
“The proof, that Kind hearts will not have the difficulties to pain
is in the life force of air for
the world to breathe as good as rain”
தமிழிலே:
அல்லல் - துன்பங்கள்
அருள் ஆள்வார்க்கு - பிறரிடத்தில்
அருள் உடையவர்களுக்கு
இல்லை - கிடையாது
வளிவழங்கும் - காற்றானது நமக்கு அதனுடைய
இயங்குதல்மூலம் அளிக்கும்
மல்லல் - வலிமையுடன் (அது வீசுவதன் மூலம், நம்முடைய உயிர்மையும், வலிமையும்
அளித்தலை)
மா ஞாலங் - இப்பெரிய உலகத்தில் வாழ்வார்
கரி - சான்று
காற்றானது இயங்கி இப்பெரிய உலகில் உள்ள உயிர்களை வாழவைக்கும் வலிமையை தருவதே,
அருளோடு இருப்பவர்களுக்கு துன்பங்கள் கிடையாது என்பதற்கு சான்று.
மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், பிறரிடம் அருளோடு இருப்பவர்கள் துன்பம் அடையாமல்
இருப்பதற்கும், உலகில் காற்று இயங்குவதற்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும். இக்குறளுக்கும்,
அனைத்து உரையாசிரியர்களும், காரண காரியங்களைச் சொல்லாமல் குறளை எப்படி படிக்கிறோமோ
அவ்வாறே உரை எழுதியுள்ளார்கள். விளங்கச் சொல்லாத வெற்று உரைகளே அவை! “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும்
பெய்யும் மழை” என்ற குறளின் கருத்தையொட்டித்தான் இங்கும் பொருள் கொள்ளவேண்டும்.
நெஞ்சில் ஈரமும், மாநிலத்துப் பிற உயிர்களிடத்தில்
பெருங்கருணை கொண்டவர்கள் சிலராவது இருக்கையிலே, அவர்களும், அவர்களால் எல்லோருமே, உயிர்வாழ
முதற்காரணியாய் இருக்கிற காற்று இருந்து இயங்கிக்கொண்டிருக்கிறது, என்றே நாம் உள்ளுரைப்
பொருளைக் கொள்ளவேண்டும்
வள்ளலார் போன்ற தவசீலர்களின் உள்ளங்களில் பெருக்கெடுத்து
ஓடிய கருணை அவர்கள் பாடல்களிலே நமக்கு தெரியவருகிறது. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்றார்
வள்ளலார் பெருமான். பயிருக்கும் உயிர் உண்டு, அது வாடவும் காணப்பொறுக்காத மனம் வள்ளலாருக்கு
இருந்திருக்கிறது.
எல்லோருக்கும் தெரிந்த குழந்தைகளைத் தாலாட்டும் தொட்டில் பாடலில், வரும் கீழ்கண்ட
வரிகளைப் பார்த்தால், நம்மவர்கள் கருணையென்பதை குழந்தைகளுக்கும் சொல்லியே வளர்த்துள்ளதும்
தெரியவரும். “கற்கண்டுக் கட்டியே சாய்ந்தாடு!
கருணை ஒளியே சாய்ந்தாடு!”. குழந்தையை கருணை ஒளி,
வளி என்பதற்காகமட்டும் சொல்லவில்லை. கருணையென்பதை நாமும் கொண்டாடுகிறோம், அப்படி ஒன்று
இருப்பதை குழந்தைப் பருவத்திலேயே சொல்லிக்கொடுக்கிறோம் என்பதற்காகவே இவ்வரிகள்.
இன்றும் இரண்டு குறள்கள். இதே
கருத்தை சொல்ல.
இன்றெனது குறள்(கள்):
காற்று இயங்குலகம் சான்றாம்
அருளாளர்
ஆற்றிடார் துன்பமென்ப
தற்கு
kARRum iyangulagan
sAnRAm aruLALar
ARRidAr thunbamen
badhaRku
உலகுயிர்ப்ப வீசுகாற்றே
சான்றரு ளாளர்
இலங்கிட துன்பமி லாது
ulaguyirppa vIsukARRE sAnRaru LALar
ilangiDa thunbami lAdhu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam