19th December, 2012
நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.
(குறள்
242: அருளுடமை
அதிகாரம்)
Transliteration:
nallARRAn nADi aruLALga pallARRAl
thErinum ahdhE thuNai
nallARRAn – In good ways,
nADi – desire to
aruLALga – be compassionate and kind to others.
pallARRAl – In many ways
thErinum – even if one searches and researches to find
out (which is good way)
ahdhE – that alone is
thuNai – is a companion (for life past this earth)
The commentary
of Parimelazhagar is elaborate and done with deep insights for this verse. My commentary is also done along the same lines.
The phrase “pallARRAn thErinum” has been interpreted as, “Even if several
conflicting religious paths are explored, the only companion is kindness,
nothing else”. “ The phrase, “nallRRAn nADi aruL Alga” has been interpreted as
“ seek the good six ways, that show the kindness as the path to pursue and henc be kind”.
Parimelazhagar
calls them as “measures”. What are these measures? Perceptions through sensory
organs, that which is realized through symbolic representations or occurences, that
which are read from scriptures, similies that are cited, decisive directions
such as “if this is so, don’t do”, citing that which is not truth, there buy
making us realize the value of truth – are the six measures referred to here.
In short
the verse says thus: seek good path and be kind to others; Exploring in multiple different ways does
reveal there is none better than kindness towards others; and hence see only
that.
Whichever
way it is explored, kindness is the companion of life
Hence,
by proper means, seek it and be kind to souls of strife”
தமிழிலே:
நல்லாற்றான் - நல்+ஆற்றான் - நல்ல வழிகளாலே
நாடி - விரும்பி
அருளாள்க - பிறரிடத்தில் கருணையோடு
இருப்பீர்
பல்லாற்றால் - பல் + ஆற்றால் - பல
வழிகளிலே
தேரினும் - ஆய்ந்து பார்த்து அறிந்துகொண்டவருக்கும்
அஃதே - அதுவே
துணை - துணையாகும் (வாழ்ந்து முடிந்தபின்னர்)
இக்குறளுக்குக்கான பரிமேலழகர் உரை மிகவும் அழகாகவும் ஆழமாகவும் சொல்லப்பட்டுள்ளது.
அதனை ஒட்டியே இங்கும் கூறப்படுகிறது. “பல்லாற்றான் தேரினும்” என்பதற்கு, “ஒன்றையொன்று ஒவ்வாத சமய நெறிகள் எல்லாவற்றானும்
ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே, பிறிது இல்லை”, என்று பரிமேலழகர் உரையெழுதியுள்ளார். “நல்லாற்றான்
நாடி அருள் ஆள்க” என்பதற்கு “நல்ல ஆறு வழிகளை நாடி அருள் உள்ளவராக ஆகுக’ என்று பொருள்
வருமாறு செய்துள்ளார்.
இவற்றை அளவைகள்
என்கிறார். இவ்வளவைகள் யாவை? பொறிகளால் காணும்
காட்சி (காணும் என்பது உணர்வு, நுகர்வு, கேட்டல் உள்ளிட்டது), குறிகளால் உணரும் அநுமானங்கள்,
ஆகமங்கள் காட்டும் வழிகள், ஒப்புக்காட்டப்படும் உவமைகள், இங்கனமாயின் கூடாது என்கிற
காரண காரிய விளக்கங்கள் (அருத்தாபத்தி எனப்படுவது), உண்மைக்கு மாறான இன்மைகளைக்காட்டி
உண்மையின் உயர்வை உணர்த்தல் எனப்படுவையே அளவைகள்.
இக்குறளால்
சொல்லப்படும் கருத்து இதுவே: நல்ல வழிகளாலே விரும்பி பிறரிடத்தில் கருணையோடு இருக்கவேண்டும்.
பல வழிகளிலே ஆய்ந்து பார்த்து அறிந்து கொண்டவருக்கும் வாழ்க்கை முடிந்தபின் வருந்துணையும்
கருணை மனத்தராக வாழ்ந்திருத்தல்தான்
இன்றும் இரண்டு குறள்கள் - ஒத்த கருத்தில்! முதல் குறள் எழுதியபின், நிறைவில்லாததால் இரண்டாவதையும் எழுதினேன்.
அதுவே எனக்கு பிடித்ததாகவும் இருக்கிறது
இன்றெனது குறள்(கள்):
எவ்வழியான் ஆய்ந்தும் அருளே
துணையதனால்
செவ்வழியால் நாடுவீர தை
evvazhiyAn ayndhum arulE thuNaiyadhanAl
sevvazhiyAl nADuvIra dhai
எவ்வழியான் ஆய்ந்தும் அருள்வழியே செவ்வழியாம்
அவ்வழியே ஆதலினால் நாடு
evvazhiyAn Ayndhum aruLvazhiyE sevvazhiyAm
avvaziyE AdhalinAl nADu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam