20th December, 2012
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
(குறள்
243: அருளுடமை
அதிகாரம்)
Transliteration:
aruLseRndha nenjinArk killai iruLseRndha
innA ulagam pugal
aruL seRndha – Having kindness for others in
nenjinArkk(u) illai – those who have such kind heart will not have
iruL seRndha – the fearful darkness filled
innA ulagam – painful environment (also dubbed as hell by
some commentators)
pugal – and to go there (to hell)
This verse conveys a
very simple thought. Those who have kindness in heart will not goto the dark
and fearful hell. Here he does not say what will happen to persons who are not
kind; but declares that kind hearted will not go to hell.
Kind and compassionate
souls are sensitive to others pain and can not indulge in sinful or immoral
deeds against anyone, and are naturallay inclined to shying away from blame and
sin. Consequently they will not goto dark painful world of hell.
“Kind hearted won’t
be in
darkset hell filled of pain”
தமிழிலே:
அருள் சேர்ந்த - பிறரிடத்தில் கருணை
கொண்ட
நெஞ்சினார்க்(கு) - மனதுடையவர்க்கு
இல்லை - இராது
இருள் சேர்ந்த - இருள் சூழ்ந்து அஞ்சும்
படியான
இன்னா உலகம் - - துன்ப சூழலில்
(உலகமென்றாலும், ஒவ்வொருவரின் வாழ்வியல் சூழ்நிலை எனக்கொள்ளவேண்டும்) - நரகம் என்றும்
பொருள் கொள்ளலாம்
புகல் - புகுவது (“இருள் சேர்ந்த இன்னா உலகம்
புகல் இல்லை” என்று படிக்கவேண்டும்)
இந்த குறள் சொல்லும் கருத்து எளிமையானது. நெஞ்சிலே அருள் சுமந்தவர்க்கு, இருள்
சூழ்ந்து அஞ்சும்படியான நரகத்திற்கு செல்லும் நிலை இராது. அருளற்றவருக்கு எது உறும்
என்று சொல்லாமல், அருளார்ந்த நெஞ்சினர் நரகத்தின்கண் செல்லார் என்று சொல்லுகிறார்.
அருளுள்ளம் படைத்தவர் நெஞ்சில் ஈரமும் கனிவும் கொண்டோர் ஆதலில் பழிபாவங்களுக்கு
அஞ்சுவர். ஆதலின் அவர்கள் பாவச் செயல்களில் ஈடுபடாமையின், நரகத்தின்கட் படார்.
இன்றெனது குறள்:
இருளார்ந்த துன்ப உலகினை புக்கார்
அருளார்ந்த நெஞ்சுடை யார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam