21st December, 2012
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
(குறள்
244: அருளுடமை
அதிகாரம்)
Transliteration:
Mannuyir Ombi aruLALvArkku illenba
Thannuyir anjum vinai
Mannuyir – All life of this world
Ombi – One who protects them
aruL ALvArkku – with kindness
illenba – will not have
Thannuyir - for
his life
anjum – dreaded
vinai – sin
Theorems in mathematics
have corollaries. This verse in this chapter is such a corollary to the general
idea of being kind. Not an earth shaking fact, but a statement of wishful
thinking. What does it say? Those who are kind to other beings of the world
will not face any life threatening bad deeds in their life. The verse seems to
give the overall benefit of being kind- a known fact and a statement like –
“Truth Triumphs”
Is it cent percent
possible or irrefutable truth? Quite
questionable! When we witness the trials in some good people’s lives, we wonder
if the content of this verse is even laughable!
But the only way we can come to peace and terms with such sweeping
statements is that, perhaps they are the harvest of bad karma of previous
births or the Lord Supreme, the unseen God is testing us to bring the best in
us, just like gold is put in fire to make it purer.
The interpretation of
perpetuity of life is not attributed to individuals, but to the world. The
world has life forms always is what is implied by the word usage of “mannuyir”
“For those who are kind to the perpetual lives on this
earth
Will have no life
threating bad deeds to suffer in this birth”
தமிழிலே:
மன்னுயிர் - இவ்வுலக உயிர்களைப்
ஓம்பி - பேணி, அவர்களிடம்
அருளாள்வார்க்கு - கருணையோடு இருப்பவர்களுக்கு
இல்லென்ப - இல்லையெனலாம்
தன்னுயிர் - தம் உயிர்க்கு
அஞ்சும் - அஞ்சக்கூடிய
வினை - பழிகளைத் தரும் தீமைகள்
கணிதத் தேற்றங்களில் பின்னூட்டமாக சில இணைத் தேற்றங்களும்,
துணைத்தேற்றங்களும் இருக்கும். அதேபோன்ற குறள்தான் இதுவும். குறள் சொல்லும் கருத்து
இதுதான் - இவ்வுலக உயிர்களைப் பேணி, அவர்களிடம் கருணையோடு இருப்பவர்தம் உயிர்க்கு அஞ்சத்தக்க
தீவினைகள் இரா! அருளுடைமையின் பயனைக்கூறுவதாக
அமைந்துள்ள குறள். எல்லோருக்கும் தெரிந்திருக்க கூடிய உண்மைதான். வாய்மையே வெல்லும்
என்பது போன்ற வாக்கியம்தான் இது.
ஆனால் நடைமுறையில் இது நூறு சதவிகிதம் உண்மைதானா என்று சிந்தித்தால்,
அது கேள்விக்குரிய ஒன்று. நல்லவராயிருந்தும், சிலருடைய வாழ்வில் வரும் சோதனைகளைப் பார்த்தால்,
இக்குறளின் கருத்துகூட கேலிக்குரியதாகிவிடும். அத்தகைய சோதனைகளைப் பார்க்கும் போது,
அவற்றை சென்ற பிறவி வினைகளின் அறுவடை என்றோ, அல்லது, தீர்வுகளுக்குமுன் நம்மை இறைவன்
புடம் போடுகின்றான் என்றோதான் கொள்ளவேண்டும்.
உயிர்களுக்கு நிலைபேறா என்னும் கேள்விக்கு, உலகில்,
உயிர்கள் என்பது ஒரு நிலையான தத்துவம் என்பதையே “மன்னுயிர்” என்ற சொல் காட்டுகிறது.
இன்றெனது குறள்:
நிலைபேற் றுயிர்காத் தருள்வார்க்
கென்றும்
இலைவினை தம்முயிரஞ் ச
nilaipER RuyirkAth
tharuLvArk kenRum
ilaivinai thammuyiran ja
(சரியாக பிரித்து படிக்க, “நிலைபேற்று
உயிர் காத்தருள்வார்க்கு என்றும் இலைவினை தம்முயிர் அஞ்ச” என்று படிக்கவும். வெண்பா
சீர் அமைப்புக்காக மேலே கண்டவாறு படிக்கவும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam