17th December, 2012
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.
(குறள் 240: புகழ் அதிகாரம்)
Transliteration:
vasaiyozhiya vAzhvArE vAzhvAr isayozhiya
vAzhvArE vAzhA dhavar.
Vasai yozhiya – Without blame
vAzhvArE vAzhvAr – those who live such,
are the ones who truly live a life
isay ozhiya – Without reputation or renown
vAzhvArE – those who live such (without renown)
vAzhAdhavar – they are not considered or counted to
be living (a life of merit)
As we have seen in earlier chapters, vaLLuvar has
some similar ways of talking about any subject. Within a subject, he would
attempt tp emphasize the point in two different ways sometimes. One would be,
“If you do this, you will get this good, otherwise, you will get only that
bad”; another way would be, “Only when you are not like that, it is good, but
if you are devoid of this good, then it is bad”. He has used the second method in this last
verse of this chapter.
Here he says, those who live blame free are the
ones who are considered living. If somebody loses their renown, then they are
equivalent to being dead. The reason he has probably said it this way is this:
Everyone wants to live their life and the only way to do so is to be blame free
– this is a normal way. Dealth is end of life and that nobody desires, though
eventually inevitable. It is even worse
to be called a living dead. He says, if someone loses their renown, reputation,
they are equivalent to dead. It is a figurative way of emphasizing a good and
differentiating the proper and improper living.
“Blame free ones the ones, whose living are considered
Those who lose their renown are equivalent to being dead”
வசையொழிய - பழியில்லாமல்
வாழ்வாரே வாழ்வார் - வாழ்கின்றவரே வாழ்வு என்பதன் பொருளுணர்ந்து வாழ்பவர்
இசையொழிய - புகழ் இல்லாது, அவ்வழி
செல்லாதொழிந்து
வாழ்வாரே - வாழ்தல் என்ற
பெயரில் உலவுபவர்கள் (அதாவது நடைப்பிணமாக)
வாழாதவர் - உண்மையில் வாழ்க்கையை
உணர்ந்து வாழாதாவர்கள்
முன்னரே பார்த்துள்ளபடி,
இதை செய்பவர்க்கே இன்ன நல்லது கிடைக்கும், செய்யாதவர்க்கு அது கிடைக்காது என்று வள்ளுவர்
சொல்லுவார். அதே அதிகாரத்தில் மறுபடியும் இதை செய்யாமால் இருப்பவருக்கே இன்னது கிடைக்கும்;
செய்பவருக்கு கிடைக்காது என்று வேறு விதமாகவும் கூறுவார்.
எதோடு வாழ்தல்
என்னாமல் எது ஒழிந்து வாழ்தல் நல்லது என்று கூறும் குறள்.
இக்குறளில்,
புகழோடு வாழ்பவரே வாழ்பவர் என்னாமல், பழி ஒழிந்து வாழ்பவரே வாழ்பவர்கள், புகழ் ஒழிந்து
வாழ்பவர்கள் நடைப்பிணங்கள் என்று சொல்கிறார். இக்குறளின்மூலம் வாழ்தல் என்பது நடக்கவேண்டிய
நிகழ்வாதலால், அதுதான் சாதாரணமாக நடக்கவேண்டியது, அதற்கு பழியில்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்
என்று சொல்லி, கூடவே, புகழில்லாமல் வாழ்பவர்கள் இறந்தவர்களுக்குச் சமம் என்று கூறுகிறார்.
திருவாய்மொழிப் பாடல் “வாழ்வார் வாழ்வெய்தி ஞாலம் புகழவே”
என்னும். கம்பராமாயணப்பாடல் ஒன்றில்,”வழிகெட வரினும் தத்தம் வாழ்க்கை தேய்ந்திறினும்
மார்பம் கிழிபட அயில்வேல் வந்து கிழிப்பினும் சான்றோர் கேட்கும் மொழிகொடு வாழ்வதல்லால்,
முறைகெடப் புற நின்றார்க்குப் பழிபட வாழ்கிற்பாரும் பார்த்திபருளரோ பாவம்” என்பார்
கம்பர். நான் அமங்கலமாகச் சொல்லாது, அவர்கள் பழியுடனும், பாழாகவும் ஆவார்கள் என்று
சொல்லியுள்ளேன்.
இன்றெனது குறள்:
பழிகொளாப் பண்பே புகழுறுவார் பாங்கு
பழியுடன் பாழும் பிறர்க்கு
pazhikoLAp paNbE pugazhuRuvAr
pAngu
pazhiyuDan pAzhum
piRarkku
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam